விநாயகர் மந்திரம் - VINAYAGAR MANTRA - திருமந்திரம் விநாயகர் காப்பு ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Friday, March 23, 2018

விநாயகர் மந்திரம் - VINAYAGAR MANTRA - திருமந்திரம் விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே


ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.


முழுமுதற் கடவுளாம் விநாயகர் ஐந்து கரங்களுடன் அபயம் அளிப்பவர்.
விநாயகரின் தோற்றமே விசித்திரமானது எனலாம். அதனையே இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

ஐந்து கரங்களில் வலப்புறக் கையில் ஒன்று, பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது. மற்றொரு வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது. இடப்புறக் கைகளில் ஒன்றில் பாசக் கயிறும், மற்றொரு இடக்கையில் மோதகமும் (கொழுக்கட்டை) வைத்தபடி விநாயகர் காட்சி தருகிறார். ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி அ‌ன்று ‌விடிய‌ற் காலை‌யிலேயே எழு‌ந்து, சு‌த்தமாக கு‌ளி‌த்து‌வி‌ட்டு, ‌வீ‌ட்டையு‌ம் பெரு‌க்‌கி மெழு‌கி சு‌த்தமா‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். வாச‌லி‌ல் மா‌விலை‌த் தோரண‌ம் க‌ட்டலா‌ம். முடி‌ந்தா‌‌ல், இ‌ர‌ண்டு வாழை‌க் க‌ன்றுகளையு‌ம் வாச‌லி‌‌ன் இருபுற‌ங்க‌ளிலு‌ம் க‌ட்டலா‌ம்.

‌பிறகு பூஜையறை‌யிலே சு‌த்த‌ம் செ‌ய்த ஒரு மனையை வை‌க்க வே‌ண்டு‌ம். அத‌ன் மே‌‌ல் ஒரு கோல‌ம் போ‌ட்டு, அத‌ன் மே‌ல் ஒரு தலை வாழை இலையை வை‌க்க வேண்டு‌ம். இலை‌யி‌ன் நு‌னி வட‌க்கு பா‌‌ர்‌த்தமா‌தி‌ரி இரு‌ப்பது ந‌ல்லது. இ‌ந்த இலை மே‌ல் ப‌ச்ச‌ரி‌சியை‌ப் பர‌ப்‌பி வை‌த்து, நடு‌வி‌ல் கோமயத்திலான ‌‌பி‌ள்ளையாரை வை‌க்க வே‌ண்டு‌ம். பூ‌மி‌யிலிருந்து உருவான எதுவு‌ம் பூ‌மி‌க்கே ‌திரு‌ம்ப‌ச் செல்லும் எனும் த‌த்துவ‌ம்தா‌ன் ‌பி‌ள்ளையா‌ர்.


நன்றி : https://analaiexpress.ca/


Contact us 
+91 9551 52 9551 | 8220 16 0093
earnesttaxcon@gmail.com | www.earnesttax.in
Tamilnadu | India