கோடி கோடியாய் குவிக்கும் தொழில் யோகம் யாருக்கு?? How to become Crorepathi? ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Sunday, October 14, 2018

கோடி கோடியாய் குவிக்கும் தொழில் யோகம் யாருக்கு?? How to become Crorepathi?

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!


ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர்.
"யாதானும் தொழில் செய்வாம்
     யாதும் அவள் தொழிலாம்."
எத்தனையோ தொழில் முனைவோர்களும், தொழில் அதிபர்களும் தொழில் செய்து கொண்டுதானே உள்ளனர். சிரமங்களைத் தாண்டி முன்னுக்கு வருபவர்களையும், முடியாது போய் நசிந்து போனவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் பல்லாயிரம் கோடிகளை மிகசுலபமாக சேர்த்தவர்களும் உள்ளனர். இதற்கெல்லாம் அவரவர் ஜாதகத்தில் உள்ள கொடுப்பினை என்றால் அது மிகையாகாது.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”
என்றார் வள்ளுவ பெருந்தகை.

ஊழ் என்பது பூர்வ ஜன்மத்தையும், விதியையும் குறிக்கும்.

பூர்வ ஜன்மத்தின் பலாபலன்களை கொண்டே, இந்த ஜென்மத்தின் விதி நிர்ணயிக்கப்படுகின்றது.

அதனைதான், ‘ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்றார் இளங்கோ.
அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் பலருக்கு திடீர் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. போன ஜென்மத்தில், விதி யோக பலனுடன் விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜன்மத்தில் எழுதப்படுகிறது.
கோடிகளை குவிக்கும் யோக காலம் எப்போது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுவதுதான், நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.

பிறப்பால் கோடீஸ்வர யோகம்:

கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். இவர்கள் ஜாதகத்தில் பெரும்பாலும், நான்காம் பாவ உபாதிபதி இயற்கை சுபரான குரு அல்லது சுக்கிரனாக இருப்பார். வேறு கிரகங்கள் இருந்தாலும் பொருந்தும். கிரகங்களுக்கு ஏற்ப சொத்து வந்த வழிகள் புலப்படும்.
நான்காம் பாவமுனைகள் தனஸ்தானம்(2), சுகஸ்தானம் (4), வெற்றி ஸ்தானம்(6), தொழில் ஸ்தானம்(10) ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டிருந்தால் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்புகள் பல்லாயிரம் கோடிகள் மதிப்புடையதாக இருக்கும். 
முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர். குருவும் 9ம் பாவத்தின் உப அதிபதியும் இதே அமைப்பில் தொடர்பு கொண்டிருந்தால் ஜாதகர் பிறப்பால் கோடீஸ்வரர்.

ராசி, லக்னாதிபதி தசை

ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம்.
தசா நாதன் மற்றும் புக்தி நாதன் இருவரும் இரட்டை படை (2,4,6,10) சுப பாவமுனைகளை தொடர்புகொண்டு தசை நடத்தும் போது, ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும். 
சாதாரண நிலையில் இருப்பவரும் பெருத்த முன்னேற்றத்தை எளிதில் அடைவாா்கள். செல்வச் சேர்க்கை, தொழிலால் லாபம், குடும்ப முன்னேற்றம் போன்றவை உண்டாகும்.

தொழிலால் கோடீஸ்வரர் யோகம்

10ம் பாவ உபாதிபதி, இரட்டைப்படை சுப பாவங்களான 2,4,6,10 ஆகிய பாவங்களின் தொடர்புடைய தசைகளை நடத்தினால் தொழில் வருவாய் மூலம் கார், பங்களா, விலை உயர்ந்த ஆபரணங்கள், வெளிநாட்டு கரண்சிகள் மற்றும் விஸ்தாராமான நிலபுலன்கள் என்று சுகமாக வாழ்வர், தொழில் மூலம் புகழ், செல்வம் சேரும். வாழ்க்கையில் சுகத்துக்குப் பஞ்சம் இருக்காது.

யாரால் யோகம்?

இரட்டைப்படை சுப பாவங்களை (2,4,6,10)  சூரியன் தொடர்பு கொண்டால் தந்தையாலும்
...
சந்திரன் தொடர்பு கொண்டால் தாயாலும்
...
செவ்வாய் தொடர்பு கொண்டால் கணவர், உடன்பிறப்பாலும்
...
புதன் தொடர்புகொண்டால் நண்பர்கள், மாமனாலும், சொந்த அறிவாலும்
...
குரு தொடர்பு கொண்டால் முன்னோர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், புத்திரர்களாலும்
...
சுக்கிரன் தொடர்பு கொண்டால் மனைவியாலும்
...
சனி, ராகு, கேது தொடர்பு பெற்றால் வேலையாட்கள் மூலமும், நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும்.
7ம் பாவம் 2, 4, 6,10ம் பாவமுனைகளை தொடர்பு கொண்டவர்களுக்கு வசதியான, அழகான கோடீஸ்வரரைத் திருமணம் செய்யும் யோகம் ஜாதகருக்கு அமையும்.
திடீர் விபரீத ராஜ யோகம் யாருக்கு?

'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர்.
ஜாதகரின் எட்டாம் பாவம் 2,4,6,10ம் பாவமுனைகளை தொடர்பு கொண்டால் இவர்களுக்கு வாழ்வில் திடீர் அதி தனயோகம் அமைந்து விடும். சொகுசான வாழ்க்கை ஏற்பட்டு, திடீர் கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகும்.
கோடீஸ்வரராக வழிமுறைகள்:

சராசரி வாழ்க்கைக்கே போராடுகிறோம்; இந்த நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்றே பலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். முறையான உழைப்பாலும், புதிய சிந்தனையாலும், எந்தத் தொழில் மூலமாகவும் கோடீஸ்வரராகி விடலாம்.
பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர். 
தொழில் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிவை

முதலில் ஒருவர்க்கு வேலை செய்யும் யோகம் உண்டா? இல்லையா? அல்லது தொழில் செய்வாரா என்பதை நல்ல ஜோதிடரை அனுகி அறிய வேண்டும்.

தொழில் கொடுப்பினையை பார்ப்பதற்கு 6 மற்றும் 7ம் பாவ முனைகளை, 10ம் பாவ முனைகளுடன் இணைத்து ஆராய வேண்டும்.

இந்த பாவங்கள் பொருளாதாரத்திற்கு மிகவும் கொடிய ஸ்தானமான 5,9ம் பாவங்களை தொடர்பு கொண்டும், தொழிலுக்கான காரக கிரகங்களும் முழுமையாகக் கெட்டிருந்தால் வேலை வெட்டிக்குப் போகாமல், ஊரைச் சுற்றிவிட்டு வந்து வீட்டில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கும் சுகவாசியாக இருப்பார். ஆகவே விதியின் கொடுப்பினைதான் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்கின்றன என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பல வருடங்கள் சேமித்த பொருளைக் கொண்டும், கடன் வாங்கியும் புதிய தொழில் தொடங்கும்போது, முதலில் ஜாதகத்தில் தொழில் தொடங்கும் நேரம் தற்போது உண்டா?  தொழிலால் லாபம் கிடைக்குமா? கூட்டுத் தொழில் வெற்றி தருமா? என்பதையெல்லாம் கருத்தில் கொள்வது பாதுகாப்பானது.

அவசரக் கோலத்தில் தொழில் தொடங்கி, முடங்கிப்போனவர்கள் ஏராளம்.  விதிகொடுப்பினையும், தசாபுக்திகளும் சாதகமா உள்ளதா என்று ஆராய வேண்டும்.

தொழில் தொடங்கிய காலம் தொட்டு தொடர்ந்து வரும் தசாபுக்திகளும் சாதகமாக தொடர்ந்து அமையுமா...???  என்பதை அவசியம் அறிய வேண்டும்.
பத்தாம் பாவமுனை, ஒருவரின் ஜாதகத்தில், ஜாதகர் தன் வாழ்க்கையில் செய்ய இருக்கும் தொழிலை அல்லது வேலையைக் வெற்றிகரமாக செயல்படுத்வாரா என்பதை குறிக்கும்.
அந்த இடத்தை, அதன் இயற்கைத் தன்மையை, அதன் உப அதிபதியை, அவர் தொடர்புகொண்டுள்ள பாவங்களையும், சம்பாத்திய காரகன் சூரியனின் நிலையையும், தனகாரகன் குரு மற்றும் சுக்கிரனையும் பொறுமையாக ஜாதகத்தில் அலசுவதன் மூலம் ஒருவரின் கோடிஸ்வர யோகத்தை எளிமையாக அறியலாம்.
அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறியலாம்.
விதி கொடுபினையுடன் தசாபுக்திகளையும் இணைத்தே ஆராய வேண்டும். அதனுடன் ஜாதகரின் லக்ன கொடுப்பினை  மற்றும் பாக்கிய ஸ்தானத்தையும் இணைத்தே ஆராய வேண்டும்.
"ஜாதகர் தொடர்ந்து தொழிலில் வெற்றி அடைவாரா என்று உறுதிபடுத்த, மிகவும் முக்கிய ஆய்வான பாவ முனை விரிவுகள் மற்றும் கிரக விரிவுகளை அவசியம் ஆராய வேண்டும். இது உயர்நிலை ஆய்வுகள் என்றாலும் அவசியம் ஆராய்ந்து தாசாபுக்திகளின் உச்சபச்ச பலனை அறிய வேண்டும்."
உத்தியோகத்தில் அல்லது தொழிலில் எந்த அளவிற்கு ஜாதகர் உயர்வார் என்று பார்ப்பதற்கும், எந்த வயதில் உயர்வார் என்று பார்ப்பதற்கும் இது உதவும்.

எந்த தசா புத்தி காலத்தில் மேன்மை அடைவார் அல்லது வீழ்ச்சியடைவார் என்று பார்ப்பதற்கும் உதவும்.

இவர்கள் முறையாக ஜாதக ஆய்வை செய்து தொழிலில் இறங்கினால் வெற்றி மேல் வெற்றிதான்.

"என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி..!!
ராசி உள்ள பக்கம் தினம் வெற்றிவந்து சேரும்..
நேரம் கூடும்போது எந்த ஊரும் உன்ன பாடும்
நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும்..!
ஆளு அம்பு சேனை அட அத்தனையும் கூடும்..!!
விட்டு போன சொந்தமும் வரும்..!

கோடியிலே ஒருத்தனுக்கு ராசி உச்சத்திலே

எந்த குறைகளுமே அவங்கிட்டதான் தேடி வந்ததில்லே
எது வந்தாலும் போனாலும் ஓட்டுற மண்ணுதான் ஒட்டுமடா" னு ஜாதகர் தொழிலில் அசாத்திய தைரியத்துடன் செயல்படுவார்.

தொடரும்....

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

தொலைபேசி மற்றும் நேரில் ஜாதகன் பலன் அறிய எம்மை தொடர்புகொள்ளலாம்

தங்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள சேவைகள் வழங்கபடும்.
  1. பிறந்த நேர சரிபார்ப்பு
  2. துல்லியமாக கணிக்கபட்ட  உங்கள் ஜாதகத்திற்கு பொது பலன் அறிதல்
  3. உங்களின் கேள்விகளுக்கு ஏற்ப ஜாதக பலன் அறிதல்.
  4. யோகம் அளிக்கும் தசா/புக்திகளை அறிதல்
  5. குடும்ப வாழ்விற்கு சாதகமான அம்சத்தை அறிதல்
  6. உங்கள் பொருளாதார வாழ்விற்கான சாதகமான கால சூழலை அறிதல்
  7. நடப்பு கோச்சாரத்தின் பலன் அறிதல்
  8. உங்கள் ஜாதகபடி எதிர்கால வாழ்வை அறிதல்
  9. திருமணத்திற்கான யோக நேரத்தை அறிதல் மற்றும் வரன் பொருத்தம்
  10. 16 பக்கம் துல்லிய கணக்கீடுகளுடன் கூடிய உங்கள் ஜாதகம் PDF வடிவில் வழங்கபடும்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer, 
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634  
Email- Jbm2k07@gmail.com

Related Posts: