உத்யோகமா? குடும்பமா?
நான் உத்தியோகம் பார்ப்பேனா? வெளிநாட்டில் வேலை பெற்று சம்பாதிப்பேனா?
இளம் பெண் ஒருவரின் கேள்வி "நான் வேலைக்கு செல்வேனா? வெளிநாட்டில் வேலை பெற்று சம்பாதிப்பேனா?" என்று கேள்விகளை தொடுத்து ஜாதகத்தை ஆய்வு செய்து பதில் தருமாறு கேட்டு இருந்தார்.
25 வயது மதிக்கத்தக்க இளம் பெண். அவர் Bachelor of Naturopathy & Yogic Sciences (BNYS) 4.5 வருட படிப்பை முடித்து, தற்போது M.Sc - Yoga for Human Excellence (MYH) தொலைதூர கல்வியில் படித்து வருகிறார். திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகின்றன.
கனவரது குடும்பம் சென்னையில் வசித்து வசித்துவருகின்றனர். இவரது பெற்றோர்கள் நல்ல வசதியான பின்புலம். கனவரது குடும்பமும் நல்ல வசதி. கனவருக்கு சொந்த தொழில். இவர் வேலைக்கு சென்றுதான் அந்த வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் இல்லை.
இவரது கனவருக்கு தன் மனைவி அடுத்தவருக்கு கீழ் வேலை செய்ய விருப்பம் இல்லை. அதற்கு காரணமும் உள்ளது, இவர் வீடு அருகாமையிலே பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை வாடகை விட்டு மாதம் லட்சக்கணக்கில் வாடகை வருமானம். இப்படி பல வழிகளில் இவரது கணவர் குடும்பத்திற்கு வருமானம். வீட்டு வேலைக்கு முழுநேர வேலை ஆட்கள், தோழி அவர்கள் “அடுப்பாங்கரையே கைலாசம், அகமுடையானே வைகுந்தம்” என்று கணவரின் நலனையும் குடும்பத்தையும் கவனித்தால் போதும். அவ்வளவு சௌகரியம்.
எல்லா வசதிகளும் சௌகரியங்களும் இருந்தாலும் இளம் பெண் அவர்கள் வேலைக்கு செல்வதில் உறுதியாக உள்ளார். மேலும் வெளிநாட்டில் தங்கி வேலை செய்ய விருப்பப்படுகின்றார். இது சம்பந்தமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பபடும். கணவரின் எதிர்ப்பு, விருப்பத்திற்கு மாறான வாழ்க்கை, தனது எதிர்கால கனவே சிதைந்து போய்விட்டதே என்ற விரக்தி, இளம் பெண் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உத்தியோகமா? குடும்பமா? எது முக்கியம் என்று அறியாமல் மனக்குழப்பத்தில் இருந்துள்ளார். இந்த தருணத்தில் எம்மை அணுகி தக்க ஆலோசனை வழங்குமாறு கேட்டு இருந்தார்.
ஒருவரின் சம்பாத்தியம் மற்றும் தொழில் அமைப்பு நல்ல முறையில் அமைய சாதகப்படி எவ்வாறு அமைய வேண்டும்?
ஒருவரின் சம்பாத்தியம் அவர் செய்யும் தொழிலை பொறுத்து அமையும். பொதுவாக 10ம் பாவம் என்பது ஜோதிடத்தில் தொழிலை பற்றிய விவரங்களை அறியும் பாவம். இதன் திரிகோண பாவங்கள் 2 மற்றும் 6ம் பாவங்கள் ஆகும். 2ம் பாவம் தன நிலையையும், 6ம் பாவம் ஒருவரிடத்தில் பணி புரிதல் மற்றும் உடல் உழைப்பை தெரிவிக்கும். அதனால் நம் முன்னோர்கள் 2, 6, 10ம் ஆகிய பாவங்களை கர்ம ஸ்தானம் என்று அழைத்தார்கள்.
10ம் பாவம் பொதுவாக 2, 6, 10 ஆகிய பொருள் பற்றான லக்கினத்திற்கு தீங்கு விளைவிக்காத இரட்டை படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் சாதகர் தொழில் ரீதியாக சிறந்து விளங்குவார். மேலும் சுய தொழிலோ அல்லது வேறு ஒருவரிடம் பணிபுரிந்தாலோ நல்ல நிலையில் சம்பாதிக்கும் நிலையை பெறுவார்.
மாறாக 10ம் பாவம் 2, 6, 10ம் பாவங்களுக்கு 12ம் பாவங்களான 1, 5, 9ம் ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டாலோ அல்லது நிலையற்ற பலனை அளிக்கக்குடிய சந்திரன் 10ம் பாவத்திற்கு உபாதிபதியாக அமைந்தாலோ, இது பொருளாதாரத்திற்கு எதிரான விளைவை தரும். நிரந்தரமற்ற வேலை, வேலையின்மை, தொழில் நசிவு போன்ற இன்னல்களை தரும். மேலும் பணிபுரியும் இடத்தில் பொறுப்பற்ற தன்மையால் அசிங்க அவமானங்களை சந்திக்க நேரிடும். ஆகவே ஒருவரது கர்மஸ்தானம் 2, 6, 10ம் பாவங்கள் இரட்டை படை பாவங்களுடன் சுப தொடர்பில் அமைந்தும், சந்திரன் உப நட்சத்திரமாக இந்த பாவங்களுக்கு அமையாமல் இருந்தால் அது தொழில் ரீதியாக ஒரு நல்ல யோகமான சாதகம்.
இளம் பெண் பிறப்பு நேர சாதக விவரங்கள்
கும்ப லக்னம், கடக ராசி ஜென்ம நட்சத்திரம் பூசம்.தைதுலம் கரணம் சுகர்மம் யோகம். காலபுருஷ தத்துவப்படி லக்னம் ஸ்திர ராசியான கும்ப ராசி. காற்று ராசியை லக்னமாக உடையவர் புத்தி சாதுரிமாகவும் துல்லியமாக விரைந்து சிந்திப்பவராக இருப்பார்கள். ஸ்திர ராசி பாவத்தின் குண இயல்பு ஆரம்பத்திலே முழுமையாக வளர்ந்த பாவமாக செயல்படும்.
இது பாரம்பரிய சோதிட படி பொது பலன் மட்டுமே. இதன் பூர்வ குண இயல்போடு பாவ லாபாதிபதி தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் வாயிலாக பாவத்தின் வலிமையை ஏற்று விதி பலன்களை கிரக காரகங்களுடன் நிகழ்த்துகிறார் என்பதை நன்கு அறிய வேண்டும்.
உத்தியோகம் பார்க்கும் கொடுப்பினை உள்ளதா?
இளம் பெண் அவர்களின் கேள்வியை பார்க்கும் போது அவர் இரண்டு கேள்விகளை கேட்டுள்ளார். முதல் கேள்வி "நான் உத்தியோகம் பார்ப்பேனா?" இரண்டாவது கேள்வி "வெளிநாட்டில் வேலை பெற்று சம்பாதிப்பேனா?". முதல் கேள்விக்கான விதி கொடுப்பினையை முதலில் ஆய்வு செய்வோம்.
தொழில் ஸ்தானம் 10ம் பாவம் நிலையற்ற பலன்களை அளிக்கக்கூடிய சந்திரன் உபாதிபதியாக அமைந்தது தொழில் ஸ்தானத்தின் கொடுப்பினை நிலையற்றதாகிவிட்டது. மேலும் 10ம் பாவத்திற்கு 8ம் மற்றும் 4ம் பாவங்களான முறையே 5ம் மற்றும் லக்ன பாவத்திற்கு சந்திரனே உபாதிபதியாக அமைந்தது மேலும் 10ம் பாவத்தை வலிமை இழக்க செய்கின்றது.
பத்தாம் பாவத்திற்கு 1, 5ம் பாவத் தொடர்பு தொழில் காரக ரீதியில் எதிராக வேலைசெய்து பணி புரியும் யோகத்தை விதிப்படி நிலையற்றதாக மாற்றினாலும் தோழி அவர்கள் பெரும் முதலீடுகள் தவிர்த்து, தான் படித்ததற்கு ஏற்ப சுயமாக கலை, ஆன்மீகம், தியானம், யோகா தெரப்பி மற்றும் சேவை சார்ந்த தொழிலில் சிறப்பாக வளர சூட்சகமாக விதி மறுக்கவில்லை என்பதை இங்கு நாம் நிதானித்து அறிய வேண்டும்.
பொருள் பற்றான, அதிக லாப நோக்கோடு முதலீடு செய்து நிறுவனம் சார்ந்த பெரும் தொழிலில் ஈடுபட முடியாதே தவிர தான் சுயமாக சிறிய அளவிலான தனது படிப்புக்கு ஏற்றாற்போல் சொந்தமாக கிளினிக் அமைத்துக்கொண்டு யோகா பயிற்சியாளராக, இயற்கை வைத்தியம் மற்றும் யோகா தெரபிஸ்ட்டாக குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவையாற்ற தோழி அவர்களின் சாதகம் சாதகமாக இருக்கின்றது. மற்றவருக்கு கீழ் ஊதியம் பெறவேண்டிய அவசியமும் இல்லை. கணவரின் விருப்பத்திற்கு மாறாக நடக்க வேண்டிய அவசியமும் இல்லை. தனது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வீட்டின் அருகாமையிலேயே இவரது கடைகளில் ஒன்றை சொந்த கிளினிக்க்காக மாற்றிக்கொள்ளலாம்.
வெளிநாட்டில் நிலையாக பணிபுரிந்து சம்பாதிப்பாரா?
வெளிநாட்டுக்கு இன்ப சுற்றுலா மற்றும் குறுகிய நாட்கள் தங்கி செய்யும் தற்காலிக வேலை சம்பந்தமாக செல்லாம். நீண்டநாள் தங்கி வெளிநாட்டில் உத்யோகம் பார்த்து பணம் சம்பாதிக்க முடியுமா என்ற இரண்டாம் கேள்விக்கான பதில் முதல் கேள்விகான விளக்கத்திலே பதில் அமைந்துவிட்டது.
அவரது கணவர் சம்மதிப்பாரா?
இவ்வாறு அவருக்கு ஆலோசனைகளை சாதக ரீதியாக சாதக பாதகங்களை எடுத்துக்கூறி, அவரது விருப்பத்தை தக்க சமயத்தில் கணவருடன் பொறுமையாக ஆலோசித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு சம்மதம் அளிப்பார் என்றேன்.
கொஞ்சநாள் கழித்து, எமது தோழி அலைபேசியில் எம்மை அழைத்திருந்தார், அவரது குரலில் முன்பைவிட நல்ல சந்தோஷமும் , உற்ச்சாகமும் தெரிந்தது.
நண்பரே! தாங்கள் கூறியவாறு எமது கணவரிடம் பேசினேன். எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் சம்மதித்துவிட்டார். கிளினிக் ஆரம்பிப்பதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளை செய்துவிடுகின்றேன் என்று கூறினார். மேலும் தனது மனக்குழப்பதினால் தவறான முடிவெடுக்க இருந்த என்னை, தங்களது சோதிட ஆய்வு மூலம் தக்க ஆலோசனை வழங்கி எம்மை நேர்மறையாக சிந்திக்க வைத்துள்ளீர்கள்". குடும்ப வாழ்க்கை மீது புது நம்பிக்கை பிறந்துள்ளது என்று இவ்வாறு தோழி அவர்கள் கூறி, தனது நன்றியை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எமது ஆசான் ஜோதிட நல்லாசிரியர், A. தேவராஜ் அவர்களின் நல்வழிகாட்டுதலுடன்,
என்றும் அன்புடன்,
திலக் .ஜெ. பாலமுருகன் MCA., M.Sc (YOGA).,
Member, All India Steller Astrologers Association .,
Chennai - India.
Whatsapp : +91 - 8825518634