உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!
அனைவருக்கும் வணக்கம்...!
ஜாதகரின் சரியான, பிறந்த நேரத்தை துல்லியமாக, கண்டறிவதை பற்றி தொடர் கட்டுரையாக படித்து வருகின்றீர்கள்.
நமது முந்திய கட்டுரைகளை படித்துவிட்டு, நிறைய அன்பர்கள் தொலைபேசி, முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் வாயிலாக வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றீர்கள்.
உங்களின் பேராதரவு எமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கின்றது.
நமது பதிவுகளை படித்துவிட்டு, புதிதாக நிறைய அன்பர்கள், தங்களுடைய ஜாதகங்களில் பிறப்பு நேரத்தை, சரிசெய்து தருமாறு கேட்பதை பார்க்கும் போது, ஆளும் கிரகங்களின் அற்புதத்தை, அனைவரும் வரவேற்கின்றீர்கள் என்பதை உணர முடிகின்றது.
நமது கட்டுரையால் இவ்வளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்றால் மிகவும் சந்தோஷமாக உள்ளது.
உங்கள் அனைவருக்கும், எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்
அனைத்து பாராட்டுகளையும், எமது குருநாதர், உயர்கணித சாரஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அய்யா , அவர்களுக்கு சமர்பிக்கின்றேன்.
அனைவருக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்த கட்டுரையை பதிவிட்டுள்ளேன்.
குறிப்பாக...
மதிப்பிற்குரிய திரு. சரவண வேல் அய்யா அவர்கள், கேள்வி ஒன்றை முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தார்கள்.
"மிக அருமை.
தங்களின் ஆன்மீக தத்துவங்கள் பகுதியில் உள்ள நேரம் திருத்தப்பட்ட ஜாதகத்தை பற்றி எனக்கு ஏற்பட்ட சந்தேகம்
தயவ செய்து விளக்கவும்.
சந் நிலையில் செவ் ( ) குரு ( ) பிறப்பு கால லக்ன நிலையில் வர வில்லையே? 5ம் பாவத்திற்கும் வைக்க வில்லை.
தயவ செய்து விளக்கவும்."
பதில்: ஆளும் கிரகங்கள், ஜாதகரின் அன்றைய நிலையில், அவர் மன ஓட்டத்தின் குறிகாட்டி என்பதை அறிவீர்கள். இதன் அடிப்படையில், ஜாதகரின் கேள்வி எவ்வாராக இருக்கும் என்பதை நம்மால் முன்கூட்டியே யூகிக்க முடியும்.
கொடுக்கபட்டுள்ள ஆளும் கிரகங்களின் அட்டவணையில், சந்திரனின் நிலையில் மிக வலிமையானவராக உப உப உப அதிபதி குரு, சந்திரன் நிலையில் இருக்கின்றார்.
இந்த ஜாதகருக்கு, பிறப்புநிலை பாவ லக்ன முனைக்கு, குருவை நிறுத்த முயற்சித்தால் ஜாதகரின் விதி பலன் மாறும், ஆதலால் அதற்கு நெருக்கமாக உள்ள ராகுவை பொருத்தினால் மட்டுமே ஜாதகரின் முந்திய தசாபுக்தி பலன்கள் ஒத்து போகின்றன.
இந்த ஜாதகருக்கு, குருவையே பிறப்பு நிலைக்கு பொருத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்கு முன் பின் கிரகங்களால், ஜாதகரின் கடந்த கால நிழ்வுகள் ஒத்து போகின்றது என்றால் அந்த கிரகத்தையே பயன்படுத்த வேண்டும்.
அதே போல் கேள்விகான பாவம் இங்கு புத்திர ஸ்தானம்... ஆளும் கிரக அட்டவணையில், செவ்வாய் உப உப அதிபதியாக அமர்ந்திருப்பார், அவரே பாவ அட்டவணையில், முதல் குழந்தை என்னும் 5ம் பாவம், இரண்டாம் குழந்தை என்னும் 7ம் பாவம், நான்காம் குழந்தை என்னும் 11ம் பாவங்களில் உப உப உப அதிபதி நிலையில் அமர்ந்திருப்பார்.
ஆக ஆளும் கிரக நிலையில் செவ்வாயின் குறிகாட்டி பாவங்களான 5,7,11 நடப்பு தசாபுக்திகளின், பாவங்களுடன் ஒத்து போவதால், இந்த நிலையே சரியானது என தீர்மானிக்க வேண்டும்.
சில சமயங்களில் ஆளும் கிரகங்களை இந்த மாதிரியான மாற்று வழிமுறைகளை கையாண்டால் மட்டுமே, சில சிக்கலான ஜாதகர்களின், பிறந்த நேரத்தை நாம் துல்லியமாக கணிக்க இயலும்.கொடுக்கபட்ட பிறப்பு நேரத்தில், குறைந்த நேர வித்தியாசங்கள் இருந்தால், நாம் நேரடியாக ஆளும் கிரகங்களை பொருத்த முயற்சிக்கலாம்.
சில சமயங்களில் இது சிரமம் இல்லாமல் பொருந்திவிடும். ஆனால் அதிக வித்யாசத்துடன் கொடுக்கபடும் பிறந்த நேரங்களை துல்லியபடுத்த, நேரடி விதிகளின் ஒத்துழைப்பு மிக குறைவு.. அந்த நேரத்தில் மாற்று வழியில் இதை சமன்படுத்த வேண்டும்.
ஆளும் கிரகங்களை, கேள்விகளின் சூழ்நிலைகளை பொருத்து இவ்வாறு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். ஆளும் கிரகங்களை பழக பழக உங்களுக்கு அனுபவத்தில் எளிமையாக வந்துவிடும்.
உயர்கணித சார ஜோதிடத்தில், எளிமையாக வகுக்கபட்டுள்ள, பன்னிரெண்டு விதிகளை கொண்டு, சரியான பிறப்பு நேரத்தை, மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.சார ஜோதிட விதிகளை மேலும் தெரிந்துகொள்ள, எமது குருநாதர், உயர்கணித சாரஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அய்யா அவர்களின், கொடுப்பினையும் தசாபுத்தியும் நூலில் படித்து அறியலாம்.
மேலும் ஆளும்கிரகங்களை பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப, எவ்வாறு கையாள வேண்டும் என்பதை மதிப்பிற்குரிய ஜோதிஷ ஆச்சார்யா S. அண்ணாமலை அவர்களின், சீர்மிகு எழுத்து படைப்பில் உருவாகியுள்ள "சிற்றின்ப சிகரங்கள்" புத்தகத்தில் மிக விரிவாக படித்து அறியலாம்.
எளிமையான விதிகளை, நமது கட்டுரையில், ஒவ்வொன்றாக அறிந்து வருகின்றோம்.
மேலும் இதை பற்றிய தகவல்களை அடுத்து வரும் தொடர் பதிவுகளில் விரிவாக காணலாம்.
தொலைபேசி மற்றும் நேரில் ஜாதகன் பலன் அறிய எம்மை தொடர்புகொள்ளலாம்
தங்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள சேவைகள் வழங்கபடும்.
- பிறந்த நேர சரிபார்ப்பு
- துல்லியமாக கணிக்கபட்ட உங்கள் ஜாதகத்திற்கு பொது பலன் அறிதல்
- உங்களின் கேள்விகளுக்கு ஏற்ப ஜாதக பலன் அறிதல்.
- யோகம் அளிக்கும் தசா/புக்திகளை அறிதல்
- குடும்ப வாழ்விற்கு சாதகமான அம்சத்தை அறிதல்
- உங்கள் பொருளாதார வாழ்விற்கான சாதகமான கால சூழலை அறிதல்
- நடப்பு கோச்சாரத்தின் பலன் அறிதல்
- உங்கள் ஜாதகபடி எதிர்கால வாழ்வை அறிதல்
- திருமணத்திற்கான யோக நேரத்தை அறிதல் மற்றும் வரன் பொருத்தம்
- 16 பக்கம் துல்லிய கணக்கீடுகளுடன் கூடிய உங்கள் ஜாதகம் PDF வடிவில் வழங்கபடும்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-99401 37099 | 88255 18634
Email: Jbm2k07@gmail.com
ஆளும் கிரகங்களின் முந்தைய பதிவுகள்
ஆளும் கிரகங்களின் முந்தைய பதிவுகள்