உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...
அனைவருக்கும் வணக்கம்!
வான் மண்டலத்தில் (Zodiac) இருக்கின்ற கோள்கள், நட்சத்திரங்கள், பூமியில் இருக்கின்ற, அனைத்து உயிரினங்களின் மீதும், ஒரே விதமாகத்தானே தாக்கின்றது, அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் தானே இருக்க முடியும்.
பின் எப்படி ஒரே நேரத்தில் பிறந்த, இரட்டையரின்(Twins) ஜாதகத்தில் வெவ்வேறான பலன்கள்?
இதற்கும் ஆளும் கிரகங்களுக்கும் சம்பந்தம் உண்டா? இதற்கான விளக்கங்களை இக்கட்டுரையில் காண்போம்.
இப்பதிவை தொடர்வதற்கு முன்... எமது முந்திய பதிவான "பிறந்த நேரத்தை சரிபார்ப்பதால் யோகம் வருமா...???, கட்டுரையை, படித்துவிட்டு தொடருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.
கொடுப்பினை
முதலில் கொடுப்பினை என்றால் என்ன? என்று அறிவோம்.
ஒரு ஜாதகர், பிறந்த நொடியில் உள்ள "ஆளும் கிரகங்களின் பலன்கள்தான்", Birth Chart என்னும் ஜாதகத்தின், 12 பாவ முனைகளில் நிறைத்து விடுகிறது!
அதன்படிதான் ஆயுள் முழுக்க, தசாபுக்திகளுக்கு ஏற்ப, பலன்கள் உண்டாகும்.
அது கர்ம பலன் அல்லது பிறவி் பலன் எனப்படும்.
நம் சாரஜோதிடத்தில், இதை கொடுப்பினை என்று கூறுவோம்!
ஜாதகரின் ஆயுள், ஆரோக்கியம், ஆளுமை திறன், மூளையின் செயல்பாடுகள், ஜாதகர் தனித்து இயங்கும் தன்மை, சுய முயற்சி, குண நலன்கள், உருவ அமைப்பு, வாழ்வின் அனைத்து சம்பவங்களையும், ஜாதகரின் லக்ன பாவமுனையில், தெளிவாக அறியலாம்.
இது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறாக(Uniqueness) அமையும். இரட்டையரின் ஜாதகத்திலும் இந்த அமைவுகளே, இவர்களின் பிறந்த நேரத்தின், ஆளும் கிரங்களை(Ruling Planet) பொருத்து, ஜாதக ரீதியில் வேறுபடுத்தும்.
இப்பொழுது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என நம்புகின்றேன்.
எமது குருநாதர், உயர்கணித சாரஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அய்யா அவர்களின், "கொடுப்பினையும் தசாபுத்தியும்" நூலில் மேலும் விரிவாக படித்து அறியலாம். இது உயர்கணித சார ஜோதிடத்தின் (Advance KP Stellar Astrology) மூல நூலாக திகழ்கின்றது.
பொதுவாக ஜாதகங்கள் நான்கு வகைப்படும்
பொய்யாமொழி புலவர், உலக பொதுமறையில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துபால் என அனைத்து குரள்களையும் உள்ளடக்கி, மனிதன் ஞானம் அடைவேண்டும் என்று 1330 குரள்களையும் மிக அழகாக அமைத்திருப்பார்.
அதை போல் மனிதர்களின் ஜாதகங்களும், கீழே குறிப்பிட்டுள்ள நான்கு வகைகளில், ஏதேனும் ஒரு அமைப்பை பிரதானபடுத்தி அமைந்துவிடும்.
1. தர்ம ஜாதகம்
2. தன ஜாதகம்
3. காம ஜாதகம்
4. ஞான ஜாதகம்
மனிதர்கள் நான்கு வகையில் ஏதாவது ஒன்றில்தான் பிறப்பார்கள். அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருக்கும். இதில் ஒவ்வொரு லக்ன பாவமுனைகளுக்கு ஏற்ப, ஜனன கால ஆளும் கிரகங்களுக்கு ஏற்ப, மற்றவர்களிடம் இருந்து வேறுபடுவார்கள்.
ஒருவரின் பிறப்பு நேரத்தை துல்லியமாக சரி செய்ய, மேற்குறிப்பிட்ட நான்கு வகைகளை ஞாபகத்தில் நிறுத்தினால், ஜாதகரின் நடைமுறை "வாழ்வியல் சம்பவங்களை" கொண்டு, லக்னபாவ முனை எவ்வாறு அமையும் என்பதை யூகித்துவிடலாம்.
ஆளும் கிரகங்களில் யார் வலிமையானவர்...???
ஆளும் கிரகங்களில் உப உப உப அதிபதியே (Sub sub sub Lord) வலிமையானவர். இவருக்கு அடுத்த நிலையில் முறையே உப உப அதிபதி (Sub sub Lord), உப அதிபதி (Sub Lord) என்று அதிகாராம் பெறுவர்.
ஜாதகர், ஜோதிடரை சந்திக்கும் தருணத்தில், ஆளும்கிரக நிலைகளை கொண்டு, மேற்குறிப்பிட்ட மூன்று கிரங்களின் பலத்தை பொருத்து, ஜாதகரின், லக்ன பாவமுனையை துல்லியமாக நிர்ணயிக்க வேண்டும்.
மேலும் இதை பற்றிய தகவல்களை, அடுத்து வரும் தொடர் பதிவுகளில், விரிவாக காணலாம்.
இதுவரை பொறுமையாக, படித்தறிந்த தங்களுக்கு, எனது "பணிவான நன்றியை" தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.+91-99401 37099 | 88255 18634 | Email: Jbm2k07@gmail.com