கனவுகளின் பலன்கள்-பஞ்சாங்க சாஸ்திரம்-ஜோதிட சாஸ்திரம்-கூறும் விளக்கங்கள்-Benefits of Dreams - Panchanga Shastra - Astrology explanations. ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Tuesday, March 27, 2018

கனவுகளின் பலன்கள்-பஞ்சாங்க சாஸ்திரம்-ஜோதிட சாஸ்திரம்-கூறும் விளக்கங்கள்-Benefits of Dreams - Panchanga Shastra - Astrology explanations.

கனவுகள் நம் விருப்பத்திற்கு உட்பட்டு வருபவை அல்ல. அவை தன்னிச்சையாக நிகழும் மனதின் உள்ளுணர்வுகளின்  வெளிப்பாடு.
Dreams are not of our choice. They are the expression of instinctive introspection of the mind. 

நாம் காணும் அனைத்து கனவுகளுக்கும் பலன் உண்டா? 

பெரும்பாலும் உண்டு என்றே கூறலாம். ஆனால் பகலில் காணும் கனவிற்கு அந்த அளவிற்கு பலன் இல்லை என்று பஞ்சாங்க சாஸ்த்திரம் கூறுகின்றது. ஆக பகலில் காணும் கனவுக்கு பயனில்லை.

கனவு எவ்வளவு காலத்தில் பலிக்கும்?

நாம் காணும் கனவுகளின் கால நிலைகளை பொறுத்து, கனவு எவ்வளவு காலத்தில் பலிக்கும் என்பதையும் நம் முன்னோர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

  • இரவு 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்
  • இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும்.
  • இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும்.
  • இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும்.
  • விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும்
பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறது.

நற்பலன் தரும் கனவுகள்

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.

தெய்வங்களை கனவில் கண்டால்

வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும், பதவி உயர்வு கிடைக்கும்.

கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.

திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.


இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் 
அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.

தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.

கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் 
உயிரினங்களை கனவில் கண்டால் 
கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.

மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.

மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

நன்றி - ஜோதிட தகவல் களஞ்சியம்.



Contact us 
Earnest Tax Consultancy
+91 9551 52 9551 | 8220 16 0093
earnesttaxcon@gmail.com | www.earnesttax.in