உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!
எவ்வித படிப்பு தகுதியும் இல்லாமல் மக்கள் சக்தியால் தேர்ந்தெடுக்கபடும் பஞ்சாய்த்து கவுன்சிலர் முதல் நாட்டின் பிரதமர் மற்றும் ஜானாதிபதி வரை சுதந்திரமாக செயல்படும் அரசியல் அமைப்பை கொண்டது நம் தாய் திருநாடு. அரசு அதிகாரிகளை தன் கட்டுபாட்டில் இயக்கும் ராஜ பதவியாக MLA, MP, மந்திரி, முதல்அமைச்சர் போன்று அராசாட்சி பதவிகள் நீளுகின்றன.
இந்த மாதிரியான உயர்நிலை அரசு பதவி அமைய வேண்டும் என்றால் ஜாதகத்தில் அதற்கான யோகம் அமைய வேண்டும்.
"ஒருவரின் அரசியல் வாழ்க்கையில் நீண்ட பதவி, ஆட்சி, அதிகாரம், உயர்ந்த கௌரவம், மக்களின் ஆசி, தொண்டர்களின் பேராதரவு என ராஜயோகத்துடன் ஓகோவென்று அமைவதற்கும்;
ஒருவரின் அரசியல் வாழ்க்கை நீண்ட கால அரசியல் ஈடுபாடு இருந்தும், எவ்வித முன்னேற்றம் இன்றி, அரசியலில் முக்கியத்துவம் அற்று, சாதரண தொண்டனாகவே, எவ்வித முன்னேற்றமின்றி அமைவதற்கும்;
காரணம் அவரவரின் ஜாதக அமைப்பே."படைக்கும்போதே ஆண்டவன் அளந்து வைத்துதான் மனிதனை ஜீவிக்க வைக்கின்றான். அவரவர் செய்த முன்ஜென்ம கர்மவினைக்கேற்ப ராஜயோக பலன்களையும், அவயோக பலன்களையும் நவகிரகங்களின் ஊடே அனுபவிக்கின்றார்கள். இதை மீறி யாராலும் அணு அளவுகூட ஒருவரின் விதியை மாற்றி அமைக்க இயலாது.
ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?
இதை அறியாமல் ஆட்டம் போட்ட அரசியல் ஜாம்பாவான்களின் சரிவுகளை காலவரலாற்றில் அதிகம் காணலாம்.
சாதாரண நிலையில், எவ்வித அரசியல் பின்னனியோ அல்லது பண பலமோ இல்லாமல், அடிமட்டத்தில் இருந்து கிடு கிடுவென அதிகார பதவியில் நீண்ட நாள் கோலேச்சியவர்களின் ஜாதக அமைப்பை ஆராய்ந்தால், ராஜ வாழ்க்கைக்கான கிரக காரகங்கள், பாவ காரகங்கள் மற்றும் மதி என்னும் தசா புக்திகள் ஜாதகரின், அரசியல் வாழ்வில் வெற்றி நடைபோடும் யோக அமைப்பிற்கு சாதகமாக இருக்கும். இது அரிதிலும் அரிதாய் ஒரு சிலருக்கே அமைந்திருக்கும்.ஆனால் தனக்கு என்ன யோகநிலை இருக்கு என்று கிஞ்சிற்றும் அறியாமால் அரசியல் ஆர்வத்தில், பதவி மோகத்தில் அகல கால் பாய்ச்சலில் சுவடே இல்லாமல் மறைந்த அரசியல் தலைவர்கள் இவ் வையகத்தில் ஏராளம்.
சேர்த்து வைத்த அனைத்து சொத்துக்களையும் இழந்து, அவமானத்தில் உறவினர்களை பிரிந்து, தலைமறைவு வாழ்க்கையில் அவதிபடும் அரசியல் தலைவர்களின் சொல்லொண்ணா துயரநிலை யாவரும் அறிந்ததே.
ஒருவர் அரசியலில் சிறப்படைவதற்கு “சூரியன், சந்திரன், செவ்வாய், குரு மற்றும் புதன்” போன்ற கிரகங்கள் முக்கியத்துவம் வகிக்கிறது.
அரசியலுக்கு கிரகங்களின் அடிப்படை அமைப்பு
பணமே ஓடி வா / Paname Odi Vaa (Tamil Edition) |
அரசியல் என்றில்லை மற்ற எந்த துறைகளில் ஈடுபடுபவர்களுக்கும் சந்திரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் மக்கள் ஈர்ப்பு கொண்டவராக மாற வாய்ப்புகள் அதிகம்.
அரசாளும் ராஜயோகத்தை அளிக்கும் ஒளி கிரகமான சூரியன், அனைத்திற்கும் முதன்மையான அரச கிரகமாகும். பிறர் உயர்வாக மதிக்க கூடிய, எல்லோரையும் அதிகாரம் செலுத்தக்கூடிய தன்மையை அளிப்பவர் சூரிய பகவான் ஆவார்.
- அரசு கிரகம் சூரியன், ஒருவரின் ஜாதகத்தில் இரட்டைபடை பாவங்களில் வலுவான பாவமான, பதவி, அந்தஸ்த்தை அளிக்க கூடிய பத்தாம் பாவத்துடன் தொடர்புபெற்று சுப வலிமையுடன் திகழ்ந்தால் ஜாதகர் உயர்ந்த அரசு பதவிகளை பெறும் வாய்ப்புகள் அதிகம்.
- புதுமையான சிந்தனையும், அரசியல் சாணக்கியத்தையும், வித்தியாசமான அணுகுமுறைகளையும், புத்தி கூர்மையையும் ஒருங்கே அளிப்பவர் புதபகவான். அரசியல் கலை அறிவை வளமாக அளிக்க புதனின் ஆசி தேவை. புதன் சுப கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, சுப பாவ தொடர்பு பெறுவது அரசியல் தலைவர்களுக்கு மிக மிக முக்கியம்.
- ஆழ்ந்த புத்தி காரகன் என்று அழைக்கக்கூடிய பிரகஸ்பதி என்னும் குரு, நுண்ணிய புத்தி கூர்மை, நிதான தன்மை, ஆட்சி யோகம், ராஜயோக ஆசி தந்து, கௌரவமிக்க, மிகசிறந்த தலைவனாக விளங்க, குரு ஜாதகத்தில் சுபவலிமையுடன் இருப்பது அரசியல் தலைவர்களுக்கு அதி அவசியம்.
- மக்கள் நேசிக்கும் தலைவனாக விளங்கவும், தைரியத்துடனும், துணிச்சலாக விரைந்து செயல்பட, சகோதர காரகன் செவ்வாய், சாதகமான பாவங்களை தொடர்புகொண்டு நல்லாசி வழங்கிட வேண்டும்.
- அரசியல் என்பது ஒரு கலை. வசிகரிக்கும் கலைகளுக்கு தலையாய காரக கர்த்தர் சுக்கிரன். அரசியல் சார்ந்த தலைவனுக்கான லச்சனங்களை அளிப்பவர் குரு ஆவார். ஜாதகத்தில் குரு, சுக்கிரன் சுப தன்மையுடன், சாதகமான பாவங்களை தொடர்புகொள்வது கூடுதல் சிறப்பை அளிக்கும்.
- ஒரு அரசியல்வாதி எந்த தோல்வியும் இல்லாமல், தடைகளையும், சூழ்ச்சிகளையும், வஞ்சகர்களின் வலையில் சிக்காமல் நல்லாட்சி புரிந்திட நீதீ கிரகம் சனி, லக்னத்திற்கு 8,12ம் இடங்களை தொடர்புகொள்ளாமல், சுப தன்மையுடன் அமைவது அரசியல் வாழ்வில் நீடித்த யோகத்தை அளிக்கும்.
- சாயா கிரகமான ராகு, பிரமாண்டத்தை குறிப்பவர். கேது ஆழ்நிலை ஞானத்தை குறிப்பவர்கள். முக்கியமாக இவர்களின் சுப தொடர்பு நன்கு கவனிக்கபட வேண்டும்.
- ஒருவர் ஜாதகத்தில் அரசியலை குறிக்கும் பாவம், பூர்வ புண்ணியம் என்னும் ஐந்தாம் பாவம். ஐந்தாம் பாவம் மிக வலிமையுடன் பத்தாம் பாவத்தை தொடர்புகொள்ள வேண்டும். குறிப்பாக லக்னத்திற்கு பாக்கிய ஸ்தானம் என்னும் 9ம் பாவத்தை தொடர்புகொள்ள கூடாது.
- தன் பாவத்திற்கு 12ம் பாவமான சுக ஸ்தானம் என்னும் நான்கை தொடர்பு கொள்வதும் சில வகையில் இடஞ்சல் தான்.
- 8, 12ம் பாவ தொடர்பு அரசியல் வாழ்விற்கு எதிர்மறை விளைவை தரும். போராடி வெற்றி அடைய வைக்கும் அல்லது அரசியல் வாழ்வையே கெடுக்கும். மற்ற பாவங்களின் தொடார்பை பொருத்தும், நடப்பு தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் நன்மை.
- லக்ன பாவம் இயற்கை சுப கிரங்களான குரு, சுக்கிரன், புதன் போன்றவர்கள் உபாதிபதியாக அமைந்து, இவர்கள் அமர்ந்த நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரங்கள் 8,12ம் பாவ தொடர்பின்றி, மேலும் லக்ன பாவம் தொடர்பு கொண்ட பாவங்கள் 2,3,4,5,6,7,10,11 என்றால் அரசியலில் நல்ல ஆளுமையுடன் திகழ்வார்கள். மக்கள் போற்றும் தலைவர்கள் இவர்களே!
- ஜாதகருக்கு மக்கள் சக்தி என்னும் ஏழாம் பாவம் சாதகமான பாவங்களான 1,3,5,7,9,10,11 தொடர்பு மிக சிறந்த அமைப்பு. ஒரு அரசியல் தலைவருக்கு மிகவும் பிரதானமானது மக்கள் ஆதரவு. மேற்கண்ட அமைப்பு அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் அவசியம்.
- 7ம் பாவம் 11யை தொடர்புகொள்ளும் அரசியல் தலைவர்களுக்கு மக்கள் கூட்டம் பிரமாண்டமாக கூடும்.
- 8ம் பாவம் 10ம் பாவத்தை தொடர்புகொள்வது திடிர் பதவி யோகத்தை தந்துவிடும். 8ம் பாவம் தன் பாவத்தை தவிர மற்ற எந்த பாவத்தை தொடர்புகொண்டாலும் தொடர்புகொண்ட பாவங்களுக்கு ஏற்ப சுப/அசுப பலன்களை திடிர் யோகமா அளித்துவிடும். இது ஒரு நன்மையான அமைப்புதான்.
- இறைவனால் அளிக்ககூடிய அதிஷ்டம் ஜாதகருக்கு, ஒன்பதாம் பாவம் மூலமாக செயல்படும். இங்கு ஒன்பதாம் பாவம், கர்ம ஸ்தானம் என்னும் பாத்தாம் பாவத்தை தொடர்பு கொள்வது ஆட்சி பதவியில் எவ்வித சிரமமின்றி அமர்ந்துவிடலாம். மேலும் 9ம் பாவம் 1,3,5,7,9,11 தொடர்பு அரசியலுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- தலைமை பதவி, நிர்வாக திறன், திறம்பட அரசாளும் யோகத்தை அளிக்க கூடிய பத்தாம் பாவம், லக்னத்திற்கு 8,12ம் பாவங்களை தொடர்புகொள்ள கூடாது. மேலும் தன் பாவத்திற்கு 8,12ம் பாவங்களான 5,9ம் பாவங்களின் தொடர்பும் அரசு பதவிக்கு சாதகமற்ற அமைப்பு ஆகும். பெரும்பாலான அரசியல் தலைவர்களின் பதவிகளுக்கு வேட்டு வைக்கும் அமைப்பு இது தான். மேலும் இவர்களுக்கான முக்கியதுவத்தையும் இழக்க வைத்திடும், அரசியல் வாழ்விற்கு துர்பலன் விளையும் சூட்சகமான அசுப அமைப்பு.
- இந்த அமைப்புள்ள ஜாதகர்கள் அரசியலில் அடிமட்ட நிலையிலே இருப்பார்கள். உயர்வு ஏற்பட்டாலும் பதவியும் பொறுப்பும் நிலைக்காமல் அரசியலில் சரிவை சந்திப்பார்கள்.
- ஒரு அரசியல் தலைவருக்கு 10ம் பாவம் என்பது மிக மிக முக்கியமானது. கேந்திர ஸ்தானங்களிலே மிகவும் வலிமை வாய்ந்தது. 12 பாவங்களிலே 10ம் மிகவும் முக்கியமானது. ஒருவருக்கு 10ம் பாவம் சிறப்பாக அமைந்துவிட்டால் பதவி, கௌரவம், அந்தஸ்த்து, தலைமை பொறுப்பு போன்றவை தானாக தேடிவரும். அரசு பதவிக்கு பத்தாம் பாவம் 2,4,6,10 தொடர்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த அமைப்பு உள்ள அரசியல் தலைவர்கள் அசாத்திய திறமை வாய்ந்தவர்கள். கட்சியிலும், ஆட்சியிலும் உயர் பொருப்பில் இருப்பார்கள்.
- பத்தாம் பாவம் 8,12 தொடர்பு, போராடி வெற்றி அடைய வைக்கும் அல்லது அடைந்த வெற்றியை இழக்க வைக்கும். நேர் வழியில் கிடைத்த வெற்றியாக அமையாது.
- 5,9 பாவ தொடர்பு பதவியில் பொறுப்பற்ற தன்மையை தந்து பதவியை இழக்க வைத்துவிடும் அல்லது பதவியே கிடைக்காமல் போய்விடும்.
உதாரணமாக மாண்புமிகு முன்னால் முதல்வரும், தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கபட்ட, செல்வி. J.ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.
மாண்புமிகு. அம்மா அவர்கள் 24.02.1948 02:29:15 Pm, Melukote - Karnatakaவில் பிறந்தார்கள்.
மிதுன லக்னம், சிம்ம ராசி, மகம் 2ம் பாதம்.
கிரக தொடர்புகள்:
அரச கிரகம் சூரியன் 7ம் பாவத்திற்கு உபாதிபதியாக சதயம்(2) ராகு நட்சத்திரத்தில், சனி உப நட்சத்திரத்தில், சுக்ரனின் உப உப நட்சத்திரத்தில், கேது உப உப உப நட்சத்திரத்தில் அமர்ந்து தொடர்பு கொண்ட பாவங்கள் 3, 7,12 தொடர்பு அரசு தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரன் 2,10ம் பாவங்களுக்கு உபாதிபதியாகவும், குருவின் நட்சத்திரத்திலும், புதனின் உப நட்சத்திரத்தில் சுப அமைப்பில், 2,6,8,10ம் பாங்களை தொடர்புகொண்டு வலுவாக உள்ளது.
செவ்வாய் இரண்டாம் பாவத்தில், சிம்ம ராசியில் அமர்ந்து தொடர்புகொண்ட பாவங்கள் 1,5,11.
புதன் 8ம் வீட்டில் அமர்ந்து செவ்வாய் நட்சத்திரத்திரம், சுக்கிரன் உப நட்சத்திரத்தில் 1,11 தொடர்பை பெற்றுள்ளது.
குரு(6,9) கேது நட்சத்திரத்திரம், சுக்ரனின் உப நட்சத்திரத்தில் அமர்ந்து 1,5,9,11 தொடர்பை பெற்றுள்ளது.
சுக்கிரன் (1,11) புதன் நட்சத்திரத்திரம் சூரியன் உப நட்சத்திரத்தில் 1,7,11 பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது.
சனி(3,12) புதன் நட்சத்திரத்திரம், ராகு உப நட்சத்திரத்தில் 4,8,12 ம் பாவங்களை தொடர்புகொண்டுள்ளது.
ராகு(4,8) சுக்ரன் நட்சத்திரத்தில், புதன் உப நட்சத்திரத்தில் 8,11 தொடர்பை கொண்டுள்ளது.
கேது(5) குரு நட்சத்திரத்தில், புதன் உப நட்சத்திரத்தில் 6,8 தொடர்பை கொண்டுள்ளது.
பாவ தொடர்புகள்:
லக்ன பாவம்: எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் அதுபோல் ஜாதகத்தில் லக்ன பாவம் முதன்மையானது. அம்மா அவர்களின் ஜாதகத்தில் லக்ன பாவத்திற்கு சுக்ரன் 1,11 ம் பாவங்களுக்கு உபாதிபதியாக அமைந்து, புதன் நட்சத்திரத்திரம் சூரியன் உப நட்சத்திரத்தில் 1,7,11 பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது ஒரு சிறப்பான அமைப்பு. 1ம் பாவ தொடர்பு, நிலையான கௌரவத்தையும்; 7ம் பாவ தொடர்பு, பிரமாண்டமான மக்கள் தொடர்பையும்; 11ம் பாவ தொடர்பு எதிலும் வெற்றியை தரும்.
வாக்கு ஸ்தானம்(2): இரண்டாம் பாவம் சந்திரன் 2,10ம் பாவங்களுக்கு உபாதிபதியாகவும், குருவின் நட்சத்திரத்திலும், புதனின் உப நட்சத்திரத்தில் சுப அமைப்பில், 2,6,8,10ம் பாங்களை தொடர்புகொண்டு வலுவாக உள்ளது. இந்த அமைப்பு இரண்டாம் பாவத்திற்கு நன்மை அளிக்கும் அமைப்பு. கம்பீரமான பேச்சு, ஆளுமையான வாக்கு, பன்மொழி புலமை அனைத்தும் ஒருங்கே அமைந்ததால் மேடை பேச்சுகள், சட்டமன்ற விவாதங்கள், பொதுகுழு கூட்டங்கள் மற்றும் பத்திரிக்கை பேட்டிகளில் தூள்கிளப்பினார். வாக்கு ஸ்தானம் 8ம் பாவ தொடர்பினால் சில சமயங்களில் சிக்கலையும் சந்தித்தார்.
3ம் பாவம்: வீரிய, தைரிய, முயர்சி ஸ்தானம் என்னும் 3ம் பாவத்திற்கு, சனி(3,12) உபாதிபதியாகவும், அவர் புதன் நட்சத்திரத்திரம், ராகு உப நட்சத்திரத்தில் 4,8,12 ம் பாவங்களை தொடர்புகொண்டுள்ளது.
அம்மாவின் ஜாதகத்தில் சனி அசுபராகவே செயல்பட்டார். இருந்த போதிலும் நாடு போற்றும் பெண் அரசியல் தலைவர்களின் வரிசையில், துணிசலுக்கு பெயர் போனவர், இதற்கு காரணம் ராகு வின் உப நட்சத்திரத்தில் சனி நின்றது. இதை தான் கூறுவார்கள் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்று.
அம்மா அவர்கள் வாழ்வில் பல தடைகளை தாண்டி வெற்றியை அடைந்தார்கள். தடைகளை தந்து பல சோதனைகளை அனுபவிக்க முயற்சி ஸ்தானத்தின் 4,8,12ம் பாவ தொடர்பினால்.
பூர்வ புண்ணியம் என்னும் ஐந்தாம் பாவம் சுக்ரனின் வீடான துலாத்தில் அமைந்து, கேது(5) உப நட்சத்திரமாகவும், குரு நட்சத்திரத்தில், புதன் உப நட்சத்திரத்தில் 6,8ம் பாவ தொடர்பை கொண்டுள்ளது.
6ம் பாவ தொடர்பு அம்மா அவர்கள், கலை மற்றும் அரசியல் துறைகள் மூலமே தனது பணிகளை மிக சிறப்பாக செய்திட விதி கொடுப்பினை அமைந்துள்ளது. அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு சாதகமான அமைப்பு.
ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்று சொல்லகூடிய 6ம் பாவம், அம்மாவிற்கு யோகம் அளிக்ககூடிய குரு(6,9) உபாதிபதியாக அமைந்து, கேது நட்சத்திரத்திரம், சுக்ரனின் உப நட்சத்திரத்தில் அமர்ந்து 1,5,9,11 தொடர்பை பெற்றுள்ளது. கலைதுறை மற்றும் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த அமைப்பு. 6ம் பாவத்தின் 11ம் பாவ தொடர்பு அம்மா அவர்கள் மக்கள் பணியில், தன்னை முழுமையாக ஈடுபட வைத்து, பல தேர்தல்களில் வெற்றி வாகை சூட வைத்தது.
ஒருவர் ஜாதகத்தில், நிலையான பாவங்கள் என்று சொல்ல கூடிய 1,2,6,7,10 ஆகிய பாவங்கள், ஒருவர் நீடித்த நிலையில்,தான் ஈடுபட்ட துறையில் தொடர்ந்து நிலைத்திட வலிமையாக இருக்க வேண்டும். அரசியல் மற்றும் அரசு பதவியில் அமர்பவர்களுக்கு இது மிகவும் அவசியம்.அந்த வகையில், அம்மாவிற்கு யோகரான குரு மேற்கண்ட பாவங்களுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் சூட்சம வலுபெற்று அரசாளும் யோகத்தை அளித்துள்ளார்.
ஜாதகர் சந்திக்க கூடிய நபர், செய்யும் தொழிலை குறிப்பது 7ம் பாவம், அம்மாவின் ஜாதகத்தில் 7ம் பாவத்திற்கு உபாதிபதியாக அரச கிரகமான சூரியன் அமைந்ததால் அரசு சார்ந்த மக்கள் பணியாற்றும் மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் போன்ற ராஜ சம்பத்து உள்ளவர்களுடன் இணைந்து மக்கள் பணியாற்றும் அரும் பாக்கியத்தை பெற்றார்.
வியாபார வியூகங்கள் / Vyabara Vyugangal (Tamil Edition) |
அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பாக்கி ஸ்தானம் என்னும் 9ம் பாவம் நன்றாக அமைந்தால் தெய்வ அனுகிரகம் கிடைக்கும். அரசாட்சியை குறிக்ககூடிய ஒன்பதாம் பாவம் 8,12ம் பாவ தொடர்பின்றி இருப்பது நன்மை. அம்மாவின் ஜாதகத்தில் 9ம் பாவத்திற்கு குரு உபாதிபதியாக அமர்ந்து 1,5,9,11ம் பாவங்களை தொடர்புகொண்டது மிகவும் அதிஷ்டமான அமைப்பு. கடவுளின் பரிபூரண அருள் அரசாட்சிக்கு கிடைத்துள்ளது. அரசியல் ஆசை என்னும் 5ம் பாவ தொடர்பு நீடித்த அரசியல் வாழ்வை குரு அளித்துள்ளார்.
ஒரு மனிதனின் வெற்றியை குறிக்கும் பாவம் 11ம் பாவம். சுக்கிரன் உபாதிபதியாக 1,7,11ம் பாவ தொடர்பு அம்மாவிற்கு வெற்றிமேல் வெற்றியை சுக்கிரன் வாரிவழங்கினார்.
இதுவரை அரசியல் ஈடுபாட்டிற்கான விதி கொடுப்பினையை அம்மா அவர்களின் ஜாதகத்தில் பார்த்தோம். விதி வழி மதி செல்லும், மதி வழி மனிதன் செல்வான்.
விதி கொடுப்பினையை தங்கு தடையின்றி வாரி வழங்குவது மதி என்னும் தசை கொடுப்பினை.
அடுத்து வரும் கட்டுரையில் விரிவாக அலசுவோம்..
அரசியல் எனக்கு ஒத்துவருமா.. தலைவனாக்குமா தலையெழுத்து? - பாகம் 2
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634 Jbm2k07@gmail.com
Recent Post:
- தாம்பத்தியத்தில் யார் கில்லி?
- உறுமுவதற்கு இல்லை என்றாலும் இருமுவதற்காவது வீட்டுக்கு ஆம்பள வேணும்!
- பிரபல ஒளிப்பதிவாளர் ஆகும் யோகம் யாருக்கு?
Read more popular posts.