அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காணவேண்டும்,3ம் பிறை தரிசனம் கண்டால் செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும், பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம். சந்திர தரிசனம் சிவன்,பார்வதி என பலரும் குறிப்பிடுவது உண்டு, எனினும் ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆவார்கள்.
சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள், சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார்.
மாலை வேலைக்கும்,மேற்க்குக்குரிய சனிஷ்வரருக்கும் உரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் .
www.earnesttax.in |
காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும், ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும்.
சந்திர தரிசனம் எவ்வாறு வணங்குவது?
அதற்கான முறைகளையும் காண்க, ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும்.
காமாட்சி அம்மன் விளக்கு |
அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம்,அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும், இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார், இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள், பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு, நகை, தானியம், மாங்கல்யம் இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள்.
தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது , கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ம பலம், மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.
சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது .
ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார், சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார், இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும்.
வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும், பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும், இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம்.
மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது , எனினும் கவலை இல்லை , மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும்.
பிறை தரிசன மகத்துவம் - பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும்
நன்றி - ஜோதிட சக்கரம்.
Contact us for FREE enquiry
Earnest Tax Consultancy
+91 9551 52 9551 | 8220 16 0093