அரசியல் எனக்கு ஒத்து வருமா? தலைவனாக்குமா தலையெழுத்து?-பாகம் 4-செவ்வாய் தசை ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Sunday, November 25, 2018

அரசியல் எனக்கு ஒத்து வருமா? தலைவனாக்குமா தலையெழுத்து?-பாகம் 4-செவ்வாய் தசை

உச்சிஷ்ட  மகாகணபதி போற்றி...!!!

ஜாதகம், tamil jothidam, jothidam, thirumana porutham, dinamalar josiyam, rasipalan, ராசி பலன், ஜோதிடம், ஜாதகம் பார்ப்பது எப்படி, ஜாதகம் கணிக்க, ஜாதக கட்டம், astrology in tamil by date of birth, tamil josiyam, ஜாதகம் பார்க்க வேண்டும், tamil astrology software, தமிழ் ஜோதிடம், free astrology in tamil, ஜாதகம் பார்க்க, இலவச ஜாதகம், tamil jathagam software, free horoscope in tamil, dinamalar jothidam,daily horoscope in tamil, indraya rasi palan in tamil, daily thanthi rasi palandinamani jothidam, dinamani rasi palan, dinakaran jothidam, daily thanthi jothidamtamil jathagam free, dinamalar rasi palan, thinathanthi rasi palan, இன்றைய ராசிபலன், to day rasi palan, inraya rasipalan, dinamalar rasi palan today, dinamalar rasipalancomputer jathagam in tamil, maalaimalar jothidam, நல்ல நேரம், தமிழ் காலண்டர், dinathanthi rasipalanthanthi rasi palan, tamil jathagam, jathagam in tamil by date of birth,inraiya rasipalanஜாதக பலன்கள், ஜாதக கட்டம் பலன், ஜோதிடம் பார்க்கலாம் வாங்க, ஜாதக பலன்கள் அறிய, ஜோதிடம் பலன்கள்ஜாதகம் கணிப்பது எப்படி,  ட்டம் கணிக்க, tamil astrology books,jothidam in tamil languageபிறந்த நாள் ஜாதகம், ஜாதக கட்டம் பார்ப்பது எப்படி, இலவசம் ஜாதகம் பார்க்க பிறந்த தேதி, இலவச ஜாதக பலன்கள்திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி, இலவச நாடி ஜோதிடம், இலவச ஜோதிடம், ஜோதிடம் பார்க்க, இலவச ஜாதக கணிப்புjothidam karka, இலவச ஜாதக கட்டம், ஜாதக பலன் பார்ப்பது எப்படி, பிறந்த நேரம் ஜாதகம், பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படிதிடம் பார்ப்பது எப்படி, பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க, தமிழ் ஜாதகம், ஜாதகம் பார்க்க சாப்ட்வேர், ஜோதிடம் கற்க, பிறந்த ஜாதகம்தினமணி ஜோதிடம், இன்றைய நட்சத்திர பலன், ஜோதிடம் புத்தகங்கள், thina palan, jothitam, dinamalar astrology in tamil, உங்கள் ஜாதகம், kairegai jothidam in tamil, ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி, நவாம்சம் பலன்கள், தமிழ் ஜாதகம் கணிப்புதிருமண பொருத்தம் எத்தனை, நாடி ஜோதிடம் பார்ப்பது எப்படி, rasi palan dinakaran, ஜதகம் கணிக்க, dinamalar rasi palan today in tamil, இலவச ஜோதிட புத்தகங்கள், dinakaran josiyam, ஜோதிடம் கற்று கொள்வது எப்படி, thinathanthi jothidam, nadi jothidam in tamilthinapalan, நட்சத்திர பலன்கள், வாக்கிய , idam in tamil, thinathanthi rasipalan,dinamalar rasi, ராசி கட்டம், rasi palan dinamalar, tamil jathagam online free, rasi palan dinamani, dinathanthi astroராகு திசை, jothidam dinamalar, indraya rasi palan dinakaran, aanmeegam jothidam, சூரியன் புதன் சேர்க்கைமேஷம், inraya raasi palan, indraya rasi palan dinamalar, indraya rasi palan daily thanthi, dinamani josiyamnatchathira palan, ஜோதிடம் ஜாதகம், சனி திசை, intraya rasipalan, பெயர் ராசி பலன், thanthi jothidam, today rasi palan dinamalarrasi palan daily thanthi, பிறந்த தேதி வைத்து ஜாதகம், பிறந்த ராசி நட்சத்திரம் அறிய, ஜோதிட நூல்கள் pdf, ஜோதிடம் புத்தகங்கள் pdf,நாடி ஜோதிடம் பார்க்கும் இடம், ராசிபலன், ஜாதகத்தில் ராகு கேது, பிறந்த கிழமை பலன்கள், today dinakaran astrology, oneindia tamil astrologydinamani rasipalan, குரு பார்வை, ராகு கேது தோஷம் என்றால் என்ன, tamil jothidam free online, dhina palan in tamil, ஜோதிட சாஸ்திரம்tamil jothidam app, தசா புத்தி பலன்கள், indraya rasi palan dinamani, அஷ்டம சனி, dinakaran indraya rasi palan, dinamalar indraya rasi palan4ல் சனி, ரசி பலன், லக்னத்தில் குரு, jothidam dinamani, ரேவதி நட்சத்திரம், கிரகங்கள் சேர்க்கை பலன்கள், ராகு திசை பலன்கள், thina thanthi jothidam, rasipalan dinamani, 6ல் கேது 12ல் ராகு, daily thanthi josiyam, 12 பாவங்கள், குரு பார்வையில் கிரகங்கள், thinathanthi rasi palan today, பிறந்தநாள் பலன்கள், dailythanthi rasi palan, ஜோதிடம் pdf, sothidam, rasi palan dailythanthiசார ஜோதிடம், ராசி பலன் பார்ப்பது எப்படி, இலவச ஜாதகம் பார்க்க, பெயர் ராசி பார்ப்பது எப்படி, தமிழ் ஜோதிடம் ஜாதகம், ஜாதகம் கணித்தல், நாடி ஜோதிடம் online, பிறந்தநாள் ஜாதகம், எண் ஜோதிடம், தமிழ் jothidam, கிளி ஜோதிடம், ஜோதிடம் 2019, விதி எண் பலன்கள், ஜதகம் பார்க்க, ஜோதிட குறிப்புகள், குரு பெயர்ச்சி,ஜோதிடம் கற்பது எப்படி, எண் ஜோதிடம் 2019, தமிழ் jathakam, jothidam in tamil 2019, ஜோதிட பாடம், ஜோதிடம் கணிக்க, en jothidam tamil, 2019 குரு மாற்றம், பிறந்த தேதி ஜாதகம் கணிக்க, பெயர் ராசி ஜோதிடம், குரு பெயர்ச்சி பலன்கள் சிம்மம், ஜாதக குறிப்பு, தமிழ் ஜாதக பலன்கள், number astrology in tamil, தமில் ஜாதகம், ஜோதிடம் இலவசம், தமிழ் காலண்டர் 2019, ராசி நட்சத்திரம் கண்டுபிடிக்க, பி ம் பார்க்க, சாதகம் பார்க்க, தமிழ் ராசி பலன், ராசி நட்சத்திரம் அறிவது எப்படி, அடிப்படை ஜோதிடம், ஜோதிட கட்டுரைகள், ஜோதிடம் உண்மையா, 9 கிரகங்கள், சனி பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி, மிதுனம் அமையும் வரன், குழந்தை பிறப்பு ஜாதகம், பரல்கள் கணிப்பது எப்படி, kp ஜோதிடம், மீன ராசி சுக்கிர திசை, ராசி மற்றும் நட்சத்திரம், லக்ன பலன்கள், today jothidam tamil, பிறந்தநாள் ஜோதிடம், தழிழ் ஜாதகம், en jothidam, லக்னம் கணிக்கும் முறை, கேது புத்தி, ராகு திசை சனி புத்தி பலன்கள், 6ல் சந்திரன், சந்திரன் திசை, ஜோதிட யோகங்கள், குரு திசை குரு புத்தி, ஜோதிடம் யோகங்கள், thinathanthi raasi palan, குரு பலன், dinamalar puthandu rasi palan 2017, ராசீ பலன்,

அனைவருக்கும் வணக்கம்.
ஜோதிடம் என்பது ஒரு உயர்தரமான விஞ்ஞானம். வேதங்கள் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது அது. சூரியனை மைமாக வைத்து அனைத்து கோள்களும் நட்சத்திரங்களின் சாரத்தின் ஊடாக பெயர்கின்றன. தன் இயக்க நிலைகளுக்கு ஏற்ப கதிர்வீச்சுகளை வெளிபடுத்துகின்றன.

Previous Post 

அண்ட வெளியில் உள்ள கிரகங்களின் கதிர்வீச்சு தன்மையினால், பூமியில் உள்ள ஜீவராசிகளின் மீது அதன் தாக்கம் பதிகின்றது. இதன் தொடர்பால்  மனிதர்களின் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தொடர்புடையதாய் கிரகங்கள் மற்றும்  நட்சத்திரங்கள் ஆதாரமாக இருக்கின்றன.

நன்றாக வரையறுக்கப்பட்ட ஒரு நியதிப்படி முழு உலகமும் நடத்தப்படுகின்றன. தற்செயலாக எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை..!

கிரகங்களின் மாறும் இயக்க நிலையை உப நட்சத்திர கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு மிக துல்லியமாக சார ஜோதிட (KP Stellar Astrology) ரீதியில் அளவிடுவதில் தான் உள்ளது இவ்விஞ்ஞானத்தின் சிறப்பு.
ஜோதிடமானது காரியத்தையும் காரணத்தையும் கிரகங்களின் செயல்தன்மைக்கு ஏற்ப, மனிதர்களுக்கான நிகழ்வுகளின் தன்மை அமையும் என்பதை விளக்கவே முற்படுகின்து,  எனவேதான் சார ஜோதிடம் என்பது "தெய்வீக விஞ்ஞானமாக" வராஹிமிகராலும் மற்றும் நமது முன்னோர்களாலும் நம்பிக்கையுடன் தெய்வ கலையாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது என்றால் அது மிகை ஆகாது.
மனிதர்களுக்கு நிகழும் அனைத்து யோக, அவயோக பலன்கள் கிரகங்களால் வகுகக்கபட்ட நியதிபடியே நிகழும். இது ஒருபோதும் யாருக்காகவும் மாறாது. இதை தான் விதி என்று கூறுவார்கள்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.    - குறள் 380
விதியைவிட வலிமையானது வேறெதுவும் இல்லை. வேறு ஏதேனும் சூழ்ந்து வந்தாலும் அங்கு விதியே முந்திக்கொண்டு வரும் என்று வள்ளுவர் ஊழ் என்ற அதிகாரத்தில் கூறியிருப்பார்.
ஒருவனுக்கு பொருள் சேர வேண்டும் என்ற விதி இருந்தால், விதி அவனிடம் முயற்சியை உண்டாக்கி செல்வம் சேர்க்க வழி வகுத்துவிடும் மாறாக செல்வம் அழியும் விதி இருந்தால் சோம்பலை உருவாக்கி தரித்திரத்தை ஏற்படுத்திவிடும்.
ஒருவன் அனுபவிக்கும் யோகம் விதியில் இல்லை என்றால் கோடி கோடியாய் பணம் இருந்தும் அவற்றை அனுபவிக்க இயலாமல் நோயையோ, தீராத பிரச்சனைகளையோ அல்லது அற்ப ஆயுளையோ இன்னும் பல அவ யோகங்களை தந்து சுபயோக பலனை அனுபவிக்க முடியாமல் தடுத்துவிடும்.

கல்வி, புகழ், செல்வம், கீர்த்தி, பாசமான மனைவி (அ) கனவன், குடும்பம், நன்மக்கள், விசுவாசமான நண்பர்கள், வித்தைகள், ஆரோக்கியம், கவலையில்லா வாழ்க்கை, நல்ல உத்தியோகம், பட்டம், பதவி போன்றவை கிரகங்களின் ஆசியின்றி எவருக்கும் கிடைப்பது இல்லை.

ஒரு மனிதனின் விதி என்பது இந்த பிறவியில் அவனுக்கு வழங்கியுள்ள முழு பலாபலன்களை குறிப்பிடுவதாகும். அவன் ஆற்றிய முந்தைய பிறவியின் கரும வினைக்கு தகுந்தாற்போல், இப்பிறவியில் அனுபவிக்க கூடிய சுப யோகங்கள், அவயோகங்கள் மூலம் நன்மை தீமைகளை வாழ்க்கை நிகழ்வுகளால் தக்க காலத்தில் தசாபுக்திகள் மூலம் விதி கொடுப்பினையை கிரகங்களால் வழங்கபடுகின்றன.
இந்த உலக வாழ்க்கையின் நிலையை சரியாக உணர்ந்து கொள்வதற்கு சார ஜோதிட சாஸ்த்திரம் ஒரு மாபெரும் கருவியாக பயன்படுகின்றது. 
கிரகங்கள் தன் கடமையை செய்தே தீரும்:

விதியின் அபார சக்தி! 

இந்த விதி சிலருக்கு  தன் உழைப்பால் மட்டுமே அனைத்தும் கிடைத்தன என்ற மாயப் போர்வையிலும், சிலர்ருக்கு 'மதி' என்ற போர்வையிலும் ஆட்டிப் படைக்கின்றது. சரியான காலம் வரும் போது, இந்த உலக இன்ப, துன்பங்கள் யாவும் நவகிரக சக்தியால் உருவாகி வருகிறது என்பதை உணர்கின்றனர்.

அரசியல் ஒரு சதுரங்க ஆட்டம்
வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே என்பார் கண்ணதாசன்.
அரசியலின் ஆழம் அறியாமல், தனக்கான விதிபலனையும் தெரிந்துகொள்ளாமல், ஆர்வத்தில் அரசியல் வாழ்வை சுட்டு கொண்டவர்கள் தன் இயலாமையை மறைப்பதற்கு பிதற்றும் ஒரு சாக்கு... "அரசியல் என்பது ஒரு சாக்கடை....!"

இது அறியாமையில் உழலும் பெரும்பாலோரின் என்னம்.. ஆனால் அது உண்மை இல்லை. அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். இங்கு நல்லவன் என்பதைவிட வல்லவனுக்கு தான் பிரகாசமான எதிர்காலம் அமையும்.

மக்கள் போற்றும் அரயசில் தலைவன்

பணபலம், ஆள்பலம், அரசியல் குடும்ப பின்னணி, அரசியல் அடையாள வாரிசு, மக்களின் ஆதரவு போன்ற பல காரணிகள் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கின்றன. இவை அனைத்தும் ஒருவருக்கு வாய்க்க பெற்றாலும் கிரகங்களின் நல்லாசி பெற்றவர்களாக இருந்தால் மட்டுமே மக்கள் போற்றும் அரயசில் தலைவனாக நீடித்து ஆட்சி கட்டிலில் அமர முடியும்.
சாமானியனையும் உச்சானி கொம்பில் ஏற்றி வைப்பதும், சக்ரவர்த்தியையும் அதாலபாதாளத்திற் தள்ளிவிடுவதும் நவகோள்களின் நாட்டியமே.
இதை அறியாமல் மற்றவர்களை பார்த்து அதே நிலைக்கு தானும் வந்துவிட வேண்டும் என முனைபவர்களின் நிலை "புலியை பார்த்து பூனை சூடுபோட்ட" கதை போல் ஆகிவிடும்.

ஜாதகத்தில் விதிபலன் கைகொடுக்கவில்லை என்றால் நிச்சயம் அது நிராசையாகவே முடியும். ஆசையில் வளர்ந்த எண்ணங்கள் அனைத்தும் காணல் நீர்போல் ஆகிவிடும்.

அரசியலுக்கு(Politics) ஒருவர் வரவேண்டும் என்றால் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலன்களை நன்கு அறிந்து நுழைய வேண்டும்.

தன் ஜாதகம் அரசியலுக்கு ஏற்ற யோக ஜாதம்தானா என்று தீர ஆராய்ந்து அதன்படி செயல்படுவது தான் புத்திசாலி தனம்.

கிரங்கள் ஒருபோதும் ஒருவருக்கு விதிக்கபட்ட விதியை மீறி செயல்படாது.

இதை எந்த பரிகாரத்தாலும் தீர்த்துவிட இயலாது.

அழுது புரண்டாலும்  கிரகங்கள்  கருணை காட்டுவது இல்லை. "கிரகங்கள் தன் கடமையை செய்தே தீரும்".

அரசியலுக்கான அடிப்படை கிரக அமைப்புகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை பற்றி மிக விரிவாக இங்கு படித்து அறியலாம்.

விதிபடி யோக பலன்களை நிகழ்த்துவது தசாபுக்திகள்.

அரசியல் ஜாதகம்

அரசியல் யோகமுடைய உதாரண ஜாதகமாக, இந்திய தேசத்தின், அரசியல் தலைவர்களால், பிரமிப்புடன் பார்க்கபட்ட, அரசியல் ஆளுமையில் சிகரம் கண்ட, சாதனை பெண்மணி, மறைந்த முன்னால் மாண்புமிகு  முதல் அமைச்சர். J. ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில் "அரசியலுக்கான கிரக அமைவுகள், சாதகமான தசாபுக்திகளை" ஆய்வு செய்து வருகின்றோம்.

சார ஜோதிட முறையில், ஆளும் கிரங்களின் நிலை கொண்டு துல்லியமாக கணிக்கபட்ட, ஜெயலலிதா அம்மையாரின் ஜாதகம் இங்கு  காணலாம்.

"அரசியல் எனக்கு ஒத்து வருமா? தலைவனாக்குமா தலையெழுத்து??" என்ற தலைப்பில் அரசியல் யோகம் பற்றி தொடர் பதிவுகளாக நமது  சாரஜோதிட விழிப்புணர்வு கட்டுரைகளை படித்து வருகின்றீர்கள்.

முந்தைய  பதிவுகளை, இதுவரை படித்திராதவர்கள்,  இந்த லிங்கை கிலிக் செய்யவும்.

பாகம் 1 : அரசியல் ஈடுபாட்டிற்கான ஜாதகத்தில்
  • முக்கிய கிரக அமைப்புகள்
  • பாவ முனை தொடர்புகள்
  • கிரக காரகங்கள், பாவ காரகங்கள்
  • அரசியலுக்கான அடிப்படை விதிகள் 
ஆகியவற்றை விளக்கமாக பார்த்தோம்.

பாகம் 2:  இரண்டாவது மற்றும் மூன்றாவது பதிவில் ஜெயலலிதா அம்மையாரின் ஜாதகத்தில், தசா புக்திகளை கொண்டு அவர் வாழ்நாளில் கிரகங்கள் நிகழ்த்திய சினிமா மற்றும் அரசியலுக்கான சுப மற்றும் அசுப யோக பலன்களை, தசா புக்தி வாரியாக மிக துல்லியமாக கேது தசை தொடங்கி சூரிய தசை மற்றும் சந்திர தசை வரை ஆய்வு செய்தோம்.

சந்திர தசை அரசியலுக்கு யோகமாக அமைந்ததா? இல்லையா? என்பதை ஒவ்வொரு புக்தி வாரியாக நிகழ்ந்த சம்பங்களை விதி கொடுப்பினையுடன் தொடர்புபடுத்தி மிக துல்லியமாக, கிரக விரிவுகளுடன்(Planet Extension) ஆய்வு செய்தோம்.
அதன் தொடர்ச்சியாக அசாத்திய ஆளுமையை  அளிக்கும் செவ்வாய் தசை அம்மா அவர்களை அல்லல்படுத்தி அரசியல் அசையை நிராசை ஆக்கியதா? அல்லது முதல்வர் நாற்காலியில் அமர வைத்ததா...?  அதற்கான ஆய்வை இந்த பதிவில் காண்போம்.
தாசா நாதன், புக்தி நாதர்கள், அந்தர நாதர்கள் மற்றும் சூட்சம நாதர்கள் ஆகியோர் தான் தொடர்புகொண்ட பாவங்களின் வழியே நிகழ்த்திய பலன்கள் அரசியலுக்கு யோகமாக அமைந்ததா? என்பதை இனி காண்போம்.

செவ்வாய் தசை:

காலபுருசனின் லக்னமும் பூமியை ஒத்த காரகத்துவமும் கொண்ட செவ்வாய், குஜன், மங்கள காரகன், பூமி காரகன், சேனாதிபதி என்று பல பெயர்களில் அழைக்கபடுகிறார் . குஜன் என்றால் சமஸ்கிருதத்தில் "பூமியின் மகன்" (அ) "நிலமகன்" என பொருள்.

செவ்வாய் முழுமையான ஒரு ஆண் கிரகம். இவர் மேஷம் மற்றும் விருச்சகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி ஆவார்.

செவ்வாய் தசை 7வருடம் ஜாதகருக்கு நடைபெறும்.

இவர் ஒரு இயற்கை அசுபர்.

செவ்வாய், தான் அமர்ந்த நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரங்களின் பாவ தொடர்புகளின் ஊடாக, தன் தசையில் பலன்களை ஜாதகருக்கு வழங்குவார்.
செவ்வாயின் காரகங்கள் சகோதர காரகன், ஆதிக்க பண்பு, ஆளுமை, சேனாதிபதி, காவல் துறை, ராணுவம், மனவலிமை, வீரம், அசட்டு துணிச்சல், தழும்பு, மூர்க்க தனம், கோபம், ஆத்திர அவசரம், கூர்மையான ஆயுதம், மன உளைச்சல், அதீத காம உணர்ச்சி, அரசாங்க பதவி, கட்டுமானம், பொறியியல் துறை, உடலில் உள்ள தசை, கட்டு மஸ்தான உடல் வாகு, வெட்டு காயங்கள், களத்திரகாரகன் (பெண்களுக்கு), கருவிகள் போன்றவை செவ்வாயின் காரகங்களாகும்.
ஒருவருக்கு நிகழும் தசையில் கிரகங்களின் காரகங்களுக்கு ஏற்ப தசையின் செயல்பாடு நிகழும். அதே போல் செவ்வாய் தசையில் மேற்குறிப்பிட்டுள்ள காரகத்துவங்கள் தொடர்பு கொண்ட பாவ ரீதியாக வெளிபடும்.
செவ்வாய் தசையில் ஜாதகருக்கு உத்தம மனைவியும், வீர தீர பராக்கிரமம் வாய்ந்த மக்களும், நன்மைகளும், மங்களச் செயல்களில் வெற்றியும், ஆடை ஆபரண இலாபங்களும், உடன் பிறந்தவர்களால் நன்மையும் செவ்வாய் தான் கொண்ட தொடர்புகள் சுப பாவமுனைகளாக இருந்தால் யோக பலனை வழங்கிவிடும்.
மாறாக தீய ஸ்தானங்களை (8,12) தொடர்புகொண்டு தசை நடத்தினால் மேற்குறிப்பிட்ட பலன் கிடைக்காமல் செய்துவிடும். முன் தசையில் நல்ல யோகத்தில் அவைகள் கிடைத்திருந்தால் தன் தசையில் இழக்க வைத்திடும்.
அரச தண்டணை, ஆயுதத்தால் பீடை, எதிரிகளால் தொல்லை, தனச்சேதம், சூனிய தொல்லை, பகை வந்து அள்ளல் படுத்தும், நோய் பீடிக்கும், சுர தோஷம், வாதபீடை, நெருப்பினால் கண்டம், தரங்கெட்டு நடத்தல், ரோக பயம், பங்காளி சண்டை, பூவையரும் புத்திரரும் மரணம் அடைதல், எடுத்த காரியங்கள் தோல்வியில் முடியும், ஈன ஸ்திரீ போகம் ஏற்பட்டு நோயில் வீழ்வான், சிறைவாசம், கெட்ட வழியில் செல்வம் சேர்த்து அரச தண்டணைக்கு உள்ளாகுதல், விபத்தில் சிக்குதல் இப்படி பல அசுப யோகபலனை செவ்வாய் தன் தசையில் அனுபவிக்க வைத்திடுவார்.
செவ்வாய் தசை ராஜ யோகங்களை ஜெயலலிதா அம்மையாருக்கு வழங்கியதா?
செவ்வாய் தசை 30/08/1987 - 30/08/1994  (39வ 6மா 6நா - 46வ 6மா 6நா)
ஜெயலலிதா அம்மையார் அவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் வக்கிர கதியில் இரண்டாம் பாவமுனையில் சிம்ம இராசியில் சரியாக 02° 10' 19'' விகலையில் சனி(வ) மற்றும் சந்திரனுடன் இணைந்து மகம் 1ம் பாதத்தில் அமர்ந்துள்ளது.

கேதுவின் நட்சத்திரத்திலும், சுக்ரன் உப.நட், குரு உ.உப நட், ராகு உ.உ.உப நட்சத்திரத்தில் சாரம் வாங்கி 1,5,11ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது. இது ஒரு நல்ல தொடர்பு. இந்த தொடர்புகள் இறைகொடுப்பினையை முழுமையாக தந்து பூரண சந்தோஷத்தை அனுபவிக்க வைக்கும்.

இந்த தசையில் லக்ன பாவம்(1), பூர்வ புண்ணியம்(5), எல்லாவற்றிலும் திருப்தியான நிலை என்னும் 11ம் பாவங்கள் வலிமையாக மூலபாவங்களாக அமைவதால் செவ்வாய் தசை கெடுபலனிற்கு மாறாக அனைத்திலும் வெற்றி அடைய வைத்திடும் யோக பலனை அளித்திடும். எதிரிகளும் நண்பர்களாவார்கள்.

செவ்வாய் புக்தி 30/08/1987 - 26/01/1988

எம்.ஜி.ஆர். அவர்கள் 1987 டிசம்பரில் மரணமடைந்ததும்
ஜானகி அம்மையாரின் ஆதரவாளர்களால் ஜெயலலிதா அம்மையார் அவமான படுத்தபட்டார்.

அரசியலைவிட்டே ஓடவிட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் ஆர்.எம். வீரப்பன் போன்ற மூத்த தலைவர்கள் உட்பட இந்த சதிக்கு உடந்தையாக இருந்தார்கள்.

ஜெயலலிதா அம்மையாரின் தலைமையிலும் மறைந்த எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என். ஜானகியின் தலைமையிலுமாக அ.இ.அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது.

யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து. என்பது போல் ஜெயலலிதா அம்மையாரை வீழ்த்த நினைத்த ஜானகி அணி அடுத்த சில நாட்களிலே ஆட்சியை பரிகொடுத்து படுகுழியில் வீழ்ந்தது.

ஆர்.எம். வீரப்பன் போன்ற மூத்த தலைவர்கள் தன் பக்கம் இருந்த நிலையில், 1988 ஜனவரி 7ஆம் தேதி புதிய முதல்வராக பதவியேற்றார் வி.என். ஜானகி. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், அவருக்கு 97 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மத்திய அரசு ஜானகி தலைமையிலான மாநில அரசைக் கலைத்து தேர்தலை அறிவித்தது.
செவ்வாய் தசை - குரு புக்தியில் முழு அரசியலில் காலூன்றிய ஜெயலலிதா அம்மையார் ஆவேசம் குறையாமல் 1989ல் நடந்த இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. இரு பிரிவுகளாக பிரிந்து போட்டியிட்டது. 
இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் பிரிவு சேவல் சின்னத்திலும் ஜானகியின் பிரிவு இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டது.
தோல்வியின் அடையாளம் தயக்கம்!வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!!
என்ற ஓஷோவின் தன்னம்பிக்கை வரிகளுக்கேற்ப இந்தத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்ற, ஜெயலலிதா பிரிவு 27 இடங்களில் வெற்றிபெற்றது. 
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது என்பது சாணக்கியர் போதனை.

என்னதான் எம்.ஜி.ஆரின் மனைவி, கட்சியின் மூத்த நிர்வாகிககளின் ஆதரவு, பணபலம் என்ற அடையாளம் இருந்தாலும்   ஜானகி அம்மையாருக்கு அரசாளும் யோகம் விதிபடி இல்லை. கிரகங்களின் ஆசியின்றி எதும் நிகழ்ந்துவிடாது என்பதற்கு இது ஒரு நற்சான்று.

ஜானகி அணி வெறும் இரண்டு இடங்களையே கைப்பற்றியது. ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஜானகி அணி தோற்றுவிடட்டது.

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா அம்மையார் வெற்றிபெற்றார்.

அந்தத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்துவிட்டாலும், அ.தி.மு.கவை ஒன்றாக்கி இரட்டை இலைச் சின்னத்தை மீட்டார் ஜெயலலிதா. தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன் அவர் பதவியேற்றார்.

இந்த அசாத்திய நிகழ்வுகளுக்கு செவ்வாய் தசை பக்கபலமாக அமைந்ததை நன்கு உணரமுடிகின்றது.
செவ்வாய்(1,5,11) தசை - குரு(1,5,9,11) புக்தி - குரு அந்திரம் - ராகு(8,11) சூட்சமத்தில்,1989 மார்ச் 25ஆம் தேதி தி.மு.க முதல்வர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது ஏற்பட்ட மோதலில், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். 
அந்த அவையில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் முதலமைச்சராகத்தான் மீண்டும் அந்த அவைக்குள் நுழைவேன் என்றும் கூறினார். இரண்டு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டுவிட, அடுத்து நடந்த தேர்தலை துணிவுடன் எதிர்கொண்டார்.

"பயிற்சி - தந்திரம் - துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்". இந்த வரிகள் போர்கள வெற்றிக்கு மட்டும் இல்லை அரசியல் களத்தில் போட்டியிடும் தலைவர்களுக்கும் தான்.
செவ்வாய்(1,5,11) தசை - புதன்(1,11) புக்தி - சுக்கிர (1,7,11) அந்தரம் - குரு (1,5,9,11) சூட்சமத்தில், 1991ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அந்த சபதத்தை நிறைவேற்றினார் ஜெயலலிதா.
இந்த காலகட்டத்தில் நடந்த புதன் புக்தி மூலபாவத்திற்கு சாதகமாக செயல்பட்டு மாபெரும் வெற்றியை ஈட்டு தந்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் வெற்றிகளை மட்டுமல்லாது மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டவர் ஜெயலலிதா அம்மையார்.
ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பல சோதனைகளைக் கடந்து சவால்களை துணிவுடன் சந்திக்க செவ்வாய்  தசை பெரிதும் உதவியது,  அரச பதவியில் அமர வைத்து அழகு பார்த்தது.
செவ்வாய் ஒரு தீய கிரகம் என்றாலும், தான் நின்ற சாரத்தால் சுபத்துவம் அடைந்து தன் தசையில் ஜெயலலிதா அம்மையாருக்கு ராஜ யோகத்தையே கொடுத்தார்.

அதன் பிறகு காலமும் சற்று அசைத்து பார்த்தது அவரின் பிரகாசமான அரசியல் வாழ்வை வீழ்த்திட. தான் ஒரு அசைக்க முடியாத பெண் சக்தி, பேரரசை நிர்வகிக்கும் ராஜராணி என்ற பிம்பத்தை மனதில் திரும்ப திரும்ப பதியவைத்தவர்.

இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பல வழக்குகளில், தான் முதல்வராக இருந்த காலத்திலும் நீதிமன்ற படிகளில் தடம் பதித்து தன் பதவியை இழந்து, சிறைவாசத்தை அனுபவித்து, மீண்டும் முதல்வர் பதவியை அடைய பல சோதனைகளை அடுத்து வந்த ராகு தசையில் சந்தித்தார். அரசியல் வாழ்வையே புரட்டி போட்டது ராகு தசை.

மேலும் இதை பற்றிய விரிவான சார ஜோதிட ஆய்வு தகவல்களை அடுத்து வரும் தொடர் பதிவுகளில் விரிவாக காணலாம்.

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634  Jbm2k07@gmail.com

Related Post: