உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!
தந்தையின் தொழில் வாரிசுகளால் சிறக்குமா?
அனைவருக்கும் வணக்கம்.
தந்தையின் சீரிய வளர்ச்சியில், கொடிகட்டி பறந்த தொழில் ஸ்தாபனங்களை, வாரிசுகள் பொறுப்பேற்று நடத்தும் போது பலமடங்கு வளர்ந்து தந்தையின் பெயர் போற்றும் வெற்றியாளராக திகழ்வார்கள்.உதாரணத்திற்கு டாடா குழுமம், அம்பானி குழுமம் மற்றும் பல வளர்ந்த தொழில் சாம்ராட்களின் வாரிசுகளின் பெயர்களை மிக விமரிசையாக கேட்டிருப்போம்.
முதல் தலைமுறை தொழில் அதிபர்களின் வெற்றி கதைகளை கேட்டால் பல வகைகளில் அவர்கள் சந்தித்த தடைகள், தோல்விகள், சோதனைகளையே பெரும்பாலும் மிகைபடுத்தி பேசுவார்கள். காரணம் அவர்களின் ஆரம்பம் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி இருக்கும்.
கடின உழைப்பால் முன்னேறி ஸ்தபனத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருகையில் அவர்களின் ஆயுளில் பாதியையோ அல்லது இறுதி நிலையையோ நெருங்கி இருப்பார்கள்.
தன்னால் அரும்பாடுபட்டு வளர்க்கபட்ட தொழில் மென்மேலும் வளர்ந்து, எதிர்காலத்திலும் நல்ல வளர்ச்சி நிலையில், தனது வாரிசுகளால் நிலைத்திருக்க வேண்டும் என்பதே இவர்களது தீர்க்கமான விருப்பமாக இருக்கும்.
இப்படி எதிர்பார்க்கும் பெற்றோர்களின் வாரிசு ஜாதகங்கள் நல்ல நிலையில் அமைந்துவிட்டால்..! தந்தையின் தொழிலை விருத்தி செய்து எவ்வித சிரமமும் இல்லாமல் சகல சௌபாக்கியங்களையும் அனுபவிப்பார். தந்தையின் பெயர் போற்றும் வகையில் பரம்பரை தொழில் பெருமையைத் தேடித்தரும்.
மேற்கண்டவாறு ஒருவருக்கு அமைய வேண்டும் என்றால் லக்ன பாவம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் ஆகிய பாவங்கள் எவ்வித தீய ஸ்தானங்களுடனும், பாவ கிரகங்களின் தொடர்பின்றி இருக்க வேண்டும்.
இயற்கை சுபர்களான குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் சுப வலிமையுடனும்.. சாதகமான பாவங்களின் தொடர்புகளுடன் இருப்பது நன்று.
தந்தை காரகன் மற்றும் சம்பாத்திய காரகனான சூரியன் இரட்டைபடை பாவங்களான 2,4,6,10 (8,12 தவிர்த்து)ஆகிய பொருளாதார விருத்தி தரும் பாவத்தொடர்புடன் அமைவதும் கவனிக்கபட வேண்டிய விடயம் ஆகும். இந்த அமைப்பையுடைய ஜாதகர் சம்பாத்தியத்தில் உண்ணத நிலையில் இருப்பார்.
கர்ம காரகன் சனியும் இரட்டைபடை பாவங்களை (8,12 யை தவிர்த்து) நல்ல சுபத்துவ நிலையில் இருப்பதும் அவசியம்.
கேந்திர பாவங்கள் 1,4,7,10 தன் பாவத்திற்கும், லக்னத்திற்கும் 8,12 ஆகிய பாவங்களின் தொடர்பின்றி அமைந்துவிட்டாலே ஜாதகர் தொழிலில் சிறந்து விளங்கிடுவார். மேலும் முக்கிய விதியாக 5,9ம் பாவங்களை அரவே தொடர்பின்றி இருந்தால் மட்டுமே ஜாதகர் தொழிலில் நீடித்த வெற்றியடைவார்.
ஜாதகரின் 6ம் பாவம் முக்கியமாக கவனிக்கபட வேண்டிய ஸ்தானம். காரணம் 6ம் பாவம் ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை குறிக்கும் பாவம். மேலும் 10ம் பாவத்திற்கு 9ம் இடமாக வருவதால் தொழிலில் போராடி வெற்றியடைய வேண்டும் என்றால் 6ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும். ஆள் அடிமை, ஆதிக்கம், நிர்வாக ஆளுமைக்கு 6ம் பாவமும் வலிமையுடன் செயல்பட வேண்டும்.
தந்தை ஸ்தானமான 9ம் பாவம் சுபத்துவத்துடன் இருப்பது மிக மிக அவசியம். காரணம் ஒருவருக்கு அதிஷ்டத்தை எவ்வித முயற்சி இன்றி வாரி வழங்குவது பாக்கியஸ்தானமே.
நடைபெறும் தசாபுக்திகள் 5,9 பாவங்களை மையபடுத்தி நடைபெறாமல் இருக்க வேண்டும். நீண்ட தசா மற்றும் புத்திகள் ஒற்றைபடை பாவங்களான 1,3,5,7,9,11 ஆகிய பாவங்களை ஏற்று நடத்தினால் ஜாதகர் தொழிலில் பொறுப்பின்றி செயல்படுவார். 8,12 ஆகிய பாவங்களை ஏற்று நடத்தினால் வீன் விரையத்தையும் தேவை இல்லாத வம்பு வழக்கிலும் தொழிலை போராடி நடத்த நேரிடும்.
நிலையான பாவங்கள் என்று சொல்ல கூடிய 1,2,6,7,10 ஆகிய பாவங்கள் கெடாமல் சுபத்துவத்துடன் இருந்துவிட்டாலே ஜாதகர் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைந்திடுவார்.
ஒருவரின் ஜாதகம் மேற்கண்ட விதிகளை உள்ளடக்கியவாறு அமைந்துவிட்டால் ஜாதகர் தன் தந்தையின் தொழிலை ஏற்று நடத்தி பல மடங்கு வளர்ச்சி அடைந்து குடும்ப பாரம்பரியத்தை காப்பாற்றுவார் என்பது நிதர்சனமான உண்மை.
தந்தையின் தொழில் வாரிசுகளால் சிறப்படைந்து குடும்பத்தின் புகழ் நிலைத்து இருக்கும்.
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்,
என்றும் அன்புடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer
+91-8 8 2 5 5 1 8 6 3 4
astrotilakjbalamurugan@gmail.com