உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!
அனைவருக்கும் வணக்கம்!
அரசியல் யோகம் பற்றி தொடர் பதிவுகளை "
அரசியல் எனக்கு ஒத்து வருமா? தலைவனாக்குமா தலையெழுத்து??" என்ற தலைப்பில் நமது முந்தைய பதிவை படித்திருப்பீர்கள்.
இது நமது இரண்டாவது பதிவு.
முதல் பதிவை, இதுவரை படித்திராதவர்கள், இந்த லிங்கை கிலிக் செய்யவும்.
அரசியல் எனக்கு ஒத்து வருமா? தலைவனாக்குமா தலையெழுத்து? - பாகம் 1
சென்ற பதிவில் அரசியல் ஈடுபாட்டிற்கான, ஜாதகத்தில் முக்கிய கிரக அமைப்புகள், பாவ முனை தொடர்புகள், கிரக காரகங்கள், பாவ காரகங்கள், அரசியலுக்கான அடிப்படை விதிகள் ஆகியவற்றை விளக்கமாக
பார்த்தோம்.
உதாரண ஜாதகமாக, இந்திய அரசியலில் பிரமிப்புடன் பார்க்கபட்ட, அரசியல் ஆளுமையில் சிகரம் கண்ட, மறைந்த முன்னால் மாண்புமிகு முதல் அமைச்சர். J. ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில், அரசியலுக்கான கிரக தொடர்புகள், பாவதொடர்புகளை சார ஜோதிட விதிகளை கொண்டு ஆராய்ந்தோம்.
இந்த பதிவில் தசா புக்திகளை கொண்டு அவர் வாழ்நாளில் கிரகங்கள் நிகழ்த்திய சுப மற்றும் அசுப யோக பலன்களை தசா புக்தி வாரியாக மிக துல்லியமாக ஆராய்வோம்.
அரசியல் ஆர்வம் கொண்டு அதன் ஆழம் அறியாமல் அல்லல்பட்டவர்களும் ஏராளம் உண்டு. அரசியல் அரிச்சுவடை அறிந்து அதற்கென்றே வாழ்வை அர்ப்பணித்து வெற்றி கண்டவர்களும் உண்டு.
இருநிலையிலும் அரசியல் யோகம் வேலை செய்தாலும், நீடித்த அரசியலில், யார் பெயர் போற்றும் தலைவனாக விளங்குகின்றாரோ! அந்த அரசியல் தலைவர்களைதான் மக்கள் ஆதரித்து கொண்டாடுவார்கள்.
அவர்கள் தான் மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிப்பார்கள்.
அரசியலில் நீண்ட காலம் நிலைத்து, பதவி அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு விதியும், மதியும் பலமாக செயல்படவேண்டும். விதி கொடுப்பினை இருந்து, மதி என்னும் தசா/புக்திகள் சாதகமற்று நிகழ்த்தினாலோ அல்லது தசா/புக்திகள் குறைந்த கால சாதக பலனை அளித்தாலோ.. அரசு பதவியில் நிலையற்ற தன்மையையே அனுபவிக்க நேரிடும்.
மேலும் லக்ன கொடுப்பினை, பூர்வபுண்ணிய கொடுப்பினை, பாக்கிய ஸ்தானத்தின் அருளாசி போன்றவற்றின் பங்கு மிக மிக முக்கியம்.
அந்த வகையில் தமிழக முன்னால் முதல்வர் அம்மா அவர்களின் ஜாதகத்தில் தசா புக்தி கொடுப்பினையை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.
கேது தசை
அம்மா அவர்கள் ஜனித்த போது தசா இருப்பு
கேது தசை 03 வருடம் 06 மாதம் 06 நாட்கள் தசை நடத்தியது.
தசா காலம்
24-02-1948 முதல்
30-08-1951 வரை.
கேது தசை ராகு புக்தியில் பிறந்து, ஒன்ரை வயதில் சனிபுக்தி ஆரம்பம்.
தசா நாதன்
கேது (6,8) மூல பாவங்களை எடுத்து நடத்தியுள்ளது.. புத்தி நாதன்
சனி 4,8,12ம் பாவங்களை நிகழ்த்தியதன் விளைவு, இந்த காலகட்டத்தில் தந்தையை இழக்க நேர்ந்தது.
இயற்கை அசுபர்களான கேது, சனி இனைந்து
4,6,8,12 பாவங்களை இயக்கியதால் தந்தையை குறிக்கும் 9ம் பாவம் செயலிழந்து போய்விட்டது.
ஜனன ஜாதகத்தில் தந்தை காரகன் சூரியன், ராகு நட்சத்திரத்திலும், சனி உப நட்சத்திரத்திலும் அமர்ந்து, லக்னத்திற்கு விரைய ஸ்தானம் என்னும் 12ம் பாவம் தொடர்பு, தந்தைக்கு கண்டத்தை குறிக்கும் இந்த காலகட்டத்தில், குழந்தை பருவத்திலே தந்தையை இழந்துள்ளார்.
சுக்கி்ர தசை (30/08/1951 - 30/08/1971 )
சுக்கிரன் ஒரு இயற்கை சுப கிரகம். அழகு, கவர்ச்சி, நளினம், காதல், கலை நிகழ்ச்சி, கேளிக்கை ஆடம்பரம், நடனங்கள், இன்ப நுகர்ச்சி மற்றும் சந்தோஷிக்க கூடிய அனைத்து காரகங்களுக்கும் சுக்ரனே அதிபதி.
அம்மா அவர்களுக்கு
03வயது 06 வருடம் 06ம் நாள் சுக்கிர தசை ஆரம்பம். இது 20 வருடம் நடத்த கூடிய மிக நீண்ட தசை. ஒன்பது கிரகங்களின் புக்திகளும் நீண்ட அளவில் சுக்கிர தசையில் செயல்படும்.
அம்மா அவர்களின் ஜாதகத்தில்,
சுக்கிரன் 1,7,11 ஆகிய ஒற்றைபடை பாங்களை மூலபாவமாக ஏற்று தசையை நடத்தியுள்ளார். இது அகவாழ்விற்கு ஏற்ற நல்ல தசை.
நான்கு வயதில் இருந்து பதினாறு வயது முடிய, அம்மா அவர்கள் ஜாதகத்தில், பள்ளி படிப்பிற்கு தசா புக்திகளின் சாதகமான நிலையை ஆராய்வோம்.
சுக்கிர திசையில் சுக்கிர புக்தியில் பாதிவரை மைசூரில் வாழ்க்கை பின்பு மீதி பாதியில் சென்னையில் வளர ஆரம்பித்தார்.
சுக்கிர புக்தி 1,7,11 (
3வ 6மா 6 நா - 6வ 10மா 5நா)
சூரிய அந்தரம் (03/1952 - 05/1952) நான்கு வயதில் ஆரம்பம், சூரியன் 3,12 பாவங்களை குறிகாட்டி இயங்குவதால், தற்சமயத்தில் வாழும் இடத்தைவிட்டு, வேறு இடத்தில் வசிக்கும் நிலையை தந்துவிடும்.
- 3 -> பிரயாணம், இட பெயர்ச்சி
- 12 -> இழத்தல், பிரிதல், ஊரைவிட்டு பிரிதல் அல்லது மறைந்து வாழ்தல்.
நான்கு வயதில் அம்மா அவர்களின் குடும்பம், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார்கள்.
சூரிய அந்தரம் நடத்தும் 12 ம் பாவ காரகங்கள் ஒத்து போகின்றது அல்லவா...!
சென்னை வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டுவரை சர்ச் பார்க் பள்ளியில் பயின்றார்.
அம்மா அவர்கள் தன்னுடைய சிறு வயதிலேயே எஸ்.ஜே. சரஸா என்ற சிறந்த ஆசிரியரிடம் பரதம் பயில தொடங்கினார்.
தனது 4 வயது முதலே கர்நாடக இசையையும், பரத நாட்டயத்தையும் கற்று தேர்ந்தார்.
அடுத்தடுத்து வந்த புத்திகளும் பள்ளிபடிப்பிற்கு ஏதுவாகவும், கலையை கற்று சிறந்து விளங்கவும் மிகவும் சாதகமாகவே இருந்தன.
- சூரிய புக்தி 3,12 - (6வ 10மா 5 நா - 7வ 10மா 5நா)
- சந்திர புக்தி 2,6,8,10 - (7வ 10மா 5நா - 9வ 6மா 5நா)
- செவ்வாய் புக்தி 1,5,7,11 - (9வ 6மா 5நா - 10வ 8மா 5நா)
மேற்கண்ட புக்தி காலங்களில் மோகினி ஆட்டம், கதக்களி, மணிபூரி போன்ற நடன கலைகளில் தேர்ந்தவராக திகழ்ந்தார்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் புலமைபெற்று பன்மொழி வித்தகராகா விளங்கினார்.
ராகு புக்தி 8,11 (10/1958 - 10/1961) - (10வ 8மா 5நா - 13வ 8மா 4நா)
சுக்கிர தசை -
1,7,11
ராகு புக்தி -
8,11
புதன் அந்தரம் -
1,11
செவ்வாய் சூட்சமம்
1,5,11 (13/05/1960 - 22/05/1960)
நிகழ்ந்த இந்த கால கட்டத்தில், தனது 12 வயது 02 மாதம் நடைபெற்ற காலத்தில் மே மாதம் 1960ஆம் ஆண்டு, மைலாப்பூர் ரசிக ரஞ்சினி சபாவில் அவர் நடன அரங்கேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
- 1 ம் பாவம் -> சுய திறன் வெளிபடுதல், சுய முயர்ச்சி
- 5 ம் பாவம் -> கலை, நாட்டியம், கேளிக்கை நிகழ்ச்சி
- 11 ம் பாவம் -> பிரமாண்ட கூட்டம், ஆசை நிரைவேறுதல், முழு திருப்தி அடைதல், புகழ் அடைதல்
இந்த அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பங்கேற்றார். ஜெயலலிதா அம்மா அவர்களின் நடனத்தைப் பார்த்து வியந்த சிவாஜி அவர்கள், "ஜெயலலிதாவுக்கு திரைப்படத்துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதாக அவரது அம்மா, சந்தியா அம்மையாரிடம் கூறினார்". ஆனால், அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சுக்கிர திசை காலத்தில் அம்மா அவர்கள், நடனம் மட்டுமல்ல இசையிலும் தேர்ச்சி பெற்றவர். கிளாசிக்கல் மியூசிக், மேற்கத்திய இசை, பியானோ வாசிக்கவும் பயின்றிருக்கிறார்.
தொடக்கத்தில் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு, சினிமாவில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், திரைப்படத்துறை அவரை விடுவதாக இல்லை.
ஆம் விடுவாரா ராகு பகவான்; பிரம்மாண்ட படுத்துவதில் ராகு பலவான் அல்லவா..! ராகு புக்தி இதை நிகழ்த்தியது.
குரு புக்தி 1,5,9,11 (10/1961-06/1964) - (13வ 8மா 4நா - 16வ 4மா 4நா)
அம்மா அவர்களின் குருபுக்தி காலங்கள் நல்ல யோகமாகவே செயல்பட்டது.
சிறு கூட்டங்களில் நடனம், நாடகம் என்று நிகழ்ச்சிகளில் திறமையை வெளிபடுத்துபவராக பார்க்கபட்டவர், வெள்ளி திரையில் ஜொளிக்கும் பெரும் பாக்கியத்தை குருபுக்தி சிறப்பாக வழங்கியது.
ஒருவர் நடிகனாகவோ-நடிகையாகவோ சிறந்து விளங்கும் யோக அமைப்பு: சார ஜோதிடத்தில், 5ம் பாவ முனை உபாதிபதி நின்ற நட்சத்திர அதிபதி மற்றும் உப நட்சத்திரத்தின் அதிபதி 5-ஆம், 6-ஆம், 10-ஆம் வீட்டு பாவ முனைகளுடன் தொடர்புகொண்டால் பிரபல நடிகராகளாம். அதேவேளையில் 11-ம் பாவமுனையுடனும் ஏற்படும் வலுவான தொடர்பு, நல்ல வருமானமுடைய செல்வாக்கு உடைய நடிகராக இருப்பார்.
ஜெயலலிதா அம்மையார் 1965 - 1980 இடையேயான காலக்கட்டத்தில் தென் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார்.
இந்த அமைவில் செவ்வாயின் சம்பந்தம், நடிகர் நடிகைகளில் தலைசிறந்தவாராக இருப்பார். ஜன கூச்சமோ, மேடை கூச்சமோ எதுவும் இருக்காது. வெற்றி மேல் வெற்றியை வாரி வழங்கிடும். இது ஒரு அதிசிறப்பான யோக அமைப்பு.
அம்மா அவர்களின் ஜாதகத்தில் நிழல் கிரகமான கேது 5ம் பாவத்திற்கு உபாதிபதியாக அமைந்து குரு நட்சத்திரத்திலும், புதன் உப நட்சத்திரத்திலும் அமர்ந்து, 6,8ம் பாவ தொடர்பு; 5ம் பாவத்திற்கு குரு, புதன், சந்திரன், ராகு மற்றும் சுக்கிரனின் 10,11ம் பாவங்களின் தொடர்பு 5ம் பாவத்தின் காரகங்களை வலுபெறவே செய்யும்.
நடப்பில் உள்ள தசாபுக்திகளும் மிகவும் சாதகமாகவே உள்ளதால் திரை துறையில் நுழைய நேர்ந்தது.
சுக்கிர தசை, குரு புக்தி, சுக்கிர அந்தரம், ராகு சூட்சமம் (04/1963 - 05/1963) இந்த காலகட்டம் நடிப்பு துறையில் கால்பதிக்க வழி வகுத்துள்ளது.
ஒரு முறை தாயார் சந்தியா அவர்கள், தன்னுடன் ஜெயலலிதா அம்மையாரை திரைப்படத் தளத்துக்கு அழைத்துச் சென்றபோது, இறைவி பார்வதியின் சிறு வயது வேடத்தில் நடிக்க நேரிட்டது. அதன் பிறகு தன்னுடைய 15 வயதில் கன்னடப் படமான 'சின்னட கொம்பே' திரைப்படத்தில் அறிமுகமானார்.
மனித வாழ்வில் நடைபெரும் அனைத்து சம்பவங்களிலும், கிரகங்களின் தொடர்பு ஒவ்வொரு அங்கத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளது என்பதை கிரக காரகங்களையும், பாவ காரகங்களையும் மற்றும் தசா புக்திகளையும் தொடர்புபடுத்தி பார்க்கும் போது எவ்வளவு துல்லியாமாக அறிய முடிகிறது. இது தான் சார ஜோதிடத்தின் சிறப்பு அம்சம். துல்லிய கணக்கீடுகள் ஒருபோதும் தவறாது.. இதுவே ஜோதிட அறிவியல் நமக்கு உணர்த்தும் நிதர்சனமான உண்மை.
சனி புக்தி 4,8,12 (06/1964 - 08/1967) - (16வ 4மா 4நா - 19வ 6மா 4நா)
பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் தடை ஏற்படுத்தும் அமைப்பு 8,12 மற்றும் 5,9 பாவங்களை தொடர்புபடுத்தி நடத்தும் தசா புக்திகள். அதற்கு ஏற்றார் போல் அம்மா அவர்களின் ஜாதகத்தில் சனி புக்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்கள் பல இன்னல்களை தந்தன.
சினிமா துறையில் பிரபலம் ஆன பிறகு கல்லூரி படிப்பை தொடர இயலாமல் படிப்பை கைகழுவினார். கல்வி தடையை சிறப்பாக செயல்படுத்தியதில் சனி புக்தியின் பங்கு பெருமளவு.
அதன் பிறகு தனது கடின உழைப்பால் வெள்ளி திரையில் மிக சிறந்த நாயகியாக முன்னனி கதாநாயகர்களுடன் நடித்தார்.
கன்னடத்தில் வெற்றிபெற்ற ஜெயலலிதா அம்மையாரின் திரைப்படங்கள், சின்னட கொம்பெ (1964), மவன மகளு (1965), நன்ன கர்டவ்யா (1965), படுகுவா டாரி (1966).
புதன் புக்தி 1,11 (19வ 6மா 4நா - 22வ 4மா 4நா),
கேது புக்தி (22வ 4மா 4நா - 23வ 6மா 6நா)
ஜெயலலிதா அம்மையார் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார். மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
மக்கள் பலரும் ஜெயலலிதாவின் அம்மையாரின் நடிப்பை வெகுவாக ரசித்தார்கள். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு 'கலைசெல்வி' என்ற பட்டத்தை அளித்தார்கள்.
இவர் ம. கோ. இராமச்சந்திரன் உடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது.
தன் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
அடுத்தடுத்து வந்த
சூரிய தசை 6 வருடங்கள் (30/08/1971 - 30/08/1977) முழுவதுமே சினிமாவில் கோலேச்சி இருந்தார் ஆனால் இந்த தருனத்தில் தன் தாயாரின் திடீர் மரணம் பேரிழப்பாக இடிபோல் இரங்கியதை தாங்க முடியாமல் பெருங்கவலையில் ஆழ்ந்தார்.
நவம்பர் 01, 1971 அன்று வேதவள்ளி அம்மையார் இறந்தார்கள். அப்போது ஜெயலலிதா அம்மையாருக்கு வயது 23வ 08மா 08நாள்.
சூரிய தசை (3,13) - சூரிய புக்தி (3,12) - சனி அந்தரம் (4,8,13) - ராகு (8,11) சூட்சமம். ராசியாதிபதி சூரியன் அம்மா அவர்களுக்கு ஏதாவது ஒரு இழப்பை தன் தசை, புக்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் கொடுத்து வந்திருக்கின்றார்.
அதே போல் தாயையும் சூரிய தசையில் இழக்க நேரிட்டது. இங்கு தாயை குறிக்கும் பாவத்திற்கு 12ம் பாவமான 3ம் பாவம் மிக வலிமையாக செயல்பட்டதனால் 4ம் பாவ கொடுப்பினை கெட்டு தாயின் இழப்பை சூரியனின் சுய புக்தியிலே நிகழ்த்திவிட்டது.
தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1972ஆம் ஆண்டு ஜெயலலிதா அம்மையார் பெற்றார்.
இந்த விருதானது சூரிய தசை சந்திர புக்தி காலகட்டங்களில் கிடைத்தது.
அதன் பிறகு சூரிய தசை காலக்கட்டத்தில் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட திடைப்படங்களில் நடித்திருந்தார் அதில் பெரும்பாலான படங்கள் நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய வெற்றி படங்கள்.
சினிமா துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்ததால் இல்லற வாழ்வில் தனக்கென குடும்பத்தை பெறாமல் தனிமை வாழ்க்கையில் நெடுங்காலம் வாழ்ந்தார்.
சூரிய தசா காலத்தில் சூரிய புக்தி(3,12), சந்திர புக்தி(2,6,8,10), ராகு புக்தி(8,11), சனி புக்தி (4,8,12), கேது புக்தி(6,8) ஆகிய காலகட்டங்களில் தனி வாழ்க்கையில் மிக பெரிய சங்கடங்களையும், மன வேதனையும், வலிகளையும் சுமந்தே நரக வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இளம் பருவ வயதில் குடும்ப வாழ்க்கை அமையாமல் போனதற்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளது.
அடுத்து வந்த
சந்திர தசை 10 வருடம், (30/08/1977 - 30/08/1987), தசை ஆரம்பத்தில் அப்போது அவருக்கு வயது 29வ 6மா 6நாள்.
ராகு புக்தியில், 1980ல் அவர் நடித்து வெளி வந்த "நதியை தேடி வந்த கடல்" படம் கடைசி படமாக அமைந்து, சினிமா துறைக்கு முழுக்கு போட்டு, அரசியலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது.
அப்போது நடந்த தசாபுக்தி சூழலை ஆராய்ந்தால் இதற்கான காரணங்கள் தெரிந்துவிடும்.
சந்திர தசை (2,6,8,10) மூல பாவமாக தசையை செயல்படுத்த, புத்தி நாதன் ராகு (8,11) யும், அந்தரம் மற்றும் சூட்சம நாதனும், அரச கிரகமான சூரியன் 3,12 பாவ காரகங்கள் வலுவாக செயல்பட்ட நிலையில் ஒரு மாற்றத்தை நிகழ்த்திவிட்டார்.
சந்திர தசை காலத்தில் சினிமா துறையில் நடிப்பதற்கு முடிவுரை எழுதி அரசியலுக்கு தொடக்க உரையை எழுதினார் சூரியன்.
சந்திர தசை அரசியலுக்கு ஜெயலலிதா அம்மையாருக்கு யோகமாக அமைந்ததா?
அடுத்த பதிவில் விரிவாக காண்போம்.
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634 Jbm2k07@gmail.com
Recent Post: