பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல் நிலவே…! ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Saturday, March 26, 2022

பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல் நிலவே…!

 

பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல் நிலவே…!




வாழ்வில் தோன்றும் உணர்வுகள் பல விதம் என்றாலும், இந்த காதல் மட்டும் வாழ்க்கையின் உயிரில் கலக்கும் ஒரு விதமான அதிசய உணர்வு என்றால் அது மிகையாகாது. 

 

"உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.”  உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பைக் காதலன் - காதலிக்கு இடையேயான தொடர்பை வர்ணிக்கிறது. உடல், உயிர் இவற்றில் இரண்டில் எது இல்லை என்றாலும் மற்றொன்று இயங்காது. அதுபோல்  காதலும் இருக்கும், இருக்க வேண்டும். ஆக காதல் என்பது உயிரும் உயிரும் கலத்தல் என்பர். இரு வேறு உயிர்கள் கலத்தலைத் தாண்டியது காதல் என்பதைச் சொல்வதற்காக தெய்வப்புலவர் இக்குறள் மூலம் விளக்குகின்றார். 

 

பெண்கள் ஆணின் மீது வைக்கும் காதல் மிக ஆழமானது,  நான் பேசா வார்த்தையின் மொழியையும் மொழிபெயர்க்க தெரிந்தவன் என் அன்பு காதலன்” என்று தன் காதலனின் பெருமையை பெண்கள் இப்படி கவியாய் வர்ணிப்பதில் இருந்தே புரியும். 

 

உயிருக்கு உயிராக நேசித்து, நேசித்தவனையே திருமணம் புரிந்து, வாழ்வின் அனைத்து காலங்களிலும் கணவனின் நேசிப்புக்கு உரியவளாகி, இறுதிவரை கைபிடித்தவனோடு மகிழ்ச்சியாக, பூர்ணமாக வாழ்ந்து மறையும் பாக்கியம் பெற்ற பெண்கள் புண்ணியவதிகள், அவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காதலிக்கும், திருமண பந்தத்தில் இணையும்  அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பும் இதுதான்.  

 

ஆனால் நடைமுறையில் இந்த கொடுப்பினை அனைவருக்கும் அமைந்துவிடுமா என்ன?  

 

அவரவர் வாங்கி வந்த வரத்தை பொருத்தல்லவா வாழ்வின் இன்ப துன்பங்கள், அன்பு, அரவணைப்பு,  சுக போகங்கள் அனைத்தும் நவகிரகத்தின் நர்த்தனத்தால் அல்லவா நிர்ணயிக்கப்படுகின்றது.  

 

இல்லறம் என்றால் கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வதே இனிது மாறாக கணவன் இல்லா வீடு "மாலுமி இல்லாத மரக்கலம் போல" குடும்பம் தத்தளித்துவிடும். என்னதான் பெற்றோர்களும், உறவுகாரர்களும் ஆதரித்தாலும்  "மின்மினிப்  பூச்சியின் வெளிச்சம் இருளைப் போக்காது" என்பதுபோல் பெண்களுக்கு கணவன் காட்டும் அன்பிற்கு ஈடாகாது. 

 

சில மாதங்களுக்கு முன்பு, சென்னையை சேர்ந்த  இளம் பெண் ஒருவர், இருபத்தி ஆறு வயது நடந்து கொண்டிருக்கிறது. திருமணம் ஆனவர். தனியார் நிறுவனத்தில், நிர்வாகத்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளார். ஆறு இலக்கத்தில் மாத சம்பளம் பெறுகிறார். பிறந்த இடத்தில் வசதி வாய்ப்புக்கு குறைவில்லை. இவர் ஜாதக ஆலோசனைக்காக எம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டார். 

 

தாம் பணிபுரியும் நிறுவனத்தின் மற்றொரு கிளையில் ஒரே துறையில் பணிபுரியும் சக தோழனும், நானும்  இரெண்டு வருடங்களுக்கும் மேலாக காதலித்து. இருவீட்டாரின் சம்மதத்தோடு மிக விமரிசையாக இரெண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் திருமணம் நடைபெற்றது. தேனிலவு, உறவினர்கள் விருந்து உபசரிப்பு, வார இருதியில் இன்ப சுற்றுலா என்று வாழ்க்கை இனிமையாக நகர்ந்தது. அலுவலக வேலைகளுக்கு இடையே இருவரும் சந்தோஷமாகவே குடும்பம் நடத்திவந்தோம். 

 

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எனது வாழ்வே புரட்டி போட்டது போல் ஆகிவிட்டது. சில கசப்பான நிகழ்வினால், எனது கணவரின் செய்கையை கண்டித்ததால், சில மாதங்களுக்கு முன்பு எனது காதல் கணவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார். இரு தரப்பு உறவினர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் இறங்கி வர மறுக்கின்றார். சில வாரங்களுக்கு முன்பு நான் கேள்விபட்ட ஒரு செய்தி, என் இதயமே வெடித்துவிடும் போல் அதிர்ச்சியாய் இருந்தது. அவர் வேறு ஒரு பெண்ணோடு மறைமுகமாக குடும்பம் நடத்தி வருகின்றார் என்ற செய்தி. அவரது ரகசியத்தை மறைப்பதற்காகவே என் மீது பழி போட்டு அனைவரையும் சமாளித்து வந்துள்ளார். 

 

அவரை யாருக்கும் என்னால் விட்டு கொடுக்க முடியாது. அவரை மனதார நேசிக்கின்றேன், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றேன். இதற்கான சாத்தியம் எனது ஜாதகத்தில் உள்ளதா என்ற கேள்வியை முன்வைத்தார். 

 

என்னதான் வாழ்க்கை முறை மாறினாலும், நாகரீகம் வளர்ந்தாலும், அடுப்பாங்கரையே கைலாசம், அகமுடையனே வைகுந்தம் என்று பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் போற்றி வாழ்ந்து வருபவர்கள் நம்நாட்டு பெண்கள்.

 

சரி வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்...  

 

அதற்கு முன்பு திருமண வாழ்விற்கு பார்க்க வேண்டிய முக்கியமான பாவங்கள் என்னென்ன என்பதை முதலில் அறிவோம். 

 

1ம் - பாவம் லக்கினம் - எதையும் அனுபவிக்கும் யோகம், ஆயுள், ஆரோக்கியம்  

2ம் -பாவம் குடும்பம், மனைவியின் தாலி பாக்கியம்  

5ம் - பாவம் புத்திரஸ்தானம், காதல், அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்து செல்லுதல், சிற்றின்பம் 

7-ம் பாவம் - களஸ்திரஸ்தானம், கணவன், மனைவி, சமுதாயத்தில் அனைவரிடத்திலும் சமமாக பழகும் தன்மை, ஒரே சீரான வாழ்க்கை முறை 

9-ம் பாவம் பாக்கியஸ்தானம், இறையருள், ஒருவருடைய அதிஷ்ட்டம் 

11-ம் பாவம் பெயர், புகழ், கீர்த்தி, வாழ்வில் திருப்தி. 

 

கணவன், மனைவி இருவர் ஜாதகத்திலும், அகம் சார்ந்த பாவங்களும், லக்கினத்திற்கு தீங்கு தராத புறம் சார்ந்த பாவங்களான 2, 6, 10ம் பாவங்கள் சுப வலுவுடன் அமைந்தால் ஜாதகரின் விதி குடுப்பினை நன்கு அமைந்துவிடும்.  

 

குடும்ப வாழ்வில் எவ்வித குறையும் இன்றி சந்தோசமாக வாழ இறையருள் புரியும். மேற்கண்ட பாவங்கள் லக்கினத்திற்கு தீமை தரக்கூடிய 4ம், 8ம் மற்றும் 12ம் பாவ தொடர்பினை பெறாமல் இருந்தால்  ஜாதகர் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்வை ஆயுளுக்கும் அனுபவிப்பார்.  

 

நிகழகூடிய தசை புக்திகளில் 4, 8, 12ம் பாவங்களின் குறுக்கீடு இல்லாமலும், லக்கினத்திற்கு தீங்கு தராத பாவங்களின் தசை புக்திகள் நீண்ட காலம் நடந்தால் எவ்வித இன்னல்களும் இல்லாமல் தாம்பத்திய வாழ்வு நெய் கலந்த பாதம் ஹல்வா போல் சுவையாக இனிக்கும்.  

 

சரி. இப்படியெல்லாம் அனைத்து  தம்பதியர்களுக்கும் விதி கொடுப்பினை அமைந்துவிடுமா என்ன? எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரத்தை பொருத்தல்லவா வாழ்க்கை அமையும். 

 

அந்த பெண்ணின் ஜாதகத்தில் பாவத் தொடர்புகள்  

மிதுன லக்கினம், துலாம் ராசி ஜென்ம நட்சத்திரம் விசாகம் 3ம் பாதம். 

1ம் பாவம் - சுக்கிரன்(1, 11) | புத(5) +ராகு(11) = 1, 5, 11

2ம் பாவம் - சந்(2, 10) | புத(5)+புத(5) = 5, 7

5ம் பாவம் - புத(5) | செவ்(4,8) + குரு(6,9) = 4, 6, 8

7ம் பாவம் - சூரி (7) | சந்(2, 10) + செவ்(4,8) = 2, 4, 8, 10

9ம் பாவம் - குரு(6, 9) | சனி(3, 12) + குரு(6, 9) = 3, 6, 9, 12

11ம் பாவம் - சுக்(1, 11) | புத(5) + ராகு(11) = 1, 5, 11 

 

நடப்பு தசை-புக்தி தொடர்பு கொண்ட பாவங்கள்  

தசை : புதன் ( 03/2021 - 08/2038 ) - 4, 6 , 8

புக்தி : புதன் ( 03/2021 - 08/2023 ) - 4, 6 , 8

 

ஜாதக அமைப்பை பார்க்கும் போது நீங்களே கண்டுபிடித்து இருப்பீர்கள், எதனால் இந்த ஜாதகி தாம்பத்திய வாழ்வின் கொடுப்பினை மறுத்து தற்பொழுது இன்னல்களை மன  ரீதியாக அனுபவித்து வருகிறார் என்று அறிய வரும்.  

 

விதி கொடுப்பினையும், மதி கொடுப்பினையும் சேர்ந்து அகம் சார்ந்த விடயங்களில் மறுத்து வருவதால் ஜாதகியின் குடும்ப வாழ்வில் சந்தோசம் தற்பொழுது தடைபட்டுள்ளது. 

 

இது தற்காலிக சோதனை என்பதை அறிய வேண்டும். ஏனென்றால் 1ம் பாவம் -  1, 5, 11. 9ம் பாவம் - 3, 6, 9, 12.  11ம் பாவம் -  1, 5, 11 ஆகிய பாவங்கள் சிறப்பாக உள்ளன. ஜாதகி முழு பாக்கியத்தையும் விதி படி இழக்கவில்லை. மதி படி தற்சமயம் நிகழும் 4, 6, 8ம் பாவ புக்திகள் நிகழ்வதனால் கணவர் பிரிந்து சென்றுள்ளார். அடுத்து வரும் கேது புக்தி, சுக்கிர புக்தி குடும்ப வாழ்விற்கு சாதகமாக இருப்பதனால் கணவனோடு இணைந்து சந்தோசமாக வாழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

 

ரதிக்கு மன்மதன் வாய்த்தது போல்“ ஜாதகி பிரிந்து சென்ற காதல் கணவருடன் சேர்ந்து வாழ்வார். அகம் குளிர முகம் மலரும் என்பது போல் ஜாதகியின் முகத்தில் சந்தோஷ கலை நாட்டியமாடும். குடும்பத்திற்கு புதுவரவாக, ஒரு வருடத்திற்கு பிறகு காதல் பரிசாக சிப்பிக்குள் முத்தெடுப்பார் என்ற நம்பிக்கை வார்த்தைகளோடு, எல்லாம் வல்ல அருட்பேராற்றலை வேண்டி இக்கட்டுரையை முழுமை செய்கிறேன். 

 

இதுவரை பொறுமையாக படித்தறிந்த தங்கள் அனைவருக்கும் நன்றி உரைக்கின்றேன். இன்னும் நல்லதோர் தலைப்பில் எமது ஜோதிட ஆய்வை பகிர்ந்துகொள்வேன் என்ற உறுதியோடு தற்போது விடைபெறுகின்றேன். 

 

எமது ஜோதிட ஆசான், ஜோதிட நல்லாசிரியர், ஜோதிட சக்கரவர்த்தி A.தேவராஜ் அவர்களின் நல்வழிகாட்டுதலுடன், 

 


என்றும் உங்கள் பாசத்திற்கும், நேசத்திற்குரிய

திலக். ஜெ. பாலமுருகன் MCA., M.Sc (YOGA).,

Member, All India Stellar Astrologer Associations | Chennai – India

Whatsapp/Telegram : +91-8825518634