ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Sunday, October 14, 2018

கோடி கோடியாய் குவிக்கும் தொழில் யோகம் யாருக்கு?? How to become Crorepathi?

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!


ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர்.
"யாதானும் தொழில் செய்வாம்
     யாதும் அவள் தொழிலாம்."
எத்தனையோ தொழில் முனைவோர்களும், தொழில் அதிபர்களும் தொழில் செய்து கொண்டுதானே உள்ளனர். சிரமங்களைத் தாண்டி முன்னுக்கு வருபவர்களையும், முடியாது போய் நசிந்து போனவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் பல்லாயிரம் கோடிகளை மிகசுலபமாக சேர்த்தவர்களும் உள்ளனர். இதற்கெல்லாம் அவரவர் ஜாதகத்தில் உள்ள கொடுப்பினை என்றால் அது மிகையாகாது.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”
என்றார் வள்ளுவ பெருந்தகை.

ஊழ் என்பது பூர்வ ஜன்மத்தையும், விதியையும் குறிக்கும்.

பூர்வ ஜன்மத்தின் பலாபலன்களை கொண்டே, இந்த ஜென்மத்தின் விதி நிர்ணயிக்கப்படுகின்றது.

அதனைதான், ‘ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்றார் இளங்கோ.
அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் பலருக்கு திடீர் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. போன ஜென்மத்தில், விதி யோக பலனுடன் விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜன்மத்தில் எழுதப்படுகிறது.
கோடிகளை குவிக்கும் யோக காலம் எப்போது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுவதுதான், நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.

பிறப்பால் கோடீஸ்வர யோகம்:

கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். இவர்கள் ஜாதகத்தில் பெரும்பாலும், நான்காம் பாவ உபாதிபதி இயற்கை சுபரான குரு அல்லது சுக்கிரனாக இருப்பார். வேறு கிரகங்கள் இருந்தாலும் பொருந்தும். கிரகங்களுக்கு ஏற்ப சொத்து வந்த வழிகள் புலப்படும்.
நான்காம் பாவமுனைகள் தனஸ்தானம்(2), சுகஸ்தானம் (4), வெற்றி ஸ்தானம்(6), தொழில் ஸ்தானம்(10) ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டிருந்தால் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்புகள் பல்லாயிரம் கோடிகள் மதிப்புடையதாக இருக்கும். 
முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர். குருவும் 9ம் பாவத்தின் உப அதிபதியும் இதே அமைப்பில் தொடர்பு கொண்டிருந்தால் ஜாதகர் பிறப்பால் கோடீஸ்வரர்.

ராசி, லக்னாதிபதி தசை

ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம்.
தசா நாதன் மற்றும் புக்தி நாதன் இருவரும் இரட்டை படை (2,4,6,10) சுப பாவமுனைகளை தொடர்புகொண்டு தசை நடத்தும் போது, ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும். 
சாதாரண நிலையில் இருப்பவரும் பெருத்த முன்னேற்றத்தை எளிதில் அடைவாா்கள். செல்வச் சேர்க்கை, தொழிலால் லாபம், குடும்ப முன்னேற்றம் போன்றவை உண்டாகும்.

தொழிலால் கோடீஸ்வரர் யோகம்

10ம் பாவ உபாதிபதி, இரட்டைப்படை சுப பாவங்களான 2,4,6,10 ஆகிய பாவங்களின் தொடர்புடைய தசைகளை நடத்தினால் தொழில் வருவாய் மூலம் கார், பங்களா, விலை உயர்ந்த ஆபரணங்கள், வெளிநாட்டு கரண்சிகள் மற்றும் விஸ்தாராமான நிலபுலன்கள் என்று சுகமாக வாழ்வர், தொழில் மூலம் புகழ், செல்வம் சேரும். வாழ்க்கையில் சுகத்துக்குப் பஞ்சம் இருக்காது.

யாரால் யோகம்?

இரட்டைப்படை சுப பாவங்களை (2,4,6,10)  சூரியன் தொடர்பு கொண்டால் தந்தையாலும்
...
சந்திரன் தொடர்பு கொண்டால் தாயாலும்
...
செவ்வாய் தொடர்பு கொண்டால் கணவர், உடன்பிறப்பாலும்
...
புதன் தொடர்புகொண்டால் நண்பர்கள், மாமனாலும், சொந்த அறிவாலும்
...
குரு தொடர்பு கொண்டால் முன்னோர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், புத்திரர்களாலும்
...
சுக்கிரன் தொடர்பு கொண்டால் மனைவியாலும்
...
சனி, ராகு, கேது தொடர்பு பெற்றால் வேலையாட்கள் மூலமும், நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும்.
7ம் பாவம் 2, 4, 6,10ம் பாவமுனைகளை தொடர்பு கொண்டவர்களுக்கு வசதியான, அழகான கோடீஸ்வரரைத் திருமணம் செய்யும் யோகம் ஜாதகருக்கு அமையும்.
திடீர் விபரீத ராஜ யோகம் யாருக்கு?

'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர்.
ஜாதகரின் எட்டாம் பாவம் 2,4,6,10ம் பாவமுனைகளை தொடர்பு கொண்டால் இவர்களுக்கு வாழ்வில் திடீர் அதி தனயோகம் அமைந்து விடும். சொகுசான வாழ்க்கை ஏற்பட்டு, திடீர் கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகும்.
கோடீஸ்வரராக வழிமுறைகள்:

சராசரி வாழ்க்கைக்கே போராடுகிறோம்; இந்த நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்றே பலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். முறையான உழைப்பாலும், புதிய சிந்தனையாலும், எந்தத் தொழில் மூலமாகவும் கோடீஸ்வரராகி விடலாம்.
பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர். 
தொழில் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிவை

முதலில் ஒருவர்க்கு வேலை செய்யும் யோகம் உண்டா? இல்லையா? அல்லது தொழில் செய்வாரா என்பதை நல்ல ஜோதிடரை அனுகி அறிய வேண்டும்.

தொழில் கொடுப்பினையை பார்ப்பதற்கு 6 மற்றும் 7ம் பாவ முனைகளை, 10ம் பாவ முனைகளுடன் இணைத்து ஆராய வேண்டும்.

இந்த பாவங்கள் பொருளாதாரத்திற்கு மிகவும் கொடிய ஸ்தானமான 5,9ம் பாவங்களை தொடர்பு கொண்டும், தொழிலுக்கான காரக கிரகங்களும் முழுமையாகக் கெட்டிருந்தால் வேலை வெட்டிக்குப் போகாமல், ஊரைச் சுற்றிவிட்டு வந்து வீட்டில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கும் சுகவாசியாக இருப்பார். ஆகவே விதியின் கொடுப்பினைதான் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்கின்றன என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பல வருடங்கள் சேமித்த பொருளைக் கொண்டும், கடன் வாங்கியும் புதிய தொழில் தொடங்கும்போது, முதலில் ஜாதகத்தில் தொழில் தொடங்கும் நேரம் தற்போது உண்டா?  தொழிலால் லாபம் கிடைக்குமா? கூட்டுத் தொழில் வெற்றி தருமா? என்பதையெல்லாம் கருத்தில் கொள்வது பாதுகாப்பானது.

அவசரக் கோலத்தில் தொழில் தொடங்கி, முடங்கிப்போனவர்கள் ஏராளம்.  விதிகொடுப்பினையும், தசாபுக்திகளும் சாதகமா உள்ளதா என்று ஆராய வேண்டும்.

தொழில் தொடங்கிய காலம் தொட்டு தொடர்ந்து வரும் தசாபுக்திகளும் சாதகமாக தொடர்ந்து அமையுமா...???  என்பதை அவசியம் அறிய வேண்டும்.
பத்தாம் பாவமுனை, ஒருவரின் ஜாதகத்தில், ஜாதகர் தன் வாழ்க்கையில் செய்ய இருக்கும் தொழிலை அல்லது வேலையைக் வெற்றிகரமாக செயல்படுத்வாரா என்பதை குறிக்கும்.
அந்த இடத்தை, அதன் இயற்கைத் தன்மையை, அதன் உப அதிபதியை, அவர் தொடர்புகொண்டுள்ள பாவங்களையும், சம்பாத்திய காரகன் சூரியனின் நிலையையும், தனகாரகன் குரு மற்றும் சுக்கிரனையும் பொறுமையாக ஜாதகத்தில் அலசுவதன் மூலம் ஒருவரின் கோடிஸ்வர யோகத்தை எளிமையாக அறியலாம்.
அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறியலாம்.
விதி கொடுபினையுடன் தசாபுக்திகளையும் இணைத்தே ஆராய வேண்டும். அதனுடன் ஜாதகரின் லக்ன கொடுப்பினை  மற்றும் பாக்கிய ஸ்தானத்தையும் இணைத்தே ஆராய வேண்டும்.
"ஜாதகர் தொடர்ந்து தொழிலில் வெற்றி அடைவாரா என்று உறுதிபடுத்த, மிகவும் முக்கிய ஆய்வான பாவ முனை விரிவுகள் மற்றும் கிரக விரிவுகளை அவசியம் ஆராய வேண்டும். இது உயர்நிலை ஆய்வுகள் என்றாலும் அவசியம் ஆராய்ந்து தாசாபுக்திகளின் உச்சபச்ச பலனை அறிய வேண்டும்."
உத்தியோகத்தில் அல்லது தொழிலில் எந்த அளவிற்கு ஜாதகர் உயர்வார் என்று பார்ப்பதற்கும், எந்த வயதில் உயர்வார் என்று பார்ப்பதற்கும் இது உதவும்.

எந்த தசா புத்தி காலத்தில் மேன்மை அடைவார் அல்லது வீழ்ச்சியடைவார் என்று பார்ப்பதற்கும் உதவும்.

இவர்கள் முறையாக ஜாதக ஆய்வை செய்து தொழிலில் இறங்கினால் வெற்றி மேல் வெற்றிதான்.

"என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி..!!
ராசி உள்ள பக்கம் தினம் வெற்றிவந்து சேரும்..
நேரம் கூடும்போது எந்த ஊரும் உன்ன பாடும்
நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும்..!
ஆளு அம்பு சேனை அட அத்தனையும் கூடும்..!!
விட்டு போன சொந்தமும் வரும்..!

கோடியிலே ஒருத்தனுக்கு ராசி உச்சத்திலே

எந்த குறைகளுமே அவங்கிட்டதான் தேடி வந்ததில்லே
எது வந்தாலும் போனாலும் ஓட்டுற மண்ணுதான் ஒட்டுமடா" னு ஜாதகர் தொழிலில் அசாத்திய தைரியத்துடன் செயல்படுவார்.

தொடரும்....

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

தொலைபேசி மற்றும் நேரில் ஜாதகன் பலன் அறிய எம்மை தொடர்புகொள்ளலாம்

தங்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள சேவைகள் வழங்கபடும்.
  1. பிறந்த நேர சரிபார்ப்பு
  2. துல்லியமாக கணிக்கபட்ட  உங்கள் ஜாதகத்திற்கு பொது பலன் அறிதல்
  3. உங்களின் கேள்விகளுக்கு ஏற்ப ஜாதக பலன் அறிதல்.
  4. யோகம் அளிக்கும் தசா/புக்திகளை அறிதல்
  5. குடும்ப வாழ்விற்கு சாதகமான அம்சத்தை அறிதல்
  6. உங்கள் பொருளாதார வாழ்விற்கான சாதகமான கால சூழலை அறிதல்
  7. நடப்பு கோச்சாரத்தின் பலன் அறிதல்
  8. உங்கள் ஜாதகபடி எதிர்கால வாழ்வை அறிதல்
  9. திருமணத்திற்கான யோக நேரத்தை அறிதல் மற்றும் வரன் பொருத்தம்
  10. 16 பக்கம் துல்லிய கணக்கீடுகளுடன் கூடிய உங்கள் ஜாதகம் PDF வடிவில் வழங்கபடும்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer, 
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634  
Email- Jbm2k07@gmail.com

Friday, October 12, 2018

ஆளும் கிரகங்களின் சூட்சமமும் துல்லிய பலன்களும்-Ruling Planets-Advanced KP Stellar Astrology

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!


அனைவருக்கும் வணக்கம்...!

ஜாதகரின் சரியான, பிறந்த நேரத்தை துல்லியமாக, கண்டறிவதை பற்றி தொடர் கட்டுரையாக படித்து வருகின்றீர்கள்.

நமது முந்திய கட்டுரைகளை படித்துவிட்டு, நிறைய அன்பர்கள் தொலைபேசி, முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் வாயிலாக வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றீர்கள்.

உங்களின் பேராதரவு எமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கின்றது.

நமது பதிவுகளை படித்துவிட்டு, புதிதாக நிறைய அன்பர்கள், தங்களுடைய ஜாதகங்களில் பிறப்பு நேரத்தை, சரிசெய்து தருமாறு கேட்பதை பார்க்கும் போது, ஆளும் கிரகங்களின் அற்புதத்தை, அனைவரும் வரவேற்கின்றீர்கள் என்பதை உணர முடிகின்றது.

நமது கட்டுரையால் இவ்வளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்றால் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

உங்கள் அனைவருக்கும், எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்



அனைத்து பாராட்டுகளையும், எமது குருநாதர், உயர்கணித சாரஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அய்யா , அவர்களுக்கு சமர்பிக்கின்றேன்.

கர்ப்பதை காட்டி கொடுத்த ஆளும் கிரகங்கள் என்ற முந்தைய பதிவில், சில சந்தேகங்களை நிறைய அன்பர்கள் கேட்டிருந்தீர்கள்.

அனைவருக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்த கட்டுரையை பதிவிட்டுள்ளேன்.

குறிப்பாக...

மதிப்பிற்குரிய திரு. சரவண வேல் அய்யா அவர்கள்,  கேள்வி ஒன்றை முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தார்கள்.

"மிக அருமை.
தங்களின் ஆன்மீக தத்துவங்கள் பகுதியில் உள்ள நேரம் திருத்தப்பட்ட ஜாதகத்தை பற்றி எனக்கு ஏற்பட்ட சந்தேகம்
 தயவ செய்து விளக்கவும்.
    சந் நிலையில் செவ் (    ) குரு (    ) பிறப்பு கால லக்ன நிலையில் வர வில்லையே? 5ம் பாவத்திற்கும் வைக்க வில்லை.
தயவ செய்து விளக்கவும்."

பதில்: ஆளும் கிரகங்கள், ஜாதகரின் அன்றைய நிலையில், அவர் மன ஓட்டத்தின் குறிகாட்டி என்பதை அறிவீர்கள். இதன் அடிப்படையில், ஜாதகரின் கேள்வி எவ்வாராக இருக்கும் என்பதை நம்மால் முன்கூட்டியே யூகிக்க முடியும்.

கொடுக்கபட்டுள்ள ஆளும் கிரகங்களின் அட்டவணையில், சந்திரனின் நிலையில் மிக வலிமையானவராக உப உப உப அதிபதி குரு, சந்திரன் நிலையில் இருக்கின்றார்.


இந்த ஜாதகருக்கு, பிறப்புநிலை பாவ லக்ன முனைக்கு, குருவை நிறுத்த முயற்சித்தால் ஜாதகரின் விதி பலன் மாறும், ஆதலால் அதற்கு நெருக்கமாக உள்ள ராகுவை பொருத்தினால் மட்டுமே ஜாதகரின் முந்திய தசாபுக்தி பலன்கள் ஒத்து போகின்றன.

இந்த ஜாதகருக்கு, குருவையே பிறப்பு நிலைக்கு பொருத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்கு முன் பின் கிரகங்களால், ஜாதகரின் கடந்த கால நிழ்வுகள் ஒத்து போகின்றது என்றால் அந்த கிரகத்தையே பயன்படுத்த வேண்டும்.

அதே போல் கேள்விகான பாவம் இங்கு புத்திர ஸ்தானம்... ஆளும் கிரக அட்டவணையில், செவ்வாய் உப உப அதிபதியாக அமர்ந்திருப்பார், அவரே பாவ அட்டவணையில், முதல் குழந்தை என்னும் 5ம் பாவம், இரண்டாம் குழந்தை என்னும் 7ம் பாவம், நான்காம் குழந்தை என்னும் 11ம் பாவங்களில் உப உப உப அதிபதி நிலையில் அமர்ந்திருப்பார்.


ஆக ஆளும் கிரக நிலையில் செவ்வாயின் குறிகாட்டி பாவங்களான 5,7,11 நடப்பு தசாபுக்திகளின், பாவங்களுடன் ஒத்து போவதால், இந்த நிலையே சரியானது என தீர்மானிக்க வேண்டும்.
சில சமயங்களில் ஆளும் கிரகங்களை இந்த மாதிரியான மாற்று வழிமுறைகளை கையாண்டால் மட்டுமே, சில சிக்கலான ஜாதகர்களின், பிறந்த நேரத்தை நாம் துல்லியமாக கணிக்க இயலும்.
கொடுக்கபட்ட பிறப்பு நேரத்தில், குறைந்த நேர வித்தியாசங்கள் இருந்தால், நாம் நேரடியாக ஆளும் கிரகங்களை பொருத்த முயற்சிக்கலாம்.

சில சமயங்களில் இது சிரமம் இல்லாமல் பொருந்திவிடும். ஆனால் அதிக வித்யாசத்துடன் கொடுக்கபடும் பிறந்த நேரங்களை துல்லியபடுத்த, நேரடி விதிகளின் ஒத்துழைப்பு மிக குறைவு.. அந்த நேரத்தில் மாற்று வழியில் இதை சமன்படுத்த வேண்டும்.

ஆளும் கிரகங்களை, கேள்விகளின் சூழ்நிலைகளை பொருத்து இவ்வாறு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். ஆளும் கிரகங்களை பழக பழக உங்களுக்கு அனுபவத்தில் எளிமையாக வந்துவிடும்.
உயர்கணித சார ஜோதிடத்தில், எளிமையாக வகுக்கபட்டுள்ள,  பன்னிரெண்டு விதிகளை கொண்டு, சரியான பிறப்பு நேரத்தை, மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
சார ஜோதிட விதிகளை மேலும் தெரிந்துகொள்ள, எமது குருநாதர், உயர்கணித சாரஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அய்யா அவர்களின், கொடுப்பினையும் தசாபுத்தியும் நூலில் படித்து அறியலாம்.

மேலும் ஆளும்கிரகங்களை பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப, எவ்வாறு கையாள வேண்டும் என்பதை மதிப்பிற்குரிய ஜோதிஷ ஆச்சார்யா S. அண்ணாமலை அவர்களின், சீர்மிகு எழுத்து படைப்பில் உருவாகியுள்ள "சிற்றின்ப சிகரங்கள்" புத்தகத்தில் மிக விரிவாக படித்து அறியலாம்.

எளிமையான விதிகளை, நமது கட்டுரையில், ஒவ்வொன்றாக அறிந்து வருகின்றோம்.

மேலும் இதை பற்றிய தகவல்களை அடுத்து வரும் தொடர் பதிவுகளில் விரிவாக காணலாம்.

தொலைபேசி மற்றும் நேரில் ஜாதகன் பலன் அறிய எம்மை தொடர்புகொள்ளலாம்

தங்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள சேவைகள் வழங்கபடும்.

  1. பிறந்த நேர சரிபார்ப்பு
  2. துல்லியமாக கணிக்கபட்ட  உங்கள் ஜாதகத்திற்கு பொது பலன் அறிதல்
  3. உங்களின் கேள்விகளுக்கு ஏற்ப ஜாதக பலன் அறிதல்.
  4. யோகம் அளிக்கும் தசா/புக்திகளை அறிதல்
  5. குடும்ப வாழ்விற்கு சாதகமான அம்சத்தை அறிதல்
  6. உங்கள் பொருளாதார வாழ்விற்கான சாதகமான கால சூழலை அறிதல்
  7. நடப்பு கோச்சாரத்தின் பலன் அறிதல்
  8. உங்கள் ஜாதகபடி எதிர்கால வாழ்வை அறிதல்
  9. திருமணத்திற்கான யோக நேரத்தை அறிதல் மற்றும் வரன் பொருத்தம்
  10. 16 பக்கம் துல்லிய கணக்கீடுகளுடன் கூடிய உங்கள் ஜாதகம் PDF வடிவில் வழங்கபடும்.
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-99401 37099 | 88255 18634  

Wednesday, October 10, 2018

கர்பத்தை காட்டிகொடுத்த ஆளும் கிரகங்கள் - Ruling Planets

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!


அனைவருக்கும் வணக்கம்...!

ஜாதகரின் சரியான, பிறந்த நேரத்தை துல்லியமாக, கண்டறிவதை பற்றி தொடர் கட்டுரையாக படித்து வருகின்றீர்கள்.

சமிபத்தில் நிகழ்ந்த, ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் அடிப்படையில், ஆளும் கிரங்களின் அற்புதத்தை விளக்கும் விதமாக இந்த கட்டுரையை எழுதியுள்ளேன்.

கடந்த சனிக்கிழமை 06/10/2018 அன்று மாலை 06:20 Pm க்கு, எனது மனைவியின் உறவினர், நம்மிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார்கள்.

வந்தவர் சற்று கவலை தோய்ந்த முகத்துடன் காணபட்டார்...!

நம்மிடம் அவரின் மகளின் ஜாதகத்தை கொடுத்தார்.

தம்பி, என் மகளுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது. இன்னும் அவளுக்கு குழந்தை இல்லை.

இதற்காக நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை...!!

அவளுக்கு பார்க்காத வைத்தியமும் இல்லை...!!

எங்கள் வேதனையை சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இவளுக்கு நல்ல காலம் எப்பதான் பொறக்கும்னு???...  சொல்லுங்க தம்பி என்று மிகுந்த கவலையுடன், குரல் தழுக்க கேட்டார்கள்.

ஜாதகத்தை வாங்கிய அத்தருணம், ஆளும் கிரகங்களை, குறித்து கொண்டேன்.
பிறந்த நேரத்தில், தவறு உள்ளது என்பதை உணர முடிந்தது. ஆறு மாதத்திற்கு மேல் வேலைக்கு செல்லாமல், குழந்தை பேறுக்காக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக,  வீட்டில் உள்ளார் என்பதை கூறியதின் அடிப்படையில், அவரது மகளின் ஜாதகத்தில், பிறப்பு நேரம் தவறக உள்ளதை பார்க்க முடிந்தது. இதற்கான விளக்கத்தை கட்டுரையில் விளக்கியுள்ளேன்.
அவர் மகளின் ஜாதகத்தில் பிறந்த நேரத்தில் சில வினாடிகள் மாற்றம் செய்தேன்.

அன்றைய ஆளும் கிரகத்தை பொருந்தி வருமாறு அவரது லக்ன பாவமுனையில் கிரகத்தை சரியாக வருமாறு அமைத்தேன்.

திருத்திய பிறந்த நேரத்திற்கு ஏற்ப சில கேள்விகளை கேட்டு நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில், பிறந்த நேரத்தை துல்லிய படுத்தினேன்.
தசா புக்தியின் அடிப்படையில் ஆராய்ந்த போது ஜாதகருக்கு சூரிய தசை (2,5,8,11) முறையே தன/குடும்ப ஸ்தானம்(2), புத்திர ஸ்தானம்(5), ஆயுள் ஸ்தானம்(8) மற்றும் லாப ஸ்தானத்தை(11) முன்னிறுத்தி நடக்கின்றது.
ராகு புக்தி (1,3,7,9) முறையே உயிர் என்னும் லக்ன ஸ்தானம்(1), வீரிய தைரிய ஸ்தானம்(3), களத்திர ஸ்தானம்(7) மற்றும் பாக்கிய ஸ்தனத்தை(9) முன்னிறுத்தி, ஜாதகருக்கு குழந்தை பேறுக்கான நல்ல சாதகமான நிலையில் உள்ளது.

இங்கு தீமை பயக்க கூடிய 8ம் பாவத்தை துண்டிக்கும் வகையில், புக்தியில் 7ம் பாவம் உள்ளதால், ஜாதகருக்கு எதிர்பார தீமையான நிகழ்வுகள் தவிர்க்கபடும்.

மேலும் தசையில் 2,8யை கட்டுபடுத்தக்கூடிய, சம சப்தம பாவமான 1,7 வந்ததால், ஜாதகருக்கு 8ம் பாவத்தின், தீமை முற்றிலும் செயலிழக்கபட்டுள்ளது.

தன ஸ்தானமும்(2) கட்டுபடுத்தபட்டதால் ஜாதகர், வேலைக்கு செல்லமுடியாத நிலையை காட்டுகின்றது.

இங்கு உங்களுக்கு ஒரு கேள்வி எழும்..!
குடும்ப ஸ்தானம் செயல் இழந்தால்,  அவர் எப்படி இந்த புக்தியில் கனவருடன் இணைந்து வாழ முடியும்...???
இங்கு புக்தி நாதன் 1,3,7,9 யை பலமாக நடத்துவதால், குடும்ப ஸ்தானத்தின் அதாவது 2ம் பாவத்தின் அக காரகங்கள் எவ்வகையிலும் பாதிக்காது.

இவருக்கு ராகு புக்தி கடந்த ஜனவரி 08, 2018ல் இருந்தே துவங்கியுள்ளது. கண்டிபாக இந்த நேரத்தில் கர்பமாக இருக்க வேண்டும் என்பது தெள்ள தெளிவாக தெரிகின்றது.

இதை உறுதிபடுத்த அவரது மாப்பிள்ளை ஜாதகத்தையும் ஆராய வேண்டும்.. ஆனால் அவரது ஜாதகத்தை கொண்டுவரவில்லை... பிறந்த நேர விவரமும் நினைவில் இல்லை என்று கூரினார்கள்.

சற்று சோதனையான தருணம் என்றாலும்.. வந்தவருக்கு உறுதியான பதிலை அளித்து ஆறுதல் தரவேண்டிய சூழ்நிலையில் இருந்தேன்.

உடனே ஆளும் கிரகத்தை கவனித்தேன்... சந்திரன் நிலையில் புத்திர காரகரான குரு உப உப உப அதிபதியாக இருந்தார்... இந்த அமைவு எனக்கு சற்று நம்பிக்கையை ஊட்டியது...

ஜாதகரின் 5ம் பாவ முனையில் செவ்வாய் உப உப உப அதிபதியாகவும், குரு ராசி அதிபதியாகவும் உள்ளார்... கண்டிபாக அவர் கர்பமாக உள்ளார் என்ற கணிப்பில் 99% ஊர்ஜித படுத்திவிட்டேன்...

மேலும் அந்த நேரத்தில், தெருவில் நடந்து சென்ற ஒரு பெண்மணி.. "என்னாக்கா...!! குரு பெயர்ச்சி ஆகிட்டாரு போல...!!!" என்று சத்தமாக கூறிகொண்டு, தெற்கிலிருந்து வடக்கு திசை நோக்கி செல்வதை கவனித்தேன்... இதைவிட நமக்கு வேறு என்ன பிரசன்னம் அமையும் என்று... 100% உறுதிபடுத்தி...

அவர்களிடம்... "உங்கள் மகள் தற்போது கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள்.." உள்ளது என்று கூறினேன்.

வந்தவர் திகைத்து போய்... தம்பி உங்கள் வாக்கு பலிக்கட்டும்... ஆனால் மதியம் கூட என் மகளிடம் பேசினேன்... அதற்கான எந்த முன்னேற்றமும் இல்லை என்றே கருதுகின்றேன், அவளிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை தம்பி என்றார்.

சரி..., உங்கள் மகளுக்கு இப்பொழுது போன் போடுங்கள்... அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது சிறு மாற்றம், கடந்த இரு வாரங்களாக உள்ளதா..?? என்று மட்டும் கேளுங்கள் என்றேன்.

சென்னையில் வசிக்கும் மகளிடம், அவர் போன் போட்டு இதே போல் கேட்டார்... எதிர் முனையில் அவர்களின் மகள்... இரு வாரமாக சரியாக சாப்பிட முடியவில்லை.. சாப்பிட்டால் குமட்டலாக இருக்குது மா... திடிரென்று பெய்யும் தொடர் மழையால் இருக்குமென்று நினைக்கிறேன் என்று கூறினார்... பிறகு போனை துண்டித்துவிட்டு என்னிடம் தொடர்ந்தார்...

தம்பி... நீங்கள் சொல்றமாதிரி... உடல் ஆரோக்கியத்தில் வித்தியாசம் உள்ளது என்றார்..!!!

உடனே மருத்துவ சோதனை செய்ய சொல்லுங்கள்... கர்பமாக இருப்பதற்கான வாய்புகள் நிறைய உள்ளது என்று அவர்களிடம் கூறினேன்.

வந்தவர் சரி என்று கூறிவிட்டு... சந்தோஷ மனத்துடன் எம்மை வாழ்த்தி சென்றார்.

மறுநாள் ஞாயிறு 07/10/2018 அன்று காலை 10:14am க்கு அவரே கால் செய்து.. மிகுந்த சந்தோஷ குரலுடன்... "தம்பி நீங்க சொன்னதுபோல்.... எம் பொண்ணு 6 வாரம் கர்ப்பமா இருக்காபா...!" அந்த ஆண்டவந்தா உம் மூலையமா தெரிய வைச்சிருக்கார்பானு...! மகிழ்ச்சியின் உச்சத்தில் கூறினார்கள்...!!!

மிக்க சந்தோஷம் என்று பதில் அளித்துவிட்டு... அவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னேன்.

ஆளும் கிரகத்தின் அதி அற்புதமான மகத்துவத்தை இப்பொழுது அனைவரும் அறிவீர்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.

உயர்கணித சார ஜோதிடத்தில், எளிமையாக வகுகக்கபட்டுள்ள,  பன்னிரெண்டு விதிகளை கொண்டு, சரியான பிறப்பு நேரத்தை, மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

சார ஜோதிட விதிகளை மேலும் தெரிந்துகொள்ள, எமது குருநாதர், உயர்கணித சாரஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அய்யா அவர்களின், கொடுப்பினையும் தசாபுத்தியும் நூலில் படித்து அறியலாம்.

மேலும் ஆளும்கிரக நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை மதிப்பிற்குரிய ஜோதிஷ ஆச்சார்யா S. அண்ணாமலை அவர்களின், சீர்மிகு எழுத்து படைப்பில் உருவாகியுள்ள "சிற்றின்ப சிகரங்கள்" புத்தகத்தில் மிக விரிவாக படித்து அறியலாம்.

எளிமையான விதிகளை, நமது கட்டுரையில், ஒவ்வொன்றாக அறிந்து வருகின்றோம்.

மேலும் இதை பற்றிய தகவல்களை அடுத்து வரும் தொடர் பதிவுகளில் விரிவாக காணலாம்.

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
KP Stellar Astrologer, 
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634 | Email- Jbm2k07@gmail.com

Birth Time Rectification using Casting Time

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!


அனைவருக்கும் வணக்கம்...!

ஜாதகரின் சரியான, பிறந்த நேரத்தை துல்லியமாக, கண்டறிவதை பற்றி தொடர் கட்டுரையாக படித்து வருகின்றீர்கள்.

நமது முந்திய கட்டுரையை படித்துவிட்டு, நிறைய அன்பர்கள் தொலைபேசி, முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் வாயிலாக வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றீர்கள். உங்களின் பேராதரவு எமக்கு நல்ல ஊக்கத்தை அளிகின்றது.

மேலும் நிறைய அன்பர்கள் தொடர்பு கொண்டு தங்களது சுய ஜாதகத்திலும், மகன், மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின், ஜாதகத்தில் சரி பார்த்து தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளீர்கள்.

நமது கட்டுரையால் இவ்வளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்றால் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

உங்கள் அனைவருக்கும், எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்

அனைத்து பாராட்டுகளையும், எமது குருநாதர், உயர்கணித சாரஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அய்யா , அவர்களுக்கு சமர்பிக்கின்றேன்.

இந்த கட்டுரையில், ஆளும் கிரக நிலையில், கேஸ்டிங் டைம் மற்றும் கேஸ்டிங் அட்டவணை பற்றி விரிவாக அறிவோம்.

கேஸ்டிங் டைம் (Casting Time) என்றால் என்ன?

ஜாதகர், ஜோதிடரை சந்திக்கும் அந்த நேரத்தில், குறிகாட்டும் ஆளும் கிரகங்களின், நிலையே கேஸ்டிங் டைம் எனப்படும்.

இந்த தருணத்தில் அமையும் கிரக நிலைகளை, லக்னம் மற்றும் சந்திரன் செல்லும் நட்சத்திரங்களை, கீழ் கண்டவாறு
அட்டவணை படுத்தபடும். இதுவே கேஸ்டிங் அட்டவணை (Casting Table) எனப்படும்.

இந்த அட்டவணையில் கிரகம், நட்சத்திர அதிபதி(Star Lord), உப நட்சத்திர அதிபதி(உ.அ Sub lord), உப உப நட்சத்திர அதிபதி(உஉ.அ- Sub Sub Lord), உப உப உப நட்சத்திர அதிபதி(உஉஉ.அ - Sub Sub Sub Lord) ஆகியவை லக்னம் மற்றும் சந்திரனுக்கு குறிப்பிட்டிருகும்.

மேற்படி ஆளும் கிரகநிலை கொண்டு, பாவமுனையில், லக்ன முனை கிரங்களின்
உப உப நட்சத்திர அதிபதி(உஉ.அ- SSL), உப உப உப நட்சத்திர அதிபதி(உஉஉ.அ - SSSL) யை மாற்றி அமைப்பது மூலம், ஜாதகரின் பிறந்த நேரத்தை அறிந்துகொள்ளலாம்.

சரி, இதை மட்டும் செய்தால் அனைத்து ஜாதகருக்கும், துல்லியமாக பிறந்த நேரத்தை கணித்திட இயலுமா..??? மேற்குறிப்பிட்டவை முதல் படியே. மேலும் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் நிறைய உள்ளன.

ஜாதகர் அளிக்கும் பிறந்த நேரத்திற்கும், உண்மையான பிறந்த நேரத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை பொருத்து, அந்த தருணத்தின் ஆளும் கிரக நிலைக்கு ஏற்ப, கிரகங்களை சரியாக கையாள வேண்டும். அப்பொழுது தான் பிறந்த நேரம் சரியாக அமையும்.

உயர்கணித சார ஜோதிடத்தில், எளிமையாக வகுகக்கபட்டுள்ள,  பன்னிரெண்டு விதிகளை கொண்டு, சரியான பிறப்பு நேரத்தை, மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

சார ஜோதிட விதிகளை மேலும் தெரிந்துகொள்ள, எமது குருநாதர், உயர்கணித சாரஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அய்யா அவர்களின், கொடுப்பினையும் தசாபுத்தியும் நூலில் படித்து அறியலாம்.

மேலும் ஆளும்கிரக நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை மதிப்பிற்குரிய ஜோதிஷ ஆச்சார்யா S. அண்ணாமலை அவர்களின், சீர்மிகு எழுத்து படைப்பில் உருவாகியுள்ள "சிற்றின்ப சிகரங்கள்" புத்தகத்தில் மிக விரிவாக படித்து அறியலாம்.

எளிமையான விதிகளை, நமது கட்டுரையில், ஒவ்வொன்றாக அறிந்து வருகின்றோம்.

மேலும் இதை பற்றிய தகவல்களை அடுத்து வரும் தொடர் பதிவுகளில் விரிவாக காணலாம்.

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
KP Stellar Astrologer | Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634  Jbm2k07@gmail.com

Saturday, October 6, 2018

ஆளும் கிரகங்களில் யார் வலிமையானவர்

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி... 


அனைவருக்கும் வணக்கம்!
வான் மண்டலத்தில் (Zodiac) இருக்கின்ற கோள்கள், நட்சத்திரங்கள், பூமியில் இருக்கின்ற, அனைத்து உயிரினங்களின் மீதும், ஒரே விதமாகத்தானே தாக்கின்றது, அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் தானே இருக்க முடியும். 
பின் எப்படி ஒரே நேரத்தில் பிறந்த, இரட்டையரின்(Twins) ஜாதகத்தில் வெவ்வேறான பலன்கள்? 

இதற்கும் ஆளும் கிரகங்களுக்கும் சம்பந்தம் உண்டா?  இதற்கான விளக்கங்களை இக்கட்டுரையில் காண்போம்.

இப்பதிவை தொடர்வதற்கு முன்... எமது முந்திய பதிவான "பிறந்த நேரத்தை சரிபார்ப்பதால் யோகம் வருமா...???, கட்டுரையை,  படித்துவிட்டு தொடருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

கொடுப்பினை

முதலில் கொடுப்பினை என்றால் என்ன? என்று அறிவோம். 

ஒரு ஜாதகர், பிறந்த நொடியில் உள்ள "ஆளும் கிரகங்களின் பலன்கள்தான்",  Birth Chart என்னும் ஜாதகத்தின், 12 பாவ முனைகளில் நிறைத்து விடுகிறது!

அதன்படிதான் ஆயுள் முழுக்க, தசாபுக்திகளுக்கு ஏற்ப, பலன்கள் உண்டாகும். 

அது கர்ம பலன் அல்லது பிறவி் பலன் எனப்படும். 

நம் சாரஜோதிடத்தில், இதை கொடுப்பினை என்று கூறுவோம்!

ஜாதகரின் ஆயுள், ஆரோக்கியம், ஆளுமை திறன், மூளையின் செயல்பாடுகள், ஜாதகர் தனித்து இயங்கும் தன்மை, சுய முயற்சி, குண நலன்கள், உருவ அமைப்பு, வாழ்வின் அனைத்து சம்பவங்களையும், ஜாதகரின் லக்ன பாவமுனையில், தெளிவாக அறியலாம்.

இது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறாக(Uniqueness) அமையும். இரட்டையரின் ஜாதகத்திலும் இந்த அமைவுகளே, இவர்களின் பிறந்த நேரத்தின், ஆளும் கிரங்களை(Ruling Planet) பொருத்து, ஜாதக ரீதியில் வேறுபடுத்தும். 

இப்பொழுது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என நம்புகின்றேன். 
எமது குருநாதர், உயர்கணித சாரஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அய்யா அவர்களின், "கொடுப்பினையும் தசாபுத்தியும்" நூலில் மேலும் விரிவாக படித்து அறியலாம். இது உயர்கணித சார ஜோதிடத்தின் (Advance KP Stellar Astrology) மூல நூலாக திகழ்கின்றது.
பொதுவாக ஜாதகங்கள் நான்கு வகைப்படும்

பொய்யாமொழி புலவர், உலக பொதுமறையில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துபால் என அனைத்து குரள்களையும் உள்ளடக்கி, மனிதன் ஞானம் அடைவேண்டும் என்று 1330 குரள்களையும் மிக அழகாக அமைத்திருப்பார்.

அதை போல் மனிதர்களின் ஜாதகங்களும், கீழே குறிப்பிட்டுள்ள நான்கு வகைகளில், ஏதேனும் ஒரு அமைப்பை பிரதானபடுத்தி அமைந்துவிடும்.

1. தர்ம ஜாதகம்
2. தன ஜாதகம்
3. காம ஜாதகம்
4. ஞான ஜாதகம்

மனிதர்கள் நான்கு வகையில் ஏதாவது ஒன்றில்தான் பிறப்பார்கள். அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருக்கும். இதில் ஒவ்வொரு லக்ன பாவமுனைகளுக்கு ஏற்ப, ஜனன கால ஆளும் கிரகங்களுக்கு ஏற்ப, மற்றவர்களிடம் இருந்து வேறுபடுவார்கள்.
ஒருவரின் பிறப்பு நேரத்தை துல்லியமாக சரி செய்ய, மேற்குறிப்பிட்ட நான்கு வகைகளை ஞாபகத்தில் நிறுத்தினால், ஜாதகரின் நடைமுறை "வாழ்வியல் சம்பவங்களை" கொண்டு, லக்னபாவ முனை எவ்வாறு அமையும் என்பதை யூகித்துவிடலாம்.
ஆளும் கிரகங்களில் யார் வலிமையானவர்...???

ஆளும் கிரகங்கள் என்றால் என்ன...? என்பதை முந்தைய பதிவில் தெளிவாக அறிந்தோம். 
ஆளும் கிரகங்களில் உப உப உப அதிபதியே (Sub sub sub Lord) வலிமையானவர். இவருக்கு அடுத்த நிலையில் முறையே உப உப அதிபதி (Sub sub Lord), உப அதிபதி (Sub Lord) என்று அதிகாராம் பெறுவர்.
ஜாதகர், ஜோதிடரை சந்திக்கும் தருணத்தில், ஆளும்கிரக நிலைகளை கொண்டு, மேற்குறிப்பிட்ட மூன்று கிரங்களின் பலத்தை பொருத்து, ஜாதகரின், லக்ன பாவமுனையை துல்லியமாக நிர்ணயிக்க வேண்டும்.

மேலும் இதை பற்றிய தகவல்களை, அடுத்து வரும் தொடர் பதிவுகளில், விரிவாக காணலாம்.

இதுவரை பொறுமையாக, படித்தறிந்த தங்களுக்கு, எனது "பணிவான நன்றியை" தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.+91-99401 37099 | 88255 18634 | Email:  Jbm2k07@gmail.com

Friday, October 5, 2018

பிறந்த நேரத்தை சரிபார்ப்பதால் யோகம் வருமா-BirthTime-Rectification-Benifits-thilakjbalamurugan-kpadvacesteller-astrology-aanmeegathathuvangal

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...


ஜாதகத்தில் குறிபிட்டவாறு நிகழாமல், நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாக நிகழ்கின்றது என்றால், ஜாதகரின் பிறப்பு நேரத்தில் தவறு உள்ளது என தீர்மானித்துவிடலாம்.

ஜாதகம் ஒரு போதும் பொய்க்காது.... "இறைவனால் தீர்மானிக்கபட்ட அனைத்து நிகழ்வுகள் நடந்தே தீரும்" ஆனால் தவறான பிறப்பு நேரத்தால், கணிக்கபட்ட ஜாதகத்தில், ஜாதகருக்கு எதிர்பார்க்கும் பலன்கள், நடப்பு தசா புத்தி காலங்களில் சரியாக பொருந்தி வராது.

"முதலும் கோணல் என்றால் முற்றும் கோணல் என்றாகிவிடும்". தவறாக கணிக்கபட்ட ஜாதகத்தை கொண்டு, எந்த ஒரு ஜோதிடரிடமும் சரியான பலன்களை நிகழ்வு காலத்திற்கு ஏற்றவாறு துல்லிய பலனை கேட்டு அறிய இயலாது.

வாழ்வின் மிக முக்கிய நிகழ்வுகளான...

1. பிள்ளைகளின் படிப்பு காலங்கள்
2. திருமணத்திற்கு அதிஷ்டமான வரனை தேர்ந்தெடுத்தல்
3. திருமண யோகத்திற்கு ஏற்ற தசா/புத்தி காலங்கள்
4. புதிய தொழில் தொடங்குதல் மற்றும் வெற்றிகரமாக நடத்துதல்
5. வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்து நல்ல சம்பாத்தியதை பெறுதல்
6. புதிய வீடு கட்டி குடும்பத்துடன் சுபிட்சமாக இருத்தல்
7. நோயினால் அல்லல்படும் காலங்களை அறிந்து முன்னெச்சரிக்கையுடன் இருத்தல்
8. தீராத கடன் தொல்லைகளை தவிர்த்து நிம்மதியாக வாழுதல்
9. எதிபாரத சம்பவங்கள் நிகழும் காலத்தை அறிந்து நிதானத்துடன் செயல்படுதல்

போன்ற மேலும் பல வாழ்வியல் நிகழ்வுகளை, மிக சரியாக "முன் கூட்டியே அறிய வேண்டுமென்றால்", ஒருவரின் பிறப்பு ஜாதகமும் சரியாக அமைய வேண்டும். இது மிக மிக முக்கியம்.
ஒரு பாவ முனை எங்கு ஆரம்பிக்கின்தோ.. அதன் அனைத்து சம்பவங்களும் அங்கேயே நிர்ணயிக்க படுகின்றது. இது சார ஜோதிடதின் அடிப்படை விதி.
ஒருவரின் பிறப்பு லக்ன ஆரம்ப முனை சரியாக அமைந்துவிட்டால், ஜாதகரின் அனைத்து கொடுப்பினைகளையும் துல்லியமாக கணித்துவிடலாம்.

இந்த பாவ முனைகள், ஜாதகத்தில் அமைந்துள்ளவாறு, ஜாதகரின் விதி கொடுப்பினையை, தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு சாதக, பாதக பலனை சரியாக வழங்கிவிடும்.
பாவமுனைகளின் உப நட்சத்திரம், அதன் சம்பவங்களை, தான் நின்ற நட்சத்திரம்(ST), உப நட்சத்திரம்(Sub Lord), உப உப நட்சத்திரம்( Sub sub Lord) மற்றும் உப உப உப நட்சத்திரம்(Sub Sub sub Lord) மூலம் மிக வலிமையாக நிகழ்த்தி விடும். 
இதுவே உயர் கணித சார ஜோதிடத்தின் அடிப்படை சாராம்சம்.

சார ஜோதிட விதிகளை மேலும் தெரிந்துகொள்ள, எமது குருநாதர், உயர்கணித சாரஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அய்யா அவர்களின், "கொடுப்பினையும் தசாபுத்தியும்" நூலில் படித்து அறியலாம்.
ஆளும் கிரகங்களை கொண்டு, ஒருவரின் பிறப்பு ஜாதகத்தை, மிக துல்லியமா கணித்துவிடலாம். துல்லியமாக கணிக்கபட்ட, சரியான ஜாதகத்தை கொண்டு,  ஜாதகரின் யோக காலங்களையும், பாதக நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளலாம்.
உயர்கணித சார ஜோதிடத்தில், எளிமையாக வகுகக்கபட்டுள்ள,  பன்னிரெண்டு விதிகளை கொண்டு, சரியான பிறப்பு நேரத்தை, மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

ஆளும்கிரக நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை மதிப்பிற்குரிய ஜோதிஷ ஆச்சார்யா S. அண்ணாமலை அவர்களின், சீர்மிகு எழுத்து படைப்பில் உருவாகியுள்ள "சிற்றின்ப சிகரங்கள்" புத்தகத்தில் மிக விரிவாக படித்து அறியலாம்.
ஜோதிட அன்பர்கள்  , அன்றைய தினத்தில், பலன் கேட்க வந்த ஜாதகரை, முதன் முதலில் சந்தித்த நேரத்தை குறித்து கொள்ளவது மிக அவசியம். இதுவே ஆளும் கிரக நிலையில் சரியான நிகழ்வுகளை காட்டும் என்பதால், இது முதன்மையான விதியாக கருதபடுகின்றது.
இதுவரை பொறுமையாக படித்தறிந்த, உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
(Member, All India Stellar Astrologers Association , Chennai, India)
+91-9940137099, 8825518634 | Email: Jbm2k07@gmail.com.

Thursday, April 12, 2018

செவ்வரளி மலர் எந்த தெய்வங்களுக்கு உகந்தது தெரியுமா?

செவ்வாய் கிழமை ராகு கால நேரத்தில் செவ்வரளி மாலை பைரவருக்கு மாலை அணிவித்து துவரம் பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளை பழம் நிவேதனம் செய்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடைய உறவு வலுப்படும்.
ஸ்ரீ காளிகாம்பாளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செவ்வரளி மலரை அணிவித்து பலன்பெறலாம்.



செவ்வாய்க்கிழமையில் முருகருக்கும், சக்திக்கும், வீரபத்திரருக்கும் செவ்வரளி மலர் அணிவித்து அனுகிரகம் பெறலாம்.

                                   Advertisement

பஞ்சமி அஷ்டமி திதியில் வாராகி அம்மனுக்கு இம்மலரை பயன்படுத்தலாம் மிக நல்ல பலன் கிடைக்கும்.

பெருமாள், லட்சுமி, விநாயகர், சரஸ்வதி, சிவன், நந்தி இவர்களுக்கு இம்மலரை அணிவித்தல் கூடாது.

உக்ரமலர் என்பதால் தெய்வம் பார்த்து சூட்ட வேண்டும்.

அமாவாசை, பௌர்ணமி, திங்கள் கிழமையில் இம்மலரை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம்.

ஸ்ரீ துர்கை அம்மனுக்கு புதன், வியாழன், தவிர்த்து மற்ற அனைத்து ராகுகால வேளையிலும் இம்மலரை பயன்படுத்தலாம்.

Amazon Fire TV Stick with Voice Remote | Streaming Media Player


எலுமிச்சை பழம் பலிகொடுத்த பின்னரே இம்மலரை பயன்படுத்த வேண்டும்.

கனியை காலால் மிதித்து திருஷ்டி கழித்த பின்னரோ அல்லது சூலத்தில் கனி சொருகிய பின்னரோ அல்லது எலுமிச்சை கனியை அறுத்து தீபம் ஏற்றிய பின்னரோ தான் இம்மலரை அம்மனுக்கு சூட வேண்டும்.

 பரிகாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மலராகும்.

Toyshine Ice Cream Kitchen Play Cart Kitchen Set Toy With Lights And Music -Small


இம்மலரை நீங்கள் எந்த தெய்வத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் காரண காரியமின்றி பயன்படுத்தக்கூடாது.

தோஷம் கழிக்கவோ, பகை தீரவோ, திருஷ்டி கழிக்கவோ, பிரச்சனை தீரவோ இதுபோன்று ஏதாவது பரிகாரமாக இருக்க வேண்டும்.

செவ்வரளி செடியை வீட்டினில் வளர்க்கக்கூடாது.

வனத்தில் மட்டுமே இருக்க வேண்டிய செடியாகும். ஒதுக்குப்புறமான இடங்களில் வளர்க்க வேண்டிய செடியாகும்.


இச்செடியின் காற்று அடிக்கடி நம்மேல் பட்டால் செல்வ செழிப்பை இழக்க ஆரம்பிப்போம் கவனம்.