உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!
Business Magnet |
நீங்கள் பார்க்கும், வேலை, தொழில் உங்களுக்கு ஆத்மார்த்தமாக பிடித்திருக்கிறதா? என்று கேட்டால், பலரும் அதற்கு இல்லை என்ற பதிலைத்தான் சொல்வார்கள்!
ஒரு சிலர்தான் தங்கள் மனதுக்குப் பிடித்த வேலையில் முழுமையாக ஈடுபட்டு, அதில் இறங்கி வெற்றி மேல் வெற்றி அடைவார்கள்.
அதற்குக் காரணம் என்ன...??? ஒவ்வொருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்து அவரவர் தொழிலில் சாதிக்க வைக்கின்றது.
எந்தத் தொழிலுக்கு எந்த கிரகம் துணை நிற்கும்? என்று தெளிவாக அறிந்துவிட்டால், அதற்கேற்ற தொழிலை செய்து எளிமையாக தொழிலில் சாதிக்கலாம்.
அந்த வகையில் திரைப்பட துறையில் எண்ணற்ற தொழில்நுட்ப பிரிவுகள் இருந்தாலும், பிரதானமான துறையாக கருதப்படுவது ஒளிப்பதிவு துறை. ஒளிப்பதிவு நிபுணரின் பங்கு திரை உலகில் அதிமுக்கியம் வாய்ந்தது.
ஒளிப்பதிவாளருக்கான கிரக காரகத்துவங்கள்
புகைப்படம், வீடியோ போன்ற ஒளி பதிவுகளுக்கு காரகத்துவமான கிரகம், சாயா கிரகமான ராகுவே ஆவார். மேலும் கணினி, இணையம், அலைபேசி, கம்பி மற்றும் காற்றுவழி செய்தி, எலக்ட்ரானிக்ஸ், மின்காந்த அலை, லேசர் ஒளி கற்றை , பிரமாண்டம், ரசாயனம் மற்றும் மின்சாரம் போன்ற இயற்கை அல்லாத செயற்கை காரகங்களுக்கு ராகுவே காரணகர்த்தா ஆவார்.
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகு பலமாக இருந்தால் மேற்கண்ட துறையில் கொடிகட்டி பறப்பார்கள்.
ஒருவர் ஒளிப்பதிவு நிபுணராக ஆகவேண்டும் என்றால் ஜன ஜாதகத்தில் ராகு, சுக்கிரன், புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் நன்கு பலமான நிலையில் இருக்க வேண்டும்.
ஆயகலைகள் 64க்கும் அரசன் சுக்கிரன். இவர் அழகு, நளினம், கலைநயம், ரசிப்பு, களிப்பு, மகிழ்ச்சி போன்ற காரகத்துவங்களை அளிப்பவர். ஒருவர் கலைகளில் மிகச்சிறந்தவராக ஜொலிக்க வேண்டும் என்றால் சுக்கிரனின் ஆசி அதிமுக்கியமானது. சுக்கிரன் ஜாதகத்தில் பலமாக அமைந்தால் தான் கலைகளில் சிறந்தவர்களாக, பேரும் புகழும் அடையமுடியும்.
புதுமையான சிந்தனையும், வித்தியாசமான அணுகுமுறைகளையும், புத்தி கூர்மையையும் ஒருங்கே அளிப்பவர் புதபகவான் ஆவார். கலை அறிவை வளமாக அளிக்க புதனின் ஆசி தேவை.
ஆழ்ந்த புத்தி காரகன் என்று அழைக்கக்கூடிய பிரகஸ்பதி என்னும் குரு, ஆழ்ந்த புத்தி கூர்மை, நிதான தன்மை, கலை ஆசி தந்து மிகசிறந்த கலைஞனாக விளங்க குரு பலமுடன் இருப்பது ஒரு ஒளிப்பதிவு நிபுணருக்கு மிகவும் அவசியம்.
மேலும் பொது காரகங்களான சம்பாத்திய காரகன் சூரியன், மன காரகன் சந்திரன், மறைநிலை ஞான காரகன் கேது, தொழில் காரகன் சனி, தொழில் நுட்ப அறிவு, விரைந்து செயல்படுதல், திட காரகனான செவ்வாய் கெட்டு விடாமல் பலமுடன் இருப்பது, தொழிலில் நீண்ட நாள் நிலைத்து நின்று பெரும் செல்வம் ஈட்ட பேருதவியாக இருக்கும்.
பாவ காரகங்கள்
கலைகளுக்கு தலையான பாவம் ஐந்தாம் பாவமே. பூர்வ புண்ணிய ஸ்தானம் என்னும் ஐந்தாம் பாவம் பொழுது போக்கு, ரசனை, கலைகள், விளையாட்டு, இசை, கேளிக்கை, சினிமா, சின்னத்திரை, வலையொளி, கேளிக்கை விடுதி, கவர்ச்சி, மயக்குதல், கற்பனை கலந்த உணர்வு, இயற்கை அறிவு, படைப்பாற்றல் மற்றும் காதல் போன்ற எண்ணற்ற மனித ரசனைக்கு தேவையான காரகத்துவங்கள் ஐந்தாம் பாவத்தில் உள்ளடக்கியுள்ளன.
ஒருவர் கலை துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் ஐந்தாம் பாவம் தனக்கு சாதகமான பாவங்களை நல்ல நிலையில் தொடர்புகொள்ள வேண்டும்.
குறிப்பாக தனித்தன்மை, செயல்திறன், சுயசிந்தனை என்னும் லக்ன பாவம், புதுமை சிந்தனை, மாற்றம் என்னும் மூன்றாம் பாவம், கலை அறிவை அளிக்கும் ஐந்தாம் பாவம், பொது ஜனங்களின் எதிர்பார்ப்பு என்னும் ஏழாம் பாவம், ஆய்வு சிந்தனைகளை அளிக்கும் ஒன்பதாம் பாவம் ஆகிய பாவங்கள் சாதகமான பாவங்களுடன் தொடர்பு பெற்று இருப்பது ஒருவரை மிக சிறந்த கலைஞனாக உருவாக்கிவிடும்.
ஒளிப்பதிவு மற்றும் அழகு கலையில் படிப்பை முடித்துவிட்டு இந்த துறையிலே சொந்தமாக சினிமா ஸ்டூடியோ வைத்து மிகச்சிறப்பாக சாதித்து வரும் பெண், இளம் தொழில் அதிபர் மற்றும் ஒளிப்பதிவு நிபுணரின் ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.
கிரக தொடர்புகள்
உதாரண ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்களின் தொடர்பு ஒற்றைப்படை பாவங்களான 1,3,5,7,9,11 என்று, இந்த துறைக்கான, சாதகமான பாவங்களையே தொடர்பு கொண்டுள்ளதால், ஜாதகரின் இயல்பு கலை சார்ந்த என்ன ஓட்டம் அதிகம் காணப்படும்.
புதன் மற்றும் குருவை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் சுக்கிரன் நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரமாக அமைந்துள்ளதை கவனிக்கவும். இங்கு ராகு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் பெரும் பகுதியான கிரகங்கள் அடைந்துள்ளதால் ஜாதகர் அழகு கலை மற்றும் ஒளிப்பதிவு துறையில் தனது படிப்பை தேர்ந்தெடுக்க ஏதுவாக அமைந்துவிட்டது.
பாவ தொடர்புகள்
என்சான் உடம்புக்கு தலையே பிரதானம், அது போல் ஒரு ஜாதகரின் லக்ன பாவம் தலையாய பாவமாக கருதபடும். இந்த ஜாதகத்தில் ஞான காரகன் கேது லக்ன பாவத்திற்கு உபாதிபதியாக அமைந்து அவன் நினற நட்சத்திரம் கலைக்கு அதிபதி சுக்கிரன் மற்றும் உப நட்சத்திர அதிபதி ராகு. ஆக ஜாதகரின் வாழ்வியல், கலை துறை சார்ந்தே அமையும்.
மேலும் 12ம் பாவத்தை தவிர, மற்ற அனைத்து பாவங்களிலும் நட்சத்திர அதிபதியாக ராகுவே முன்னின்று அமைந்து அனைத்து பாவங்களையும் ஆதிக்கம் செலுத்துவதால் ஜாதகி தனக்கு வெற்றியையும், யோகத்தையும் அளிக்க கூடிய அழகுக்கலை, புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு துறையில் நிபுணத்துவம் அடைய விதி கொடுப்பினை அமைந்ததால், ஜாதகி இந்த தொழிலில் சாதித்து வருகிறார்.
சமீபத்தில் வந்த பல வெற்றி படங்களுக்கு ஒளிபதிவு நிபுணராக பணியாற்றி உள்ளார். சின்னத்துரை படப்பிடிப்புகளில் இவரது நிறுவனத்தின் பங்களிப்பு சிறப்பான முறையில் இடம்பிடித்து வருகின்றது.
ஜாதகி தொழிலில் நன்கு சம்பாதிப்பாரா?
அனைத்து பாவ முனைகளின் தொடர்பு 2,4,6,8,10,12ம் பாவங்களையே தொடர்புகொள்வதால், இது பொருளாதாரத்திற்கு மிகவும் சிறப்பான அமைப்பு. ஜாதகி தொழில் மேன்மையுடன் செயல்பட்டு கோடி கோடியாய் சம்பாதிப்பார்.
ஒருவர் கோடி கோடியாய் சம்பாதிக்க ஜாதகத்தில் எந்த மாதிரியான அமைப்பு இருக்க வேண்டும் என்பதை "கோடி கோடியாய் குவிக்கும் தொழில் யோகம் யாருக்கு??" என்ற நமது முந்தைய பதிவில் மிக விளக்கமாக படித்தறிந்தோம்.
தனகாரகன் சுக்கிரன் பொருளாதார வரவை பெருக்கும் பாவங்களான தனஸ்தானம் (2), தொழில்நுட்ப அறிவை அளிக்கும் நான்காம் பாவம், வெகுஜன தொடர்பை அளிக்கும் ஏழாம் பாவம், போராடி தொழிலை முன்னுக்கு கொண்டுவரும் எட்டாம் பாவம், தொழில் மூலம் நல்ல அந்தஸ்த்தை அளிக்கும் பத்தாம் பாவம் மற்றும் ஒன்றிக்கு மேற்பட்ட தொழில் அமைப்பை கொடுக்கும் 12ம் பாவத் தொடர்புகள் நல்ல பொருளாதார வரவை தரும்.
ஜாதகி புதுமை படைப்பதில் வல்லவரா?
ராகு மற்றும் புதன் ஒற்றை படை பாவங்களின் தொடர்பு மற்றும் மூன்றாம் பாவம் 3,6,9 தொடர்பு தொழில் ரீதியான புதுமை படைப்பதில் ஜாதகர் சிறப்பாக காணப்படுவார். சனி உபாதிபதியாகி அமைந்ததால் அவசரமின்றி நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவார்.
நுண்ணுணர்வும் படைப்பாற்றலும்
ஒரு ஒளிபதிவாளருக்கு தேவை நுண்ணுணர்வும் படைப்பாற்றலும்.
ஒளிபதிவாளர் திரு. பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ, அதுவே உன்னை சாதனையாளனாக உருவாக்கும்" என்பார்.
ஜாதகி நிர்வாக திறன் உடையவரா?
தொழில், ஜீவனம், கருமம், ராஜ ஆதிக்கம், அதிகார ஆளுமை, புகழ், கெளரவம் முதலாளி யோகம் மற்றும் தலைமை தாங்கும் பண்பு போன்ற காரகங்களை குறிக்கும் பாவம் 2,4,6,8,10,12 தொடர்பு, ஜாதகியை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்திவிடும். மிக பெரும் நிறுவனத்தை நிர்வகிக்கும் பன்முக திறமை பெற்றவராக ஜாதகி திகழ்வார்.
ஜாதகி தனது தந்தையாரின் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராக இணைந்து தொழிலை மேம்படுத்தி வருகிறார்.
பொருளாதார ஏற்றங்களுக்கான காலங்கள்
ஜாதகிக்கு பொருளாதார வரவை நிர்ணயிக்கும் பெரும்பங்கு செவ்வாய் தசை, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் பங்கெடுத்து உள்ளது. இந்த கால கட்டங்களில் ஜாதகி நல்ல பொருளாதார ஏற்றத்தை அடைவார்.
கேது, சனி மற்றும் சூரிய, தசை, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் கால கட்டங்களில் மிதமாகவும், மற்ற கிரக காலங்களில் சராசரியான அளவில் பொருளாதார ஏற்றத்தை அடைவார்.
ஜாதகி பிரபலம் ஆவாரா?
ஒருவர் தனது துறையில் பிரபலம் அடைய வேண்டும் என்றால் அவருக்கு யோகம் அளிக்க கூடிய கிரகங்களின் தசை நீண்ட காலம் அமைய வேண்டும்.. இந்த ஜாதகிக்கு தொழில் ரீதியில் யோகம் அளிக்க கூடிய செவ்வாய் தசை 7வயதிலே முடிந்துவிட்டது. அதற்க்கு அடுத்த ராகு தசை தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். ஜாதகிக்கு செப்டம்பர் 2020இல் ராகுதசை செவ்வாய் புத்தியில் நல்ல முன்னேற்றம் அடைவார். வெகு ஜனங்கள் அறியும் உன்னத கலை நிபுணராக திகழ்வார். பட்டம், புகழ், பதவி யோகம் அடைவார்.
அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் கிரகங்களின் பலம் மற்றும் பாவ தொடர்பை ஆராய்ந்து எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறியலாம்.
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
தொலைபேசி மற்றும் நேரில் ஜாதகன் பலன் அறிய எம்மை தொடர்புகொள்ளலாம்
தங்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள சேவைகள் வழங்கபடும்.
- பிறந்த நேர சரிபார்ப்பு
- துல்லியமாக கணிக்கபட்ட உங்கள் ஜாதகத்திற்கு பொது பலன் அறிதல்
- உங்களின் கேள்விகளுக்கு ஏற்ப ஜாதக பலன் அறிதல்.
- யோகம் அளிக்கும் தசா/புக்திகளை அறிதல்
- குடும்ப வாழ்விற்கு சாதகமான அம்சத்தை அறிதல்
- உங்கள் பொருளாதார வாழ்விற்கான சாதகமான கால சூழலை அறிதல்
- நடப்பு கோச்சாரத்தின் பலன் அறிதல்
- உங்கள் ஜாதகபடி எதிர்கால வாழ்வை அறிதல்
- திருமணத்திற்கான யோக நேரத்தை அறிதல் மற்றும் வரன் பொருத்தம்
- 16 பக்கம் துல்லிய கணக்கீடுகளுடன் கூடிய உங்கள் ஜாதகம் PDF வடிவில் வழங்கபடும்.
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634
Email- Jbm2k07@gmail.com
Email- Jbm2k07@gmail.com