அஷ்டவராகி கோயில் - கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்து விடுபட - Astavaraki Temple - Salamdu - Vizhupuram ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Sunday, March 25, 2018

அஷ்டவராகி கோயில் - கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்து விடுபட - Astavaraki Temple - Salamdu - Vizhupuram

சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன். திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இருகரங்களில் தண்டத்தினையும் கலப்பையையும் கொண்டவர். இவர் கருப்புற நிற ஆடையுடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். 


தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாக கருதப்படுகிறது. 
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். 

கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். வராகியை வணங்கும் எவருக்கும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.

அஷ்டவராகி கோயில்:

இந்து சமயத்தில் வழங்கப்பெறும் பெண் தெய்வங்கள் ஒருவர் வராகி. இவர் ராஜ ராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படைத்தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டு கோயிலையும் உள்ளடக்கிய அஷ்டவராகி கோயில் சாலாமேட்டில் அமைந்துள்ளது.

உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாக கருதப்படுகிறது. 

இதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.

இழந்த செல்வம் பெறலாம்:

வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து முதல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டினால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம். 

கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே வராகி அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வந்தாலும் இழந்த செல்வங்களை பெறலாம். மாத பெளர்ணமி, அமாவாசை மிகவும் மிகவும் சிறப்பாக அன்னதானத்துடன் நடக்கிறது. 

வராகி மாலை படித்தால் அனைத்து துன்பங்களும் நம்மை விட்டு அகலும். இரவு 10 அல்லது 11 மணியளவில் மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும் வராகியை மனம் உருகி வேண்டினால் கேட்பவை அனைத்தும் கொடு‌க்கு‌ம் தெய்வமாக நின்று துணை நிற்கும்

கேட்ட வரம் கிடைக்க 108 ஜபம்:

வராகி அம்மன் வீரநாரி, மகாசேனா, பஞ்சமீ என பல பெயர்களை கொண்ட இவள் துர்க்கையின் படை சேனாதிபதியாக இருந்து வெள்ளியை மட்டுமே ஈட்டியவள். ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

இவள் உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும் அன்பை பொழிவதில் அன்னைக்கு நிகரானவள். இவளுக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை தரக்ககூடியவள் வராகி அம்மன்.


வராகி காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்


இந்த மத்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மத்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.

செல்வது எப்படி?

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் சாலாமேடு அஷ்டவராகிகோயில் உள்ளது. தளவானூர், திருப்பாச்சனூர் செல்லும் அரசுப்பேருந்துகளிலும், ஷேர்ஆட்டோக்களிலும் கோயிலுக்கு செல்லலாம்.

நன்றி - ஜோதிட சக்கரம்