கனவுகளின் பலன்கள்-பஞ்சாங்க சாஸ்திரம்-ஜோதிட சாஸ்திரம்-கூறும் விளக்கங்கள்
Benefits of Dreams - Panchanga Shastra - Astrology explanations.
கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்து விடுபட
Astavaraki Temple - Salamdu - Vizhupuram
கால பைரவாஷ்டமி அன்று பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும்
Read more...
நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி?
Read more...
Saturday, December 31, 2022
இனிமையான இல்லறத்திற்கு அவசியமான ஜாதக பொருத்தங்கள்-Inimaiyana ilarathirkku avasiyamana jathaga
Monday, April 4, 2022
தனி மரமா மறுமணமா-Familylife-or-spritualLife|ThilakJBalamurugan-KPAdvanceStellerAstrology
தனி மரமா? மறுமணமா?
"வாழ்க்கையில் இணங்கினால் இனிப்பு, பிணங்கினாள் கசப்பு. இந்த உண்மையை உணர்ந்தவர்களுக்கு இல்லற வாழ்க்கை குதூகலிக்கும்."
ரவிவர்மாவின்தூரிகைக்குசிக்காதஓவியமே…!பிரம்மனின்கற்பனைக்குஎட்டாதபடைப்பே…!ஏழுலகமும்கண்டிராதஅசையும்சிற்பமே..!தேவலோகதேவதைகளும்வியக்கும்பேரழகியே…!இமை மூடினாலும்என் கருவிழியில்சிறைப்பட்டபிம்பமே …!என்ன தவம்புரிந்தேனோஎன்னிதயத்தில்குடிகொண்டாய்…!உன் நினைவிலேபிறவிக்கடலைகடக்கவரம் தாராயோ..!
பெண்மணி அவர்களுக்கு முதல் திருமண பந்தம் ஏன் நிலைக்கவில்லை?
விட்டேன் உலக விரும்பேன் இரு வினை வீணருடன்கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன்; மெய்க்கெடாதநிலைதொட்டேன்; சுகதுக்கம் அற்றுவிட்டேன்; தொல்லை நான்மறைக்கும்எட்டேன் எனும்பரம் தானே வன்தென்பால் எய்தியதே.
Sunday, April 3, 2022
சாமானிய வேதாத்திரி முதல் கோடீஸ்வர மகரிஷி வரை| VethathiriMaharishi Birth chart analysis in Advance KP Steller Astrology|ThilakJBalamurugan
சாமானிய வேதாத்திரி முதல் கோடீஸ்வர
மகரிஷி வரை
பாகம் - 1
அன்புடையீர் வணக்கம்,
"கோள்களின் காந்த அலைகள் பிரபஞ்சத்தின் உள்ளே உந்தும் போது, பிரபஞ்சத்தின் அண்டமான பூமியின் ஈர்ப்பு விசையின் செயல்திறனால், பூ உலகில் தோன்றும் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு வகை உந்து விசையைப் பெறுகின்றது. அத்தகைய காந்த சக்தியே கோள்களின் ஆற்றலாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு உயிரும் இம்மண்ணுலகில் வாழ்க்கையின் போக்கில் காணும் உயர்வு-தாழ்வு, ஏற்றம்-இறக்கம், புகழ்ச்சி-இகழ்ச்சி, துன்பம்-இன்பம் போன்ற மன உணர்வுகளுக்குக் காரணமாக கோள்களின் காந்த சக்தியே பிரதான காரணமாக அமைகின்றது." - வேதாத்திரி மகரிஷி
தற்காலத்து மனிதர்கள் துன்பியல் நிறைந்த வாழ்வை இன்பமாக மாற்றிக் கொள்ளும் வழிமுறைகளை பலரும் பலவழிகளில் அறிய முயற்சித்து வந்துள்ளனர். அவ்வகையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுள் ஒருவரான தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி மனதின் வலிமையால் துன்பத்தை வெல்லலாம் என்கிறார். அதற்கான பல நடைமுறை பயிற்சிகளைம் கூறுகின்றார்.
பாலப்பருவதில் உணவுக்கு வழி இல்லாமல் பசியில் துவண்ட போதும், மத்திம வயதில் கடனில் தம் சொத்துக்கள் முழுவதையும் இழந்து நடு தெருவிற்கு வந்தபோதும், தன் ஆன்மீக பயணத்தில் கோடான கோடி அன்பர்களை பெற்று பெரும் கோடீஸ்வர மகரிஷியாய் வாழ்ந்த போதும், நிகழ்ந்த சோதிட ரீதியான விளக்கங்களை முழுமையாக ஆராய்ந்து அறியும் போது "மனமே எனை நீ வாழ்வித்திடுவாய்" என்று பாரதியார் முழங்கிய கவிக்கு ஏற்றாற்போல் மகரிஷி அவர்கள் தம் மனதை செம்மையாக அமைத்துக்கொண்டு அவரது வாழ்வை வளமிக்கதாக மாற்றிக்கொண்டார் என்றால் அது மிகையாகாது.
மகரிஷி அவர்கள் சிறுவயது தொடங்கி முக்தி அடையும் காலம் வரை வானியலில் காந்த அலை மாற்றத்திற்கு ஏற்ப அவரது வாழ்நாளில் ஏற்றமிகு வளர்ச்சிக்கான நிகழ்வுகளை, அவரது சாதக அமைப்பை உயர் கணித சார சோதிட முறையில் (Steller Astrology) இனி விரிவாக காணலாம்.
வேதாத்திரி மகரிஷியின் சாதக விவரம்
நிகழும் விரோதிகிருது வருடம், தமிழ் மாதம் ஆடி 30ம் தேதி, திங்கள் கிழமை, கதிருதயாதி நாழிகை 1.54:22க்கு, ஆங்கில தேதி 14.08.1911, காலை 06:47:33 மணிக்கு, அமிர்தாதி யோகம் சித்த யோகத்தில், அமர பட்சத்து, சதுர்த்தி திதியில் பாலவ நாமகரணம், திருதிநாம யோகம், சந்திர ஹோரை, சிம்ம லக்னம், மீன ராசி, ஜென்ம நட்சத்திரம் உத்திரட்டாதி 4ம் பாதத்தில் தெய்வக் குழந்தை வேதாத்திரி சுப ஜனனம்.
தாயார் திருமதி. சின்னம்மாள், தந்தை திரு. வரதப்பன் ஆகியோர்க்கு எட்டாவது புதல்வராக, சென்னை-கூடுவாஞ்சேரியில் பிறந்தார். எட்டாவது ஆண் பிறந்தால் வெட்டி அரசாளும் என்பார்கள். ஆனால் பழமொழியை பொய்ப்பிக்கும் விதமாக 'வேத வேழம்' என்று போற்றும்படியாக பிற்காலத்தில் வேத ஞானத்தில் நுண்மாண் நுழைபுலம் பெற்றவராக விளங்குவார் என கருதி, இவர் பெற்றோர்கள் "வேதாத்திரி" என்று திவ்யநாமத்தை சூட்டி மகிழ்ந்தனர்.
வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் பாவமுனை ராசிக்கட்டம்
வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் பாவமுனை ராசிக்கட்டம் |
வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் பாவ ஆரம்ப முனைகள், கிரக நிலைகள்
வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் பாவ ஆரம்ப முனைகள், கிரக நிலைகள் |
வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் கிரக தொடர்புகள்
வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் கிரக தொடர்புகள் |
விதி கொடுப்பினை என்னும் பாவ தொடர்பு
ஒரு மனிதனின் விதி என்ற கொடுப்பினையை, உயர்கணித சரஜோதிட விதிகளின் படி பாவத்தொடர்பு அட்டவணை மூலம் அறிந்தது கொள்ளலாம்., பாவத்தை முன்னின்று இயக்க கூடிய பலமிக்கவர்கள் முறையே பாவத்தின் உப அதிபதி (sub loard - SL), உப உப அதிபதி (sub sub loard - SSL), நட்சத்திரம் (Star loard) மற்றும் பாவத்தில் அமர்ந்த கிரகங்கள் ஆகியோர்கள் ஆவர்.
பாவ உப அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து
மேலும் அசுப பாவங்களான எட்டாம் மற்றும் பன்னிரெண்டாம் பாவ தொடர்பு பெறவில்லை என்றால்
அந்த பாவம் ஜாதகருக்கு முழு நன்மையை அளிக்கும். அந்த வகையில் மகரிஷின் சாதகத்தில் ஆன்மீக
பாதையில் முழுமை அடையக்கூடிய முழு சுப தன்மையை அனைத்து பாவங்களும் 5ம் பாவம் என்னும்
பூர்வபுண்ணிய மற்றும் 9ம் பாவம் என்னும் பாக்கிய ஸ்தானத்தை தொடர்பு கொண்டுள்ளது மிக
சிறப்பு.
வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் விதி கொடுப்பினை என்னும் பாவ தொடர்பு
வேதாத்திரி மகரிஷியின் பிறப்பு சாதகத்தில் முழு சுபரான தேவகுரு என்னும் வியாழனும், அசுரகுருவான சுக்கிரனும் பெரும்பகுதியான பாவங்களுக்கு உபாதிபதியாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.
வேதாத்திரி மஹரிஷியின் சாதகத்தில் ஒட்டுமொத்த விதி கொடுப்பினையை பார்க்கும் போது “கருவிலே திருவுடையவராக” அருட்பேராற்றலின் ஆசிபெற்றுள்ளதை அறிய முடிகிறது. பாசமிகு பெற்றோர்கள் மற்றும் உற்றார்கள், பெரிய குடும்பம், தீர ஆராய்ந்து முடிவு காணுதல், நற்காரியங்களில் ஈர்ப்பு கொள்ளும் ஆற்றல், நல்ஒழுக்கம் பேணுதல், வைராக்கியம், குடும்ப மேன்மை, சமூக சிந்தனை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல், சுயமுயற்சி, கடின உழைப்பு, பொருளாதாரத்தில் மேம்படவேண்டும் என்ற ஆவல், நட்பை போற்றும் நற்பண்பு, அனைவரிடத்திலும் மிகுந்த மரியாதை, ஆன்மீக தேடல், விடாமுயற்சியோடு செயல்படுதல், ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்ற கேள்விக்கணைகளை தனக்குள்ளே தொடுத்து முழு தீர்வு காணுதல், மனவலிமை, நீண்ட தியானம், யோகத்தில் ஈடுபடுதல், யோக முறையில் பழைய பழக்கத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கி எளிமை ஆக்குதல், பிரபஞ்சத்தை தத்துவர்த்தவமாக நோக்குதல் போன்ற நற்குணங்களை மஹரிஷியின் சாதகத்தில் காணமுடிகிறது.
லக்னம் முதல் 12ம் பாவம் வரை விதிக்கொடுப்பினையின் ஆய்வை அடுத்த கட்டுரையில் (பாகம் -2) விரிவாக காண்போம்.
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்வழிகாட்டுதலுடன்,
என்றும் அன்புடன்,
திலக். ஜெ. பாலமுருகன் MCA., M.Sc (Yoga).,
Member, All India Steller Astrologer Association,
CHENNAI | TAMILNADU | INDIA Whatsapp : +91 - 8 8 2 5 5 1 8 6 3 4.
Saturday, April 2, 2022
எனது சொந்த ஊரில் மனவளக்கலை மன்றம் ஆரம்பித்து யோக கலையை போதிக்க விரும்புகின்றேன் - எனது ஆசை நிறைவேறுமா?
எனது சொந்த ஊரில் மனவளக்கலை மன்றம் ஆரம்பித்து யோக கலையை போதிக்க விரும்புகின்றேன் - எனது ஆசை நிறைவேறுமா?
அன்புடையீர் வணக்கம்,ஆன்மீக வாழ்வில் அதிதீ பற்று உடையவர்கள் "யான் பெற்ற இன்பம் பெறுக இவையகம்" என்ற முது மொழிக்கு ஏற்றாற்போல் தான் அடைந்த பேரின்பத்தை மற்ற உயிர்களும் அடைய வேண்டும் என்று உயர்ந்த நோக்கோடு நினைப்பார்கள். அவ்வகையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஆன்மீக உள்ளுணர்வுக் கல்வியில் முது அறிவியல் பட்டம் என்னுடன் பயிலும் தோழி ஒருவரின் கேள்விதான் இது. எனது சொந்த ஊரில் மனவளக்கலை மன்றம் ஆரம்பித்து யோக கலையை போதிக்க விரும்புகின்றேன் - எனது ஆசை நிறைவேறுமா? என்று தனது சாதகத்தில் அதற்கான விதிகொடுப்பினை உள்ளதா என்று ஆய்வு செய்து பலன் கூறுமாறு கேட்டார்கள்.
தோழி அவர்களின் பிறப்பு நேர சாதக விவரங்கள்
பிறந்த தேதி | பிறந்த நேரம் | பிறந்த ஊர் |
25-05-1993 | 7:42 AM | வண்ணாரப்பேட்டை - சென்னை. |
மிதுன லக்னம், மிதுன ராசி மற்றும் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் 1ம் பாதம். இயற்கை சுபகிரகமான குருவின் நட்சத்திரம். அமிர்தாதி யோகம் சித்த யோகம்.
யார் ஆன்மீகதில் சிறந்து செயல்படுவார்கள்?
ஆன்மீகத்தில் ஒருவர் நீடித்து சிறந்து செயல்பட வேண்டும் என்றல் லக்ன பாவம் ஒருவரின் சுய சிந்தனையும், 5ம் பாவம் மந்திர உச்சாடனங்களையும், 9ம் பாவம் தெய்வ வழிபாடு, தத்துவ ஞானம் போன்றவற்றை குறிக்கும். அதனால் நம் முன்னோர்கள் 1, 5, 9 ஆகிய பாவங்களை தர்மஸ்தானங்கள் என்று அழைத்தார்கள்.
தர்மஸ்தானங்களான 1, 5, 9ம் ஆகிய பாவங்களுக்கு 12ம் பாவங்களான 4, 8 ,12ம் பாவங்கள் தெய்வ நம்பிக்கைக்கு எதிர்மறையான சிந்தனையை தரும். மேலும் ஆன்மீக வாழ்விற்கு எதிரான பலனை தரும். காரணம் இது பொருள் பற்றான பாவ கரகத்தை தந்து சாதகரை தியாக சிந்தனை அற்றவராக மாற்றிவிடும்.
1, 5, 9ம் பாவங்கள் வலிமை பெற்று அத்துடன் ஆன்மீக கிரகமான குரு சம்மந்தப்பட்டால் சாதகர் ஆன்மீக வாழ்க்கையை வாழ்வர். 1, 5, 9ம் பாவங்களுடன் சனி சம்பந்தப்பட்டால் சாதகர் ஆன்மீக வாழ்க்கையில் சன்யாச நிலையை மேற்கொண்டு பொருளாதார சிந்தனைகள் இல்லாத துறவு நிலையை மேற்கொள்வார்.
தோழி அவர்களின் சாதகத்தில் ஆன்மீகத்தில் உயர்ந்து சேவை செய்யும் கொடுப்பினை உள்ளதா?
ஆன்மீக வாழ்க்கைக்கு முக்கியமான தகுதிகள் பொருள் பற்றில்லாமல் தியாக சிந்தனையுடன், சேவை மனப்பான்மையுடன் குருவின் போதனைகளை தாம் வழுவாது கடைபிடித்து தெய்வ நம்பிக்கையுடன் சேவை புரிவதாகும்.
நல்லதோர் வீணை செய்தே- அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி சிவசக்தி-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப நிலத்திற்கு பாரமாய் வாழ்ந்து மடியாமல் எடுத்த பிறவி சமுதாயத்திற்கு ஏதேனும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தீவிர வேட்கையுடன் ஆன்மீக பணியாற்றிட வேண்டும் என்று தோழி அவர்கள் விரும்பினார்.
இந்த வகையில் தோழி அவர்களின் சாதகத்தில் அதற்கான கொடுப்பினை உள்ளதா என்று ஆய்வு செய்வோம்.
1ம் - லக்ன பாவம்
1ம் பாவம் - உபய ராசியான மிதுனத்தில் ராகு நட்சத்திரத்தில் மற்றும் ராகு உப நட்சத்திரத்தில் அமைந்துள்ளன. லக்ன பாவ உபநட்சத்திரம் புதன்(9) நட்சத்திரத்தில், கேது (6, 12) உப நட்சத்திரத்தில் அமைந்து தொடர்பு கொண்ட பாவங்கள் 6, 9 ,12. காற்று ராசி லக்னமாக அமைந்ததால் சாதக புத்தி கூர்மையுடன் செயல்படுவார்.
லக்ன பாவ உப அதிபதி | நின்ற நட்சத்திரம் | நின்ற உப நட்சத்திரம் | பாவத் தொடர்பு |
ராகு (1, 10) | புதன்(9) | கேது (6, 12) | 6, 9, 12 |
லக்ன பாவ உப அதிபதி ராகு பத்தாம் பாவத்திற்கும் உபாதிபதியாக அமைந்ததால் 10ம் பாவத்தில் உள்ள கெளரவம், அந்தஸ்து பொறுப்பு மிக்க ஆலோசகர் போன்ற குண இயல்பினை சார்ந்து சாதகர் செயல்படுவார்.
மேலும் ஒன்றாம் பாவ உப நட்சத்திராதிபதி ராகுவின் காரகங்கள் சாதகரை எதிலும் பிரமாண்டமான சிந்தனை, எண்ணம், செயல், உடல் உறுப்புகள் அதீத வளர்ச்சி போன்ற விளைவுகளை சாதகரின் லக்னம் சார்ந்து வழங்குவார். இது கிரக காரக ரீதியில் சாதகர் அனுபவிப்பர்.
1 -> 6ம் பாவ தொடர்பு : சாதகர் எதிலும் வெற்றி வேட்கை, தனித்து செயல்படுதல், ஆரோக்கிய சிந்தனை, அதீத உணவு மற்றும் ஆடை வேட்கை போன்ற ஆறாம் பாவத்தில் உள்ள லக்ன பாவ காரகங்கள் ராகுவின் காரகத்திற்கு ஏற்றார் போல் செயல் படும்.
1 -> 9ம் பாவ தொடர்பு : நம்பிக்கை, புகழ் ஆராய்ச்சித்திறன், தெய்வ நம்பிக்கை, பழமையை விரும்புதல், அந்நியருடன் நெருங்கி பழகுதல் போன்ற குண இயல்புகள் சாதகரிடம் காணப்படும்.
1 -> 12ம் பாவ தொடர்பு : ரகசிய செயல்களில் ஈடுபடுதல், தன்னையே அர்பணித்தல், தோல்வி தடையை சந்தித்தல் போன்ற காரகங்கள் சாதகருக்கு ராகு வின் காரகங்களுக்கு ஏற்றார் போல் அமையும்.
1ம் பாவம் -> 6, 9,12ம் ஆகிய பாவங்களை தொடர்பு கொடுள்ளது சாதகரின் சிந்தனை மேற்குறிப்பிட்ட காரகங்களின் கலவையாக தனது வாழ்வில் மேற்கொள்வார்.
5ம் பாவம்
ஐந்தாம் பாவம் காற்று ராசியான துலாத்தில் செவ்வாய் நட்சத்திரத்தில் சூரியனின் உபநட்சத்திரத்தில் அமைந்துள்ளது. பாவ காரகங்களை ஏற்று நடத்தும் உபாதிபதி சூரியன் மனோகாரகன் சந்திரனின் நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரத்தில் அமைந்துள்ளது. சந்திரன் எந்த பாவத்திற்கும் நட்சத்திர மற்றும் உபாதிபதியாக வரவில்லை. அமர்ந்த இடத்தின் பலனை சூரியனுக்கு வழங்குவார். அந்த வகையில் சந்திரன் அமர்ந்த இடம் லக்ன பாவம்.
ஐந்தாம் பாவ உப அதிபதி | நின்ற நட்சத்திரம் | நின்ற உப நட்சத்திரம் | பாவத் தொடர்பு |
சூரியன் (5) | சந்திரன்(1) | சந்திரன்(1) | 1, 5, 11 |
ஐந்தாம் பாவத்துடன் சம்பந்த பட்ட சூரியன் அரசு ஆலயங்கள், அரசியல், ஆன்மிகம், கலை சார்ந்த நிகழ்வுகள், தலைமை தாங்குதல், விளையாட்டு போட்டி போன்ற நிகழ்வுகளில் மற்ற கிரக தொடர்புகளுக்கு ஏற்றவாறு தனது காரகங்களை ஐந்தாம் பாவ வழியாக செயல் படுத்துவார். அந்த வகையில் தோழி அவர்களின் சாதகத்தில் ஐந்தாம் பாவம் ஒற்றை படை தொடர்பினால் ஆன்மிகம் மற்றும் யோக கலை சார்ந்த செயல்களில் ஈடுபடுத்தியது, லகினம் சம்பந்த பட்டதால் யோகத்தில் நாட்டம், தெய்வ பாடல்களின் மீது ஆர்வம், பக்தி செலுத்துவதில் தீவிர வேட்கை, ஆன்மீக தொண்டில் நாட்டம் போன்றவை தோழி அவர்களின் சிந்தனையில் விதிவழி மன பதிவுகள் ஏற்பட்டுள்ளதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகின்றது.
5 -> 1ம் பாவ தொடர்பு : சுயமான ஆழ்ந்த சிந்தனை உடையவர், சிறப்பான கலைப்பணி செயல்கள், எதையும் கலைநயமாக வைத்தல், தனது தேவைக்கு அதிகமான உபயோகமான கலைகளை கற்றல் போன்ற காரகங்களை ஐந்தாம் பாவம் லக்கின பாவம் தோடு தொடர்பினால் இதன் அடிப்படையில் சாதகரை செயல்படுத்தும்.
5 -> 5ம் பாவ தொடர்பு : கலைச்சார்புடைய செயல்களில் ஈடுபடுதல். ஆழ்ந்த சிந்தனை, சமய சடங்குகளில் கலந்துகொள்ள, ஆன்மீக மற்றும் கலை சார்ந்த விஷங்களை மற்றவர்க்கு போதித்தல் போன்ற காரகங்களை சூரியனின் காரகங்களோடு பாவத்தில் இயல்புப்படி ஐந்தாம்பவம் சாதகரை செயல்படுத்தும்.
5 -> 11ம் பாவ தொடர்பு : கலைகள் சார்ந்து சங்கங்களுடன் நெருங்கிய தொடர்புகொள்ளுதல், நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் போன்ற காரகங்கள் 5ம் பாவம் 11ம் பாவத்தொடர்பினால் நிகழும்.
ஐந்தாம் பாவம் 1, 5, 11ம் ஆகிய உயிர் பற்றான பாவங்களுடன் தொடர்பு பெற்றது கலை சார்ந்த விஷயங்களில் அதீத நாட்டம் உடையவராக இருப்பர். அதில் உள்ள நுணுக்கங்களை நம்பிக்கையுடன் கற்று பிறருக்கு கற்பிக்கும் தகுதியையும் தோழி பெறுவார் என்பதை அவரது சாதகத்தில் ஐந்தாம் பாவம் உணர்த்துகின்றது.
9ம் பாவம்
தெய்வ வழிபாடு, சமயச் சார்பு, தியானம், தத்துவ மார்க்கம், தத்துவ ஞானம், ஆன்மீக சேவை போன்ற காரங்களை ஒன்பதாம் பாவ உபாதிபதி நிகழ்த்துவார். தோழி அவர்களின் சாதகத்தில் ஒன்பதாம் பாவம் ஒற்றைப்படை பாவங்களான 1, 3, 9ம் பாவங்களின் தொடர்பு முழுமையான ஆன்மீக வாழ்விற்கு உதவும் மேலும் அதை சார்ந்து ஆன்மீக தொண்டாற்றிட ஒன்பதாம் பாவம் சாதகமாக உள்ளது.
தோழியின் சாதகத்தில் ஆன்மீக பாவமான ஒன்பதாம் பாவமுனை சனியின் வீடான ஸ்திர மற்றும் காற்று ராசியான கும்பத்தில் செவ்வாய் நட்சத்திரத்தில் மற்றும் புதன் உபநட்சத்திரத்தில் அமைந்துள்ளது.
ஒன்பதாம் பாவ உப அதிபதி | நின்ற நட்சத்திரம் | நின்ற உப நட்சத்திரம் | பாவத் தொடர்பு |
புதன் (9) | சந்திரன்(1) | சுக்கிரன் (3) | 1, 3, 9 |
9 -> 1ம் பாவ தொடர்பு : நல்ல ஆன்மீக சித்தனை, சுய ஆராய்ச்சி மேற்கொள்ளல், ஆன்மீக சிந்தனையில் மேலோங்குதல்.
9 -> 3ம் பாவ தொடர்பு : தனது சக்திக்கு அதிகமானவற்றை சிந்தித்தல், ஆன்மிகம் சார்ந்த விஷங்களை எழுதுதல், ஆன்மீக தகவல்களை பரிமாறிக்கொள்ளல்.
9 -> 9ம் பாவ தொடர்பு : மத சார்புடைய விஷயங்களில் அதிக நாட்டம் கொள்ளல், ஆன்மிக கல்வியில் உயர் கல்வி பயிலுதல் மற்றும் பயிற்சி பெறுதல்.
புதன் + சந்திரன் + சுக்கிரன் ஆகிய சம்சார வாழ்விற்கு ஏதுவான கிரகம் ஒன்பதாம் பாவத்துடன் சம்பந்தபட்டுள்ளதால் தோழி அவர்கள் குடும்ப வாழ்வில் இணைந்து அதனுடன் ஆன்மீக உணர்வு ரீதியாக வாழ்வார். மேலும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு படி படியாக ஆன்மீகத்தில் உயர்வார் ஆனால் முழுமையான சன்யாச வாழ்விற்க்கோ தனித்த யோக சாதனை புரிந்து ஆன்மீக குரு நிலை அடைவதற்க்கோ விதிப்படி கொடுப்பினை சற்று மிகுதியாக வேண்டும்.
தோழியின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக நமது ஆய்வின் இறுதிக்கு வந்தாகிவிட்டது. மேலே குறிப்பிட்ட 1, 5 ,9ம் ஆகிய தர்மஸ்தானங்கள் நல்லநிலையில் உள்ளன. ஆன்மிகம் மற்றும் யோக கலை சேவைக்கு சாதகமாக உள்ளன. பொருளாதார நோக்கம் இன்றி சேவை மனப்பான்மையோடு வேதாத்திரி மகரிஷி தோற்றுவித்த மனவளக்கலை மன்றத்தை ஏற்படுத்தி ஆன்மீக தொண்டாற்றி தானும் இந்த சமுதாயமும் உயர்ந்திட வேண்டும் என்ற தோழியின் உன்னதமான உயந்த நோக்கம் நிறைவேறிடும் என்று சாதக ஆய்வின் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடிகின்றது.
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன். எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்வழிகாட்டுதலுடன், என்றும் அன்புடன், திலக். ஜெ.பாலமுருகன் MCA., M.Sc (Yoga)., Member, All India Stellar Astrologer Association, CHENNAI | TAMILNADU | INDIA Whatsapp : +91 - 8 8 2 5 5 1 8 6 3 4.