உச்சிஷ்ட மஹாகணபதி போற்றி...!!!
தாம்பத்தியத்தில் யார் கில்லி-Advanced KP Stellar Astrologer
Effective Relationship |
'சொல்லி தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ அறியாமல் பரப்பிவிட்ட தவறான முதுமொழி இதற்கு பதில் 'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு' என்று சொல்லி இருந்தால் மிகவும் சரியாக இருந்து இருக்கும்.காம உணர்வு என்பது இயல்பான ஒன்று, இதை யாரும் சொல்லி கொடுக்காமல் தானாக நம்மில் தோன்றுவது. இது தானாக ஊற்றெடுப்பது. அந்த உணர்வை, அவசரமான ஆத்திரத்தில் தனித்துக்கொள்ள யாரும் சொல்லி அறியவேண்டியது இல்லை, அது கிட்டத்தட்ட ஒரு மிருகத்தின் செயப்பாட்டை போன்றதுதான்.
மிருகங்கள் ஒருபோதும் எதையும்பற்றியும் மற்ற மிருகங்களை சொல்லச் சொல்லி கேட்பது இல்லை.
மிருக நிலையிலிருந்தவாறே ஒருவனால் உணர்வைத் தனித்துக் கொள்ள முடியும்.
அல்லது, அதை அழகியல் என்னும் தளத்திற்கு எடுத்துச் சென்றும் தனித்துக் கொள்ள இயலும்.
ஒன்றை, அழகியல் என்னும் தளத்திற்கு உயர்த்தும்போது அது கலையாகிவிடுகிறது.
என்று கவிஞர் பத்மதேவன் அவர்களின், மன்மத கலையின், அருமையான சிந்தனைகளை முன்னுரையாக்கி, தற்கால குடும்ப வாழ்வில் தாம்பத்தியத்தில் ஏற்படும் சிக்கலால் எந்த மாதிரியான பாதிப்புகளை சந்தித்து வருகின்றது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஒரு தம்பதியினரின் ஜாதகம் நம்மிடம் ஜோதிட ஆலோசனைக்காக வந்தது..
கணவன் மனைவி இடையே நல்ல உறவு இல்லை.. ஒருவருக்கு ஒருவர் பழி சுமத்திகொண்டு சண்டை சச்சரவு என்று கடந்த ஆறு வருடத்திற்கு மேல் காலத்தை வீணடித்து உள்ளார்கள். ஒரு கட்டத்தில் இவரது மனைவி இவரைவிட்டு பிரிந்து ஐந்து வருடமாக தனித்து வாழ்ந்து வருகின்றார்.
மனைவிக்கு கணவரின் மீது ஈர்ப்பு இல்லை என்றும் தாம்பத்தியத்தில் தன்னை திருப்தி படுத்துவது இல்லை என்று நேரடியாக பகிரங்க குற்றச்சாட்டை கூறி கணவரை பிரிந்து வாழுந்து வருகின்றார்.
இருவரது ஜாதகத்தை ஆராய்ந்த பொது... ஜாதகத்தில் முதலில் குடும்ப ஸ்தானம் கடுமையாக பாதிப்பு அடைந்து இருந்தது.
கணிதத்தில் விடை கண்டுபிடிக்க சூத்திரத்தில் பொதுவான நிலையான எண் பயன்படுத்துவதை போல் காமசூத்திரனின் கணிதப்புள்ளி சுக்கிரன் என்று உருவாக்கப்படுத்தப்பட்டுள்ளதால் தாம்பத்தியம் என்ற அளவில் சுக்கிரனே முதன்மைப்படுத்தப்படுவார். இருப்பினும் மற்ற கிரகங்களும், பாவ முனைகளும் ஒத்துழைத்தாள் மட்டுமே காமத்தை இயலாத நிலையும் அல்லது தறிகெட்ட நிலையும் சுக்கிரனால் அரங்கேற்றப்படும் என்பதே உண்மை.கணவரின் ஜாதகத்தில்....
பாவ காரகங்கள்
லக்ன பாவம் 3,12ம் பாவத்தை தொடர்புகொண்டு உப அதிபதியாக புதன், குருவின் நட்சத்திரத்தில், சூரியனின் உபநட்சத்திரத்தில் அமர்ந்து லக்கின பாவத்தை கெடுத்துள்ளது. இந்த அமைப்பை உடைய ஜாதகர் எப்பொழுதும் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார். உடலின் ஆரோக்கியத்தை தேவை இல்லாத சிந்தனையால் கெடுத்துக்கொள்ளுவார்.
மூன்றாம் பாவம் (வீரிய, தைரிய, முயற்சி ஸ்தானம்) 2,4,8,10,12 பாவங்களை தொடர்பு கொண்டது ஜாதகருக்கு சிந்தனையில் அக வாழ்வில் நாட்டத்தை குறைக்கும், சிந்தனை முழுக்க பொருளாதார எண்ணங்களே மேலோங்கி இருக்கும். மேலும் நரம்பு தளர்ச்சியால் படபடப்புடன் காணப்படுவார்கள். எதிலும் நிதானம் இல்லாமல் அவசர கதியில் செயல்படுவார்கள்.
ஐந்தாம் பாவத்திற்கு சனி உபாதிபதியாக, ராகு நட்சத்திரத்திலும், சனியின் உப நட்சத்திரத்திலும் அமர்ந்தது பாவ கிரக ஆட்சியால் பூர்வ புண்ணியத்தில் பாதிப்பை தந்துள்ளது. எதையும் ரசிக்கும் தன்மையில் ஒரு மந்த நிலையை தந்துவிடும். ஜாதகர் பொழுது போக்குகளில் தன்னிச்சையாக ஈடுபடமாட்டார். சிற்றின்ப வேட்கையில் சற்று மந்த நிலையிலே இருப்பார்.
ஜாதகரை சிற்றின்பத்தில் சிறக்க வைக்கும் ஐந்தாம் பாவமும், எதிர் பாலினரை வசீகரமாக ஈர்க்கும் 7ம் பாவமும் எந்த வகையிலும் லக்கினத்திற்கும், தன் பாவத்திற்கும் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது ஆனால் இந்த ஜாதகரின் 7ம் பாவம் நேரடியாக 1,4,7,10யை தொடர்பினால் ஜாதகரின் துணைவியார் மீதான வசீகர ஈர்ப்பு குறைந்துவிட்டது.
11ம் பாவம்: ஜாதகருக்கு முழு திருப்தியின் அளவீட்டை குறிக்கும் 11ம் பாவம் உப அதிபதியாக புதன், குருவின் நட்சத்திரத்தில், சூரியனின் உப நட்சத்திரத்திலும் அமர்ந்து 3, 12ம் பாவத்தை தொடர்பு கொண்டது மிகவும் பாதகமே காரணம் 12ம் பாவம் என்பது லக்கினத்திற்கு தீமை விளைவிக்கும் பாவம், மேலும் மூன்றாம் பாவ தொடர்பும் (மூன்றாம் பாவம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ) ஜாதகர் மனதளவில் சாந்தம் கொண்டு தாம்பத்திய வாழ்வில் சிறக்கும் யோக அமைப்பை இது பாதிக்கும்.
12ம் பாவம்: நித்திரை, மெத்தை, உறக்கம் மற்றும் கட்டில் சுகம் என்னும் யோகங்களை அனுபவிக்கும் குறிகாட்டியான 12ம் பாவம் 2,4,8,10,12 பாவங்களை வலிமையாக தொடர்பு கொண்டால் ஜாதகர் எங்கு நிம்தியாக தூங்குவார்.. கட்டில் போகத்தை எவ்வாறு அனுபவிப்பார்...
கிரக காரகங்கள்
சுக்கிரன் காதல் கிரகமாகவும், கவர்ச்சி மற்றும் பெண்ணின் மீது ஒரு ஆணுக்கு உண்டாகும் மோகத்தை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் மலட்டு தன்மையை உண்டாக்கிவிடும்.உயிரணுவை குறிக்கும் குருவும் லக்கினத்திற்கு 4,8,12ம் பாவங்களை எந்த நிலையிலும் தொடர்பு கொள்ளவே கூடாது.. இது ஜாதகருக்கு கடுமையான புத்திர தோஷத்தை கொடுத்துவிடும். இந்த ஜாதகத்தில் குரு 12ம் பாவத்தை உபாதிபதியாக அமைந்து 2,4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு கடுமையாக பாதித்துள்ளது.
நரம்பிற்கு காரகனான புதனும் 3,12ம் பாவத்தை தொடர்பில் ஆழ்வதால் நரம்பு தளர்வினால் விறைப்பு தன்மையில் ஜாதகர் நீடித்த நிலையில் செயல்பட இயலாது.
இப்படி கிரக காரகங்களும், பாவகாரகங்களும் முழுமையாக கெட்டுவிட்டால் ஜாதகரால் எப்புடி இல்லற வாழ்வில் சிறக்க முடியும்...?ஒரு ஆண் ஜாதகத்தில் சிற்றின்ப வாசலின் சிருங்கார சேவகனாய் திகழ வேண்டிய சுக்கிரன் பலம் குன்றி லக்கினத்திற்கு பாதகமான 4,8,12 தொடர்பு ஆண்மகனின் ஆசையெல்லாம் அசைவற்றே நின்று விடும். காமத்தை முழு செயலாக்கும் கூட்டணி கிரகங்களும் சேர்ந்து கெட்டுவிட்டால் ஜாதகரால் எப்படி கம்பீரமாக தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும்.
இந்த ஜாதகர் நல்ல மருத்துவரை அணுகி சரியான முறையில் தொடர் சிகிச்சை பெற்றால் ஓரளவுக்கு தாம்பத்திய குறைகளை சரிசெய்துவிடலாம். இவரும் சராசரியான அளவில் தாம்பத்தியத்தில் இன்பம் காணலாம்.
இவரது மனைவி இதை உணர்ந்து ஏற்றுக்கொண்டால் ஜாதகரின் இல்லறம் சிறக்கும்.
அய்யா தனுசு கணேசன் ஜோதிடர் அவர்கள், மிக அருமையாக சுக்கிரனை மேற்கோள் காட்டி, ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்ட நிலை என்பது மலைக்கும் மடுவுக்குமான ஏற்றத்தாழ்வான பலன்களை தருவதால் நன்கு ஆராய்ந்தே பொருத்தத்தில் இணைக்க வேண்டும். மேலும் மாறுபட்ட இந்த இரு நிலைகளுமே சராசரியான சமநிலை இல்லறவாழ்விற்க்கு தகுதியற்றது என்பதை ஆணித்தரமாக தனது சுந்தர புருஷன் சுக்கிரனின் நீசம் என்ற கட்டுரையில், ஜோதிட அரசு இதழில் குறிப்பிட்டுயிருப்பார்.
ஒரு குடும்பம் எப்போது ஜெயிக்கிறது?
எந்த வீட்டில் பெண்ணை அடக்கி ஒரு ஆன் ஜெயிக்கிறானோ அங்கே ஒரு மிருகம் ஜெயித்தது என்று பொருள். எங்கே ஒரு ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாளோ அங்கே ஒரு பிடாரி ஜெயித்தது என்று பொருள்.
கணவன் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் தொற்றுப் போகத் தயாராக இருந்தால் குடும்பம் ஜெயிக்கிறது! என்று அய்யா சுகி. சிவம் மிக அருமையாக கூறுவார்கள்.
மேலும் தாம்பத்திய உறவில் மனிதர்கள் இருவகைப்படுவார்கள்
1. தன்னை பிறர் அனுபவிப்பதில் இன்பமுடையவர்கள்
2. பிறரைத் தான் அனுபவிப்பதில் இன்பம் காண்பார்கள்
அனுபவிக்கும் பரபரப்பு இருவரிடமும் இருக்கிற போது தாம்பத்தியம் முற்றிலும் தோல்வியை தழுவுகிறது. பிறர் தன்னை அனுபவிக்க வேண்டும் என்கின்ற குழைவு நிலை இருந்தால் செக்ஸ் ஆரம்பம் ஆவதே இல்லை.
கணவன் மனைவி உறவு என்பது ஆண்டான் அடிமை உறவே அல்ல! முதலாளி தொழிலாளி உறவும் அல்ல.. அது ஒரு உன்னதமான நட்பு.
எந்த வீட்டில் கணவனும் மனைவியும் நல்ல நண்பர்களாக இருக்கின்றார்களோ அந்த வீட்டில் நிம்மதியும் நிச்சயமாக இருக்கும்.மாறாக அன்பின் அளவில் குறைவு ஏற்பட்டால் பிரச்னையின் ஆரம்பத்திற்க்கு இது மூலமாக அமைந்துவிடும். சதா சண்டையும், கூச்சலும், குழப்பமும் தொடர்ந்தால் குடும்ப உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடும்.
அவசர யுகத்தில் எந்திர வாழ்க்கையை வாழும் மனித இனம் இழந்தது ஏராளம். அறிவியல் வளர்ச்சியில் பல சாதனைகளை புரிவார்கள் ஆனால் குடும்ப வாழ்வில் நாட்டமில்லாமல் சொந்தங்களை இழந்து தனிமைப்படுவார்கள். இவர்கள் எல்லாம் சின்ன சின்ன விஷயங்களில் தோற்றுப்போய்விடுவார்கள். காரணம் வாழ்வை சமமாக அணுகாததின் விளைவு.
தம்பதியருக்குள் சரியான புரிதல் இன்மையால் உலக அளவில் 4 சதவீத தம்பதியினர் உடலுறவு இல்லாமல் காலத்தை கழிக்கின்றார்கள்.
நீதிமன்றங்களில் விவாகரத்து கோரி மனு அளிக்கும் நூறில் நான்கு குடும்பங்கள் சரியான தாம்பத்தியம் கிடைக்காததினால் வழக்கு தொடுக்கின்றேன் என்று கூறுவது எவ்வளவு வேதனையான விஷயம். இதை ஆங்கிலத்தில் unconsummated marriage life என்று கூறுவார்கள்.
வனப்பை வாரியிறைக்கும் வசிகரத் தோற்றம் கண்களால் கதைப்பேசும் காந்த பார்வை... சாமுத்திரிகா லட்சணத்தை ஆணுக்கும், பெண்ணுக்கும் அள்ளி வழங்கி அழகுபார்த்த காமத்தின் கதாநாயகன் சுக்கிரனின் ஜலத்தை வார்த்தைகளால் வார்த்தெடுக்க முடியாது.
பலமான சுக்கிரனை ஜாதகத்தில் பெற்றவர்களின் வாழ்க்கை ஆடம்பரமாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும், ஒட்டு மொத்த இன்பத்தையும் வட்டியும் முதலுமாக பெற்றவர்கலாக இருப்பார்கள்.
மன்மத லீலையின் முக்கிய ரகசியம் என்ன?
தாம்பத்தியம் என்கிற உடல் உறவில் திருப்தி அடைவது முக்கிய விஷயமல்ல! திருப்திப்படுத்துவதே முக்கியம்.தனது மனநிறைவைவிட தன் துணையின் ஆனந்தமும், திருப்ப்தியும்மே அவசியமானது. இந்த ரகசியத்தை அனைவரும் உணர்ந்துவிட்டால் தாம்பத்திய நுட்பம் எல்லாம் தெளிவாக விளங்கிவிடும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் ஒருவர்க்கொருவரை புரிந்து கொண்டு, அன்பு நேசித்து ஒருவருள் ஒருவராய் இணையும் போது மகிழ்ச்சியின் எல்லை விரிவடையும்.
குடும்பத்தில் ஆனந்தம் தாண்டவமாடும்...!!!
இந்த நிலையில் நீடித்தால் இருவருமே தாம்பத்தியத்தில் கில்லியே...!!!
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634
Email: Jbm2k07@gmail.com