திருக்குறளும் வேதாத்திரிய காந்தவியல் கோட்பாடும்
அன்புடையீர் வணக்கம்,
மனித வாழ்க்கை நெறியை ஆன்மீக பெருமக்கள் பலர் விளக்கிச் சென்றுள்ளனர் அவற்றுள் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்க்கை நெறியை வகுப்பதில் சிறந்து விளங்குகின்றார். இப்படி பலர் விளக்கியும் மனிதர்களின் வாழ்க்கையில் நெருக்கடிகள் இருக்கவே செய்கின்றன. ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி ஆகிய நான்கு வகையிலும் திறன் பெற்ற அறிஞர்கள் கூறும் வழிகளை அவரளவு உயர்வதற்கு முயல்பவர்கள் அந்நெறிக்குச் செல்ல முடியும்.
மனமும் அறிவும் இரு எல்லைகளில் நிற்பதால் நெருக்கடிகள் மிகுகின்றன. மனம் அறிவை நோக்கிச் செல்லவேண்டும் என்னும் கொள்கையுடைய மகரிஷி, திருக்குறள் வாழ்க்கை நெறியை வகுத்த நூல்களுள் தலைசிறந்தது என்னும் கருத்துடையவர். திருக்குறளை முறையாக அறிந்தாலே உலக வாழ்க்கை அமைதிப்படும்.
திருக்குறளுக்கு உரை காண முற்பட்ட மகரிஷிக்கு அவற்றுள் ஒரு குறட்பா மிகப்பெரும் கட்டுரையை எழுத வைத்துள்ளது. அந்த குறட்பதான்
சுவையொளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
என்னும் குறள் "சுத்தவெளியாக சிவமாக அமர்ந்து அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் அருட்பேராற்றலே தனக்குள் அறிவாக விளங்குகிறது" என்னும் உண்மையை இக்குறள் விளக்குவதாக மகரிஷி கருதுகிறார்.
தத்துவ சொற்கள் என்றால் என்ன?
மேற்குறித்த குறளுக்கு விளக்கம் அறியும் முன் மெய்ப்பொருள், விண், காந்தம், அறிவு, பருவுடல் ஆகிய ஐந்து சொற்களுக்கும் விளக்கம் அறிய வேண்டும். இவை தத்துவ சொற்கள் என உணர்ந்து விளங்கிக் கொண்டு பதித்துக்கொள்ள வேண்டும் என்று மகரிஷி வலியுறுத்துகின்றார்.
மெய்ப்பொருள்
மெய்ப்பொருளின் விளக்கத்தை மகரிஷி இவ்வாறாக "மெய்ப்பொருள் என்பதே மறைப்பொருள். இம்மெய்ப்பொருளை மனம் எவ்வாறு உணர வேண்டும் என்றல் 'சுத்தவெளி' என்று உணரவேண்டும். இந்த சுத்தவெளி எல்லை இல்லாதது; முழுமுதற்பொருள்; ஆதி; அநாதி; இறைநிலை என்று வழங்கப்பெறும். இந்த சுத்தவெளியுள் அடங்கி இருப்பன சிவம், பூரணம், பிரம்மம், உண்மை, நித்தியம், முற்றறிவு ஆகியன. இவற்றின் வலிமைகளைகே கொண்டுடிருப்பது சுத்தவெளி விண்ணுக்குள்ளும் விண்களுக்கிடையேயும் பேரியக்க மண்டலத்திலும் இது நிறைந்து இருக்கும்.பேரியக்க மண்டலத் தோற்றங்களை எல்லாப் பக்கத்திலிருந்தும் அழுத்துவது, அழுதுவதோடு தான் இயங்கி கொண்டிருப்பதும் இந்த சுத்தவெளி. இதனுள் அறிவு, விரைவு ஆகிய இரு தன்மைகள் உள்ளன. இவற்றையெல்லாம் மனத்தால் உணர்ந்து கொள்ள வேண்டும்" என மகரிஷி விளக்குகின்றார்.
விண்
விண் என்பது மிகமிக நுட்பமான ஒரு கூறாகும். இது இயக்க மூலக் கூறு ஆகும். இதைவிட சிறியது இல்லை. அனால் பேரியக்க மண்டலத்தின் எல்லா ரகசியங்களையும் அடக்கிக்கொண்டிருப்பது. இத்துகள்கள் இணைந்து தொகுப்பாகத் தோன்றும். விண் என்னும் இந்த கூறினை (துகளினை) உயிர், சக்தி, சூக்குமம், பரமாணு, ஆகாசம், ஆவி ஆகிய பெயர்களால் அழைப்பர். முன்னர்க் குறித்த மெய்ப்பொருள் என்னும் இருப்பு நிலையிலிருந்து பிளவுபட்டு வரும் கூறு இது. சூழல் விரைவொடு இயங்குவது. மிக நுனியை சூழல் அலை இது.
காந்தம்
காந்தம் எனப்படுவது விண்துகளில் இருந்து சுழல்வதால் ஏற்படும் விரிவு அலை பக்கவாட்டிலுள்ள சுத்தவெளியில் ஊடுருவி இணைந்து இரண்டும் சேர்ந்த கூட்டு ஆற்றலாக விளங்குவதாகும். சுத்தவெளியும் இருக்கும். கூட்டு ஆற்றலான காந்தமும் இருக்கும்.விண்துகளும் இருக்கும். சுத்தவெளியில் விண்களுக்கிடையில் பேரியக்க மண்டலத்தில் இந்தக் கூட்டு ஆற்றலான காந்தம் இருக்கும். இதனையே மகரிஷி வாங்கதம் என்று அழைக்கின்றார். இதே கூட்டு ஆற்றல் உயிரருடலுக்குள் எல்லைக்கட்டி இயங்குவதால் அதனைச் சீவகாந்தம் என்கிறார். கூட்டு ஆற்றலால் காந்தம் விளைந்தது.
அந்தக் காந்தத்திலிருந்து மேலும் சில விளையும். அவை அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் ஆகியன. காந்த ஆற்றல் குவிந்து அழுத்தம் பெரும் அதே இடத்தில் காந்த ஆற்றல் சமனடையும். காந்த ஆற்றல் அழுத்தம், மின்சத்தி, விதித்தல் (இரசாயணம்) என்னும் மூன்று தன்மைகளை பெறுகிறது. அழுத்தம் கொள்ளும் ஆற்றல், தள்ளும் ஆற்றல் என் இருவகையாக விளங்கும். மின்சக்தி, ஒளி, ஒலி என இரண்டாக இயங்கும். வேதித்தல், சுவை மணம் என இரண்டாக பிரிந்து இயங்கும்.
அறிவு
அறிவு என்பதற்கு உண்மை என்று பொருள் கூறுகின்றார் மகரிஷி. உணர்ச்சி, சிந்தனை, இன்ப துன்ப அனுபவமாக உள்ளவற்றை அறிவு என்பர். இவை மனநிலைகள். இம் மனநிலைகளுக்கு முன்னமே விண் முதல் கதிரவன் வரை உள்ள இயக்க ஒழுங்காற்றலாகத் திகழ்வது அறிவு. விண்துகளின் இயக்கமற்ற நடுப்பகுதியை அறிவு எனலாம்.
இந்த இருப்புநிலை அல்லது அறிவில் அதைச் சுற்றியிலும் சுழலும் வேகம் மோதுகிறது. இந்த 'வேகம்' உணர்த்துகிறது.இருப்பு (அறிவு) உணர்கிறது. இந்த உணர்வு விண்ணைச் சுற்றி இருக்கும் அகன்ற நிலையில் ஊடுருவித் தொடர்புகொள்ளும். பரமாணுவின் அசைவை சீராக்கி இயக்க உதவுகின்றது.
திருக்குறள் கூறும் காந்த ஈர்ப்புக் கோட்பாடு - விளக்கம்
சுத்தவெளி ( சிவம் ), பரமாணு (சக்தி ), காந்தம், காந்தத்தின் தான்மாற்ற நிலைகள் ஆகிய நான்குவகை இயற்கை ஆற்றல்கள் புலன்களால் உணர முடியாதவை என அறியலாம். காந்தத்தின் தன்மாற்ற நிலைகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை வள்ளுவர் தம் குரலில் மறைபொருளாக குறிப்பிட்டுள்ளார் என்று அறியலாம். இவற்றோடு மனம் என்னும் இயக்க நிலையையும் அறிந்துகொள்ள வேண்டும் என விளக்குகிறார் வேதாத்திரி மகரிஷி.
புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றலை அறியவும் மதிக்கவும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எல்லாரிடமும் எல்லாவற்றிடமும் முறையான தொடர்பு கொண்டு வாழ முடியும். உடலையும் உள்ளத்தையும் மேன்மைப் படுத்திக் கொள்ள முடியும். மனதின் அலைச் சூழலின் வேகத்தை முழுமையாக குறைத்துத் தூய அமைதி நிலையை அடையாளம் என்று திருக்குறள் வழி நின்று மகரிஷி காந்த ஈர்ப்பு கோட்பாட்டை விளக்குகின்றார்.
என்றும் அன்புடன்,
திலக் .ஜெ. பாலமுருகன் MCA., M.Sc (YOGA).,
Member, All India Steller Astrologers Association .,
Chennai - India.
Whatsapp : +91 - 8825518634