பிரிந்த மனைவி குடும்பம் நடத்த வருவாரா??-Misunderstanding wife can manage family ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Saturday, October 20, 2018

பிரிந்த மனைவி குடும்பம் நடத்த வருவாரா??-Misunderstanding wife can manage family

உச்சிஷ்ட மகா கணபதி போற்றி ...!!!


"இல்லற மல்லது நல்லற மன்று" என்றார் அவ்வையார்.

சொல்வேந்தர் அய்யா சுகி. சிவம் அவர்கள் குடும்பத்தை பற்றி தனது ஆணித்தரமான விளக்கத்தை இவ்வாறு கூறுவார்கள். காட்டு  மிராண்டிக் காலத்திலிருந்து கணினி யுகத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த உன்னத வார்ச்சியில் அவன் கண்ட ஒப்பற்ற நிறுவனம் குடும்பம் என்பது கூட்டம், கும்பல் என்பது குறைந்து, தனித்தனி மனிதனாகவும் பிரிந்துவிடாமல் குடும்பம் குடும்பமாக நாம் வாழ்வது உண்மையில் நமது நல் ஊழ்.

குடும்பம் என்ற உன்னத அமைப்பில் சில சில குறைபாடுகள் உள்ளன. கொஞ்சம் அடிமைத்தனம்(Exploitation), ஏறுக்கு மாறான துணையை சகித்துக் கொள்ள  வேண்டிய கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது.

எதில் தான் குறைகள் இல்லை. குடும்பம் என்ற நிறுவனத்தின் நோக்கம் நிகழ்கால நிம்மதி மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடு.

பிரச்னை இல்லாத குடும்பம் எங்கு உள்ளது...?

சென்ற வாரம் அன்பர் ஒருவர் அலைபேசியில் எம்மை தொடர்பு கொண்டார்.

சார், முகநூலில் "கர்ப்பத்தை காட்டிக்கொடுத்த ஆளும் கிரகங்கள்" என்ற தங்கள் பதிவை படித்தேன். நல்ல அனுபவத்தை பகிர்ந்திருந்தீர்கள். நன்றி என்று கூறிவிட்டு, தங்களிடம் ஜோதிட ஆலோசனை பெறவேண்டும் என்று கூறினார்.

அவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிவதாகவும், சில வருடங்களுக்கு முன்பு அவரது முதல் மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார், முதல் மனைவிக்கும் இவருக்கும்  பெண் குழந்தை உள்ளதாகவும், சில வருடங்கள் கழித்து, குழந்தையை கவனிக்க மறுமணம் செய்துகொண்டேன் என்று கூறி  தம்மை அறிமுகபடுத்தி கொண்டார்.

இது சம்பந்தமாக குடும்பத்தில் சில பிரச்சனைகள் நடந்துவிட்டது என்று கூறினார்.

சரி என்று கூறிவிட்டு, அவரிடம் பிறந்த விவரங்களை கேட்டேன். அவர் தன்னுடையதையும், அவருடைய மனைவியினுடையதையும் கொடுத்தார்.

இருவருக்கும் ஜாதகம் கணித்த போது, இவருக்கு 39 வயது, அவருடைய மனைவிக்கு 36 வயது என்பதை கவனித்தேன்.

பிறந்த நேரத்தில் சில நொடிகள் மாற்றம் செய்து துல்லிய படுத்தினேனன்.

ஆளும் கிரகங்களை, சந்திரனின் நிலையில் கவனிக்கும் போது களஸ்த்திர காரகன் சுக்கிரன்,  உப  அதிபதியாகவும்(SL) மற்றும் உப உப அதிபதியாகவும்(SSL) இரண்டு முறை வந்திருந்தார். ஆளும் கிரகங்களில் உப உப உப அதிபதியே(SSSL) மிகவும் வலிமையானவர். இதை நமது முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள்.

கணவரின் ஜாதகம் 

மனைவியின் ஜாதகம் 
சந்திரனின் நிலையில் உப உப உப அதிபதியாக வந்திருந்த புதன், ஜாதகரின் வாழ்க்கை துணை என்னும் 7ம் பாவ முனையின்  உப உப அதிபதியாக அமர்ந்திருந்தார்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கனவரின் ஜாதகத்தில், பாவ முனை அட்டவணையை நன்றாக கவனித்தீர்கள் என்றால் புதன், லக்கினம் மற்றும் களஸ்த்திர ஸ்தானத்தை மட்டுமே குறிகாட்டியாக அமர்ந்திருப்பார். ஆளும் கிரகங்களை உன்னிப்பாக கவனித்தாலே பலனில் பாதி அறிந்துவிடலாம்.

இப்போது நீங்களே சொல்லிவிடுவீர்கள் ஜாதகர் எதற்காக அழைத்திருப்பார் என்று...? ஆம்.. தனது மனைவியை பற்றிய கேள்விகளை கேப்பார் என்பதை வாசக அன்பர்கள் யூகித்துவிட்டீர்கள்... என்பதை எம்மால் உணர முடிகின்றது.

ஜாதகர் தொடர்ந்தார்...

சார், எனக்கும் என் மனைவிக்கும் சில மாதங்களுக்கு முன்பு ஒரே சண்டையா இருந்தது, சண்டை முற்றியதில் கொஞ்சம் கோவப்பட்டுட்டேன். கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க, போனவங்க  திரும்ப குடும்பம் நடத்த வருவாங்களா...? அவங்களை பல முறை சமாதானம் படுத்த முயன்றும்.. தோற்று போய் நம்பிக்கை இழந்து இருக்கின்றேன்.... என்று மிகவும் சோகத்துடன் கூறினார்.

அவர் குரலில் ஒரு தவிப்பு இருந்ததை உணர முடிந்தது...!

அதன் பிறகு,  இருவரது ஜாதகத்தையும் நன்கு அலசிய பிறகு, பிரச்னை நடந்த காலகட்டத்தை கவனித்தேன்.

ஜாதகருக்கு கடந்த 2018 ஏப்ரல் மாத இறுதியில் சந்திர திசை, புதன் புக்தி, சூரிய அந்தரம் மற்றும் சூட்சமம் நடந்து கொண்டு இருந்தது. தசையும் புத்தியும் ஜாதகருக்கு சாதகமாக இருந்தாலும் சூரிய அந்தரம் படும் மோசமாக இருந்தது.

சூரியன் 6,8ம் பாவத்தை முன் நிறுத்தி அந்தரத்தையும், சூட்சமத்தையும் சுமார் ஒரு மாதமாக காலம் நடத்தி கொண்டு இருந்திருக்கின்றார்.
பொதுவாக ஜாதகரின் வாழ்வில் 6,8,12ம் பாவங்கள் கூட்டணி அமைத்து தசாபுக்திகள்  நடந்தால், இந்த கால கட்டத்தில் ஜாதகர் மிகுந்த வலி வேதனையை, அவமானங்கள், துக்கம், துரோகம், துரதிஷ்ட்டம், எதிர்பார விபத்துக்கள், குடும்ப சச்சரவு, பிரிவுன்னு ஏகப்பட்ட கஷ்ட்டத்தை அடுக்கடுக்கா  அனுபவிப்பார்கள்.

குடும்பத்தில் கும்மி சத்தம் கேக்காமல் இருந்துவிடுமா??? 

ஜாதகரிடம் .. என்ன சார்.. ?? ஏதோ சண்டைனு சாதாரணமா சொல்லுறீங்க..?, உங்க பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும்ல போயிருக்கும்..? என்று கேட்டேன்...!!!

ஜாதகர் திகைத்து போய்.!. ஆமாங்க சார்.. "நீக்க சொல்வது உண்மைதான், என் மனைவி போலீசில்..  என் மீது புகார் கொடுத்தது உண்மை தான்.. !" என்று ஒப்பு கொண்டார்.

ஜோதிட ரீதியில் இதை எவ்வாறு அறிந்தேன் என்றால், அப்போதைய அந்தர நாதன் சூரியன் 6 மற்றும் 8ம் பாவத்தை மிக வலிமையாக நடத்தியதில் இந்த களேபரம் நிகழ்ந்துள்ளது. சூரியன் என்பதால் அரச தண்டனை, மேல் அதிகாரி விசாரணை,  வம்பு வழக்கு  போன்ற சூழ்நிலையை ஜாதகர் சந்தித்திருப்பார்.

ஆறாம் பாவம், 7ம் பாவத்தை செயல்படாமல் முடக்கி, 8ம் பாவத்தின் எதிர்மறை கொடுப்பினையை நிகழ்த்தியதால் ஜாதகருக்கு இந்த நிலை. இதனால் மனைவியிடம் மல்லுக்கட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் ஜாதகர் இருந்திருக்கின்றார்.

அவருடைய மனைவியின் ஜாதகத்தை பார்த்த போது, புத்தி நாதனாக சூரியன் 6, 10, 12ம் பாவங்களை, ஜெக ஜோதியாய் நடத்தி கொண்டு இருப்பதால் குடும்பத்தில் கும்மி சத்தம் கேக்காமல் இருந்துவிடுமா???   

பிரச்சனைக்கு காரணம்

ஜாதகரிடம், சார் உங்க மனைவி.. நீக்க சம்பாதிக்கின் பணத்தை... அவங்க கிட்டாதான் கொடுக்கணும், நான்தான் எல்லா முடிவையும் எடுப்பேன், தனி குடித்தனம் போயே ஆகணும், சதா காசு காசுன்னு நச்சரித்து பிரச்சனைகளை முன் நிறுத்தி சண்டை போட்டார்களா...? என்று கேட்டேன்.

ஆமாங்க சார், சண்டையை நேர்ல பார்த்த மாதிரியே சொல்றீங்கனு ஆச்சரியமாக கேட்டார்...!!!

அவர் மனைவியின் ஜாதக அமைப்பையும், தசாபுக்தியையும். பாத்தவுடன் பிரச்சனைகளை எளிமையாக கண்டு பிடித்துவிடலாம்.

சரி, இவர் மனைவியின் மற்ற கொடுப்பினையை ஆராய்ந்தால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துகொள்ளலாம் .

லக்ன பாவ முனை உபாதிபதி ராகு, குரு சாரத்தில், கேது உப நட்சத்திரத்தில் அமர்ந்து அவர்   3, 6, 12 தொடர்பு பெற்று லக்கினத்திற்கு அரை சுபராக உள்ளார். இந்த அமைப்பில் உள்ள ஜாதகர் தன்னை பற்றியான மிக பெரிய மதிப்பீட்டில் இருப்பார்.  மேலும் ராகு 10ம் பாவத்திற்கும் உபாதிபதியாக உள்ளதால் வறட்டு கவுரவம் மேலோங்கி இருக்கும்.

ஜாதகியின் குடும்ப வாழ்வு 

லக்ன பாவம், குடும்ப ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களஸ்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தனங்கள் நன்றாக இருந்தது. ஜாதகர் கவுர்வமாக குடும்பம் நடத்த கூடியவர்.

இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன், வார்பிறை சந்திரன் மற்றும் புதன் சுப பாவ தொடர்பை வைத்துள்ளதால், ஜாதகர் எக்காலத்திலும் நெறி தவறமாட்டார். சுய ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவார்.  மேலும் பொறுப்புடன் நடந்துகொள்வார்.

அவரது மனைவியின் குடும்ப ஸ்தானம் நன்றாக இருந்தது. 7ம் பாவத்தை செவ்வாய் உபாதிபதியாக ஆள்வதால், தாமத திருமணம்.

ஜாதகத்தில் சில கிரக தொடர்புகளால் சற்று கடினமாகவும், கண்டிப்புடன் செயல்படுவார். கணவர் மற்றும் சகாக்களிடம் சற்று விறைப்பாகவே நடந்து கொள்ளவார்.கால போக்கில் தன்னை மாற்றிகொள்வர்.

இவர் நீடித்த குடும்ப வாழ்வை நடத்தும் சாதக அம்சங்களை விதியிலும், மதியிலும்  வைத்திருப்பதால், ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கை சிறக்கும்.

பிரச்சனை தீரும் காலம் எப்போது? 

ஜாதகருக்கு நடப்பு சந்திர தசையில்,  புதன் புக்தி 26/10/2018இல் ஆரம்பிக்கின்றது. புதன் 3,5,7,9,11 பாவ முனைகளை முன்னிறுத்தி நடத்துகிறார். இது சாதகமான பாவ முனை தொடர்புகள், குடும்ப வாழ்வை திருப்தியாக நடத்த ஜாதகருக்கு யோகமாக புதன் அமைந்துள்ளார்.

அவரது மனைவியின் ஜாதகத்தில், நடப்பு தசநாதன் கேது(3,9)யும், புக்திநாதன்   சந்திரன் 3ம் பாவத்தையும்,  ஏற்று நடத்துவதால், ஜாதகரின் மனைவியும் குடும்பத்தில் இணைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்.

நடப்பு தசாபுக்தி இருவருக்கும் சாதகமான நிலையில் இருக்கு.

இவர் மனைவி, திரும்பவும் ஜாதகருடன் இணைந்து வாழ 100%  வாய்ப்புகள் உள்ளது.

ஆக இருவருக்கும் குடும்பம் நடத்த கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது.

மேற்கண்ட விவரத்தை ஜாதகருக்கு தெரிவித்தேன்.

ஜாதகரின் சில குண இயல்பு பண்புகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தங்கள் மனைவியின் குண நலன்களுக்கு ஏற்ப அனுசரித்து செல்லுங்கள் என்று கிரக ரீதியான விளக்கம் அளித்தபோது, சரி என்று ஏற்றுக்கொண்டார்.

மேலும் ஜாதகரிடம்,  வாரியார் சுவாமிகள், மிக அருமையாக, மனைவியின் பெருமையை கூறுவார்கள் என்று  "குடும்பத்தை சீரிய முறையில் நடத்தும் மனைவியைக் கணவனும் சீரிய முறையில் நடத்த வேண்டும். ஆண்கள் மனைவியை அவ்வளவு எளிதாக எண்ணிட முடியாது. கணவனுக்கு ஆயுள் வளர்வதும் மனைவியாலேயே; செல்வம் வளர்வதும் மனைவியாலேயே; புகழ் வருவதும் மனைவியாலேயே; இன்பம், கல்வி, திருப்தி, பக்தி, முத்தி முதலிய யாவும் கற்பின் மிக்க மனைவியாலேயே கிடைக்கின்றன." என்று இதை கூறும் போது அவரிடம் நல்ல மாற்றத்தை உணர முடிந்தது.

தற்போது உங்கள் இருவருக்கும்  குடும்பம் நடத்துவதற்கான நேரங்காலம் கூடிவிட்டது. இனி அனைத்தும் சுபமே.

உங்கள் மனைவியிடம் பேச தொடங்குங்கள் கண்டிப்பாக உங்களுக்கு சம்மதம் சொல்லுவார் என்று தைரியம் கூறினேன்.

வாழ்க்கை இருண்டு போய்விடுமோ என்று பயந்துகிட்டு இருந்தேன் சார்.. !

மனைவியை பிரிஞ்ச மனவேதனைல வாடிக்கிட்டு இருந்தேன்...!

நம்பிக்கை ஊட்டும்படி சாதகமான பதிலா சொல்லியிருக்கீங்க. ரொம்ப நன்றி சார்னு தெளிவான மனநிலையோடு கூறிவிட்டு  சந்தோஷமா போனை கட்பண்ணினார்.

இரண்டு நாள் கழித்து அவரே போனில் அழைத்தார்...

சார்...!!! என்னால நம்பவே முடில சார்..!  நீங்க சொன்ன மாதிரியே என் மனைவிக்கு போன் செய்தேன்... நிராகரிக்காம.. எந்த மறுப்பும் இல்லாம என்கிட்டே சந்தோசமா பேசினாங்க சார்... திரும்ப வந்து குடும்பம் நடத்துறேன்னு சம்மதம் சொல்லிட்டாங்கனு... அடக்க முடியாத சந்தோஷத்துல... ரொம்ப தெளிவா பேசினார்.

மனதிற்கு மகிழ்வாக இருந்தது...!!!

அவருக்கு எமது வாழ்த்துக்களை கூறி, கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.

எம்மை தொடர்பு கொண்டதற்கும் அவருக்கு நன்றி கூறினேன்.
நான் என்றதை நாம் என்றாக்கி, எனது என்பதை எமது என்று ஒருமையை பன்மையாக்கும் உத்திக்கு உயிர் கொடுப்பதே இல்லறம் ஆகும். முழமையான இன்பமே இல்லறத்தில்தான் முகிழ்கிறது. அதனால்தான், "இல்லற மல்லது நல்லற மன்று" என்று ஔவையார் கூறுவார்.
அந்த இல்லறத்தில் கனவன், மனைவி இருவரும் கூடி, சந்தோஷித்து வாழ்வில் பேரின்பம் பெற்று, பெரு வாழ்வு வாழ்வது எப்படி என்று "சிற்றின்ப சிகரங்கள்" நூலில் மிக அருமையாக, யதார்த்த உண்மைகளை விளக்கமாக அளித்து, மகிழ்ச்சியான வாழ்விற்கு வளமான கருத்துகளை வாரி இறைக்கின்றது.

இந்நூலை, சென்னையை தலைமையிடமாக கொண்ட "அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்" கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  வெளியிட்ட நாள்முதல் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகி, அனைவரும் விரும்பி படிக்கும் நூலாக, தன் விற்பனையில் தனி இடம் பிடித்துள்ளது.

நூல் ஆசிரியர் ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை அவர்கள், ஜோதிடத்தில் முதுகலை பட்டம் பெற்று, இத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். மேலும் எமது குருநாதர், சாரஜோதிட சக்ரவர்த்தி, நல்லாசிரியர் A. தேவராஜ் அவர்களின் சீடர்.

இந்நூல் ஆசிரியர், ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் பண்பாளர். அம்மை அப்பனின் திருநாமங்களை அனுதினமும் உச்சரித்து, சமய நெறிகளை வழுவாது கடைபிடிப்பவர்.

இந்நூலில் ஆசிரியர் உரைக்கும் காரண தத்துவங்கள், மிகசிறப்பான மொழிநடையில், இளம் தலைமுறைகள் எளிதில்  உணர்ந்துகொள்ளவும் மேலும் தற்கால வாழ்வியலுக்கு உகந்த கருத்துகளை, யதார்த்த வாழ்வியலுடன் இனைத்து, செயல்முறை விளக்கங்களை படம்பிடித் காட்டுவது போல் விளக்கியுள்ளார்.
குடும்ப வாழ்வில்,  கட்டில்லிளம் காளையர்களின், ஜாலக வித்தைகள் யாவையையும், ஒளிவு மறைவின்றி,  அனைவருக்கும் பயன்படும்விதத்தில், இலக்கிய நயனத்தோடும், சமய நெறியோடும், சார ஜோதிட விதிகளை உட்படுத்தியும், அறிவியல் ரீதீயன விளக்கம் அளிக்கும் பாங்கு மிக சிறப்பு.
படிப்பவர்களின் ஒவ்வொருவர் மனதிலும் நீங்கா நினைவுகளுடன், இந்நூலின் கருத்துக்கள் இல்லற வாழ்வில் இருபாலரும் சிறந்து விளங்க வாழிகாட்டி நூலாய் அமையும் என்றால் அது மிகையாகது.

 சிறப்பான  இந்நூலை, அனைவரும் தவறாது, வாங்கி படிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

இந்நூலை பெற விரும்புபவர்கள்... தொடர்புகொள்ள...
https://www.astrodevaraj.com

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634
Email-Jbm2k07@gmail.com
Recent Post: 

Read more popular posts.