கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் யார் சக்கரவர்த்தி ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Sunday, March 20, 2022

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் யார் சக்கரவர்த்தி

 கிரிப்டோ கரன்சியில் கொடிகட்டி பறக்கும் ஜாதக அமைப்பு


சுயதொழிலோ அல்லது அடுத்தவரின் கீழ் வேலை பார்ப்பதோ, இவையெல்லாம் நாம் பொருளீட்டும் நோக்கம் ஒன்றே தவிர, யாரும் இலவசமாக சேவை புரிவதற்கு இல்லை. சிலருக்கு அபரிமிதமான லாபம், சிலருக்கு பெருத்த நஷ்டம், அவரவர்  கொடுப்பினைக்கு ஏற்றவாறு, தக்க தசா புக்திகளில் அதன் பலன்களை விதியமைப்பின் படி காலச்சக்கரம் வழங்கி வருகிறது.


பொதுவாக ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், எந்த தொழிலில் ஈடுபடுகின்றோமோ அதை பற்றியான முழு அறிவு, பயிற்சி, ஆலோசனைகள், தக்க உழைப்பு, பொறுமை, போதிய அனுபவங்கள் மற்றும் தொழிலில் நீங்கள் காட்டும் ஆர்வத்தை பொறுத்தே நீங்கள் எழுபது சதவீதத்திற்கு மேல் ஜெயித்துவிடுவீர்கள். 


இங்கு தான் ஒரு கேள்வி எழும், இவை அனைத்தையும் அறிந்த பலர் ஏன் தோற்கின்றார்கள்? 


அதற்கான விடை, ஜாதக கொடுப்பினையால்,  நீண்ட காலம் வர்த்தகத்தில்  கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர்களும் உண்டு, கொடுப்பினை மறுப்பதினால், உயரத்தில் இருந்தவர்கள் அதால பாதாளத்தில் எழ முடியாமல் விழுந்தவர்களும் உண்டு. இவையெல்லாம் அவரவர் விதி கொடுப்பினையால் நிகழ்கின்றன என்ற விழிப்புணர்வு சமூகத்தில் எத்தனை பேருக்கு உள்ளது.


திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கு ஏற்ப பொருளாதார தேவைக்கு லாபகரமான தொழில் வாய்ப்பை தேடி, நாம் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். 


ஓடி ஓடி உழைத்தாலும் பற்றாத பணத்தினை தீர்த்து வைப்பது ஆன்லைன் ஜாப்;


கல்வி, வயது ஒரு தடை இல்லை. கையில் மொபைல் போன் இருந்தால் போதும் நீங்களும் அம்பானி ஆகிவிடலாம்;


வேலைக்கு செல்லும் பெருமைமிக்க குடும்பத்தலைவர்களே; ஓய்வூதியத்திற்கு திட்டமிடும் புத்திசாலி கனவான்களே; வேலை பார்த்துக்கொண்டே பகுதி நேரமாக, மாதம் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம். 


வேலை தேடும் படித்த இளைஞர்களே நீங்களும் தொழிலதிபராகலாம்.


கல்லூரி செல்லும் இளம் பெண்களே மூலதனம் வேண்டாம், முயற்சி செய்தால் போதும் உங்கள் சாதனை வின்னை முட்டும். படித்துக்கொண்டே உங்கள் சம்பாத்யத்திற்கான எளிய வழி; 


இனிமையான இல்லத்தரசிகளே, மறுவாழ்விற்க்கு ஏங்கும் மங்கையர்களே, லட்சிய நடைபோடும் புத்திசாலி பெண்களே;


எங்களது இலவச பயிற்சியின் மூலம் பலன் பெற்றவர்களின் சம்பாத்தியத்தை கேட்டால் நீங்களே ஆடிபோவீர்கள். நீங்களும் கோடீஸ்வரர்களாக வளம் வரும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.


யோசிக்காதீர்கள்..! உடனே எங்களது அடுத்த ஆன்லைன் பயிற்சிக்கு முன்பதிவு செய்யுங்கள் அல்லது மொபைலில் தொடர்பு கொள்ளுங்கள்.


என்று அனைத்து தரப்பு மக்களையும் வகைப்படுத்தி கிரிப்டோ கரன்சி வர்த்தக மேம்பாட்டிற்கு இப்படி கவர்ச்சிகரமான பல விளம்பரங்கள் இணையத்தில் உலா வருவதை பார்த்திருப்பீர்கள். 


சமீமிப காலமாக  எம்மிடம் தொழில் ஆலோசனைக்காக நிறைய ஜாதகங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக பெரும்பாலான கேள்விகள், கிரிப்டோ கரன்சி, சுயதொழில் எனக்கு ஒத்து வருமா?  நான் கிரிப்டோ கரன்சி தொழிலில் தேறுவேனா? நான் கிரிப்டோ கரன்சி தொழிலில் கொடிகட்டி பறப்பேனா? எனக்கு தொழில் யோகம் உண்டா? கடுமையாக உழைக்கிறேன் போதிய ஆதாயம் கிடைப்பதில்லை, நான் கிரிப்டோ கரன்சியில் சுலபமாக லாபம் சம்பாதிப்பேனா? என்று கிரிப்டோ கரன்சியை மையமாக வைத்து ஜோதிட ஆலோசனைக்காக பல அன்பர்கள் அணுகுகிறார்கள்.




மெய்நிகரில் உலாவரும் இந்த மாய கரன்சியின் வாசிகரம்தான் என்ன?



கிரிப்டோ கரன்சி என்பது வலைத்தளத்தில்  உருவாகி வலைத்தளத்தில் புழங்கும் கரன்சியாகும். நமது வங்கிகளின் வழக்கிலுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான பணத்தை, தேவை ஏற்படின் பார்க்கவோ, வருடவோ முடியும். அவ்வாறின்றி கிரிப்டோ கரன்சியானது, மெய் நிகரில் மட்டுமே உலவும் மாயக் கரன்சியாகும். கையில் தட்டுப்படாதது மட்டுமல்ல, எதற்கும் கட்டுப்படாததும் அதன் பெருமைகளில் சேரும்.


’ஒரு உலகம் ஒரே கரன்சி’ என்ற தாரக மந்திரத்துடன் எங்கும் நீக்கமற புழங்கும்  கிரிப்டோ கரன்சியின் தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது, அதன் மதிப்பும் உயர்ந்து வருகிறது. தேவையும் அதையொட்டிய தட்டுப்பாடுமாக, கிரிப்டோ கரன்சியின் விலை மேலும் மேலும் ஏறிவருகிறது, முதலீட்டு உபாயமாகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முறைப்படுத்தப்பட்ட பங்கு வர்த்தகம், தங்கம், ரியல் எஸ்டேட்டுக்கு இணையாக இன்னொரு முதலீட்டு ஜாம்பவானாக கிரிப்டோ கரன்சி தன்னை வரிந்துகொண்டுள்ளது என்ற நிதர்சனத்தை ஒத்துக்கொள்ள வேண்டும். 


பாரம்பரிய வர்த்தக முறையில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது  என்றாலும், கிரிப்டோ கரன்சியின் சந்தை அபாயத்தை பலர் அறிந்தும், பில்லியன் கணக்கான பணம் இணைய வர்த்தகத்தில் புழங்கி வருகிறது;


உலகம் முழுக்க, பெருநகர எல்லை தாண்டி, பட்டி தொட்டி எல்லாம், படித்தவர்கள் முதல் பாமரன் வரை கிரிப்டோ கரன்சியின் வர்த்தகம் பரவியுள்ளது.


இந்த வர்த்தகத்தில் இலகுவாக ஆயிர கணக்கில் சம்பாதித்தவர்களும், கோடி கணக்கில் இழந்தவர்களும் இருக்கின்றார்கள். லாபமும் நஷ்டமும் அவர் அவர் ஜாதக கொடுப்பினையை பொறுத்து அமையும் என்றால் அதற்கு நிகரான உண்மை வேறொன்றுமில்லை.


கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் தொடர்ந்து லாபம் சம்பாதித்தவரின் ஜாதக அமைப்பையும், நஷ்டம் அடைந்தவர் ஜாதக அமைப்பையும்,  உயர்கணித சார ஜோதிட முறையில் ஆராய்ந்ததின் மூலம் இதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.




ஜோதிடத்தில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை குறிக்கும் பாவம் எது?



உயர் கணித சார ஜோதிட அடிப்படையில் தொழில்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.


தொழிலின் இரண்டு பிரிவுகள்


  1. அகச்சார்புடையத் தொழில் 

  2. புறச்சார்புடையத் தொழில் 


அகச்சார்புடையத் தொழில்கள் ஒற்றைப்படை பாவங்களான 1,3,5,7,9 மற்றும் 11 ஆகிய பாவங்களின் காரகத்துவதில் அமைந்த தொழில்கள் ஆகும். இதற்கு பெரிய மூலதனமோ, வேலைக்கார்களோ, வலிதரும் அதிக உடலுழைப்போ தேவை இல்லை. உதாரணமாக சேவைதுறை, ஆலோசகர், பங்கு வர்த்தகம், கிரிப்டோ கரன்சி வர்த்தகம் போன்ற இன்னும் பல தொழில்கள் அகச்சார்புடைய தொழிலில் அடங்கும். இது முழுக்க முழுக்க தனி நபரின் திறமையின் அடிப்படையில் அமைந்த தொழில் ஆகும்.


புறச்சார்புடையத் தொழில்கள் இரட்டைப்படை பாவங்களான 2,4,6,8,10 மற்றும் 12ம்  ஆகிய பாவங்களின் காரகத்துவதில் அமைந்த தொழில்கள் ஆகும். இதற்கு பெரிய மூலதனம், வேலைக்கார்கள், வலிதரும் அதிக உடலுழைப்பு  தேவைப்படும்  இது முழுக்க முழுக்க தனி நபரின் திறமைகளைவிட கருவிகள், இயந்திரங்களை சார்ந்தே செயல்படும்.


மேலும் அனைத்து தொழில் சார்ந்த ஜாதக கொடுப்பினையை அறிந்துகொள்ள எமது குருநாதர் ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ் அவர்கள் எழுதிய ஜாதகமும் தொழில் அமைப்பும் என்ற புத்தகத்தில் தெளிவான விளக்கங்களோடு அறியலாம்.


அகச்சார்புடையத் தொழிலில் ஒன்றான கிரிப்டோ கரன்சி வர்த்தகம் 5ம் பாவத்தை சார்ந்தது. 




கிரிப்டோ கரன்சி வர்த்தகமும் - ஜாதக அமைப்பும் 


கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஒருவர் சிறந்து விளங்க ஜென்ம ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? அதை பற்றியான விளக்கத்தை இனி காண்போம்.


5ம் பாவம் என்பது அகம் சார்ந்த பாவமாகும் குறிப்பாக ஜாதகரின் உணர்வு பூர்வமான விடயங்களோடு தொடர்புடைய பாவம் தான்  இது. ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவம் ஒற்றைப்படை பாவங்களில் இதன் திரிகோண பாவங்களான 1, 5, 9ம் பாவங்களுடன் தொடர்பு பெற்றால் ஜாதகர் எந்த தொழிலிலும் பொறுப்புடன் செயல்பட மாட்டார். கேளிக்கை பொழுது போக்கு என்று வாழ்வை கழிப்பார். பணத்தை இதை போன்ற விடயங்களில் விரயம் செய்வர்.



கிரிப்டோ கரன்சி ஜோக்கர்


5ம் பாவம் 5 மற்றும் 9ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகரின் பொருட்பற்ற தன்மையினால் மேற்கொள்ளும் முதலீடு சிறப்பான லாபத்தை தராது. மேலும் நடை பெரும் தசை புக்திகள் 5 மற்றும் 9ம் பாவ அடிப்படையில் செயல்பட்டால் சொல்லவே தேவையில்லை மொத்த முதலீட்டையும் இழக்க நேரிடும். ஜாதகரை கிரிப்டோ கரன்சி ஜோக்கராகவே சித்தரிக்கபடுவார். இந்த தொழிலில் நீண்டகாலம் நிலைக்க மாட்டார்.


5ம் பாவம் 8 மற்றும் 12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் பெரும் நஷ்ட்டத்தையே சந்திப்பார். இந்த அமைப்பு உள்ள ஜாதகர்கள் தான் பெரும்பாலும் மற்றவர்களின் மூளை சலவையினாலும், பேராசையில் சிக்கி,   கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பெரும் நஷ்ட்டத்தை சந்திப்பார்கள். 8ம் மற்றும் 12ம் பாவம் சம்பந்தப்பட்டவர்கள் நலி வேதனையிலும், அசிங்க அவமானத்துடனும் தொழிலில் இருந்து ஓரங்கட்ட படுவார்கள்.




கிரிப்டோ கரன்சி சக்கரவர்த்தி


மாறாக 5ம் பாவம், புறச்சார்புடைய அல்லது பொருட் சார்ந்த பாவமான 10ம் பாவத்தின் திரிகோண பாவங்களான 2, 6, 10ம் பாவங்களை தொடர்பு கொண்டால், கிரிப்டோ கரன்சி போன்ற ஆன்லைன் வர்த்தகத்தில் நன்கு லாபம் சம்பாதிப்பர். 


மேலும்,


  • லக்னபாவ முனையின் உபநட்சத்திரம் 4, 8, 12ம் பாவத் தொடர்பினை பெறகூடாது .


  • நிறைய கிரகங்கள் 4, 8, 12ம் பாவத் தொடர்பினைப் பெறக்கூடாது.


  • 10ம் பாவ முனையின் உபநட்சத்திரம் 4,8,12ம் பாவத் தொடர்பினைப் பெறக்கூடாது.


  • 5ம் பாவ உபநட்சத்திரம் விரைந்து செல்லும் கிரங்களான சூரியன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ஆகா இருப்பது சிறப்பு.



தன காரகன் குரு மற்றும் சுபிச்சகாரகன் சுக்கிரன் சுப வலிமை பெற்று பொருட் சார்ந்த பாவங்களுடன் தொடர்பு பெற்றிந்தால் மிகவும் சிறப்பு. 


நடைபெறும் தசா புக்திகள் பொருட் சார்ந்த திசையாக நடை பெற்றால் சொல்லவே தேவையில்லை அந்த ஜாதகர் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் வெற்றியாளனாக திகழ்வார்.


இதுவரை பகிரப்பட்டது பொது விதிகளே. 


தனிப்பட்டவரின் ஜாதகத்தை உயர்கணித சார ஜோதிட முறையில் கீழ்கண்ட விதிமுறைகளை கொண்டு மேலும் அலசி ஆராய வேண்டும்.


  • விதி கொடுப்பினை 

  • மதி கொடுப்பினை 

  • 2ம் - பாவ கொடுப்பினை 

  • 5ம் - பாவ உப அதிபதி, உப உப அதிபதி,  உப உப  உப அதிபதி கொடுப்பினை 

  • பொருள் பற்றான பாவங்களின் கொடுப்பினை 

  • 9ம் - பாவ கொடுப்பினை 

  • தனகாரகன் கொடுப்பினை 

  • தொழில் காரகனின் கொடுப்பினை 

  • சுபிச்சகாரகனின் கொடுப்பினை 

  • 5ம் - பாவ உள்விளைவு கொடுப்பினை 

  • 5ம் - பாவ வெளிவிளைவு கொடுப்பினை 

  • 5ம் - பாவ பாவ விரிவு கொடுப்பினை 

  • 5ம் - பாவ கிரக விரிவு கொடுப்பினை 

  • காலச்சக்கரம் - கலபுருஷ அடிப்படையில் ரசிச்சக்கர அமைப்பு 


மேற்கண்ட விரிவான அம்சங்களை உள்ளடக்கிய உயர்கணித சாரா ஜோதிட வழி முறைகளோடு, ஜாதக ஆராய்ச்சியின் மூலம் ஜாதகர் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் நீண்ட கால முதலீட்டில் லாபம் சம்பாதிப்பாரா அல்லது குறுகிய கால முதலீட்டில் லாபம் சம்பாதிப்பாரா; பெரும் முதலீடு ஜாதகருக்கு உகந்ததா; வரும் காலம் முதலீட்டுக்கு ஏற்றதா; தனி நபர் முதலீடு லாபம் கொடுக்குமா அல்லது குழுவாக இணைந்தால் லாபம் அடைவரா; மூலதனமே இல்லாமல் முகவராக சேவை செய்து பொருள் ஈட்டுவாரா;


போன்ற சிறப்பம்சங்களை ஜாதக ரீதியாக அறிந்து, தக்க நிதி ஆலோசகரின் துணையுடன்,முதலீடு மேற்கொள்ளும் நீங்கள் அனைவரும் கிரிப்டோ கரன்சி, பங்கு வர்த்தகத்தில்  அசைக்க முடியாத சக்ரவர்த்தியாய் திகழ்வீர்கள்.


கட்டுரை முழுமையையும் பொறுமையாக படித்தறிந்து விளக்கம் பெற்ற தங்களுக்கு எமது  நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.


எமது ஆசான் ஜோதிட நல்லாசிரியர், A. தேவராஜ் அவர்களின் நல்வழிகாட்டுதலுடன்,


என்றும் அன்புடன்,


திலக் .ஜெ. பாலமுருகன் MCA., M.Sc (YOGA).,

Member, All India Steller Astrologers Association .,

Chennai - India.

Whatsapp : +91 - 8825518634




Related Posts: