உச்சிஷ்ட மகா கணபதி போற்றி!
அனைவருக்கும் வணக்கம்.
அழகு என்றால் என்ன?... அழகுக்கான இலக்கணம் என்ன?.... அழகை வரையறுத்தது யார்?.... அழகை நிர்ணயிக்க அளவீடுகள் ஏதேனும் உண்டா? இப்படி அழகபத்தி நாம் கேள்விகளை அடுக்கிககொண்டே போகலாம்.
ஜோதிடத்தில் ஐம்புலன்களின் சங்கமமாய் விளங்கும் இரண்டாம் பாவம் ஜாதகரின் முகத்தையும் அதில் உள்ள உறுப்புகளையும் குறிக்கும்.
ஒளி நிறைந்த உலகத்தை கண்கள் வழியே பார்க்கின்றோம்!
இனிய ஒலி அலைகளை காதின் ஊடே கேட்கின்றோம்!
மனதில் தோன்றும் என்னங்களை வாய் மூலமாக பேசுகின்றோம்!
சுகந்தமான நறுமணத்தை மூக்கின் ஊடே நுகர்கின்றோம்;
ஸ்பரிசமான தொடுதலை தோல் உணர்வில் திலைக்கின்றோம்.
இவை அனைத்தையும் உள்ளடக்கிய உறுப்புகளின் அமைப்புகளில் ஒருவரின் அழகை காண்கின்றோம்.
ஒருத்தரை நாம பார்த்த நொடியே, அவங்க அழகானவங்களா?னு நாம சட்டுனு தீர்மானித்விடுகிறோம்....! எவ்வளவு முற்போக்குவாதியாக இருந்தாலும் கூட, அழகானவர்களுக்கு நாம நம்மை அறியாமலேயே பிரதிநிதித்துவம் கொடுத்துவிடுகிறோம்....!
மலர்ந்த முகம் நல்ல குணம் உடையவர்' என்று உணர்த்தும்! குணத்தில் குறையுள்ளவர்கள்.. முகம் "எண்ணையில் போட்ட சுருள் பகோடா" போல் சுருங்கி காணபடும். இதைதான் சொல்வார்கள்"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்று.
உலகிலேயே அழகானவர் யார்? என்று உலக அழகி போட்டியில் அடையாளம் காண்கின்றோம்.
சரி.. அழகை தீர்மானிக்கும் பொது அளவீடுதான் என்ன?
"பொலிவான முகம், அளவான முக அங்கங்கள், முழுமையான உதடுகள்" போன்ற விஷயங்கள் அழகான முகத்தின் பிரதிபலிப்பாக நம்மால் பொதுவாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய முக அமைப்பு இருக்கும் பெண் ஆரோக்கியமானவளாகவும், குழந்தை பேறு மிக்கவளாகவும் அதிகம் இருந்தமையால், முற்காலத்திலிருந்தே அத்தகைய முக அமைப்பினை உடைய பெண்களை ஆண்கள் விரும்பி அனுகினார்கள்.
காலப்போக்கில் அதுவே பெண்களின் அழகின் அடையாளமாக மாறிப்போனது...! அழகை விளக்கும் "சாமுந்திரிகா லட்சணம்" சாஸ்த்திர நூலில் ஏகபட்ட விளக்கங்களை ஆன்களுக்கும், பெண்களுக்கும் விரிவாக தந்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
அது என்னா சாமுந்திரிகா லட்சணம்?
சாமுந்திரிகா லட்சணம் என்பது ஒருவரின் அங்க அவயங்களை வைத்தே அவரின் குணநலன்களைப் பற்றிய விபரங்களைக் கண்டறிவது.
இது ஆதிகாலந்தொட்டு நமது இந்தியாவில் இருந்து வரும் பாரம்பரிய அறிவு… இதில் பெண்கள் பற்றிய அழகு குறிப்புகள் நமது பண்டைய கால இலக்கியங்கள், புராணங்கள் மற்றும் சாமுந்தி்ரிகா லட்சண குறிப்புகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இதில் பிரதானமாக அமைவது மூக்கும் கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100க்கும் மேற்பட்ட குறிப்புகள் சாமுநதி்ரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
உருண்டையான கண்கள்; உள் வாங்கிய கண்கள்; அகண்டு விரிந்த கண்கள் என்பது போன்றவை சொல்லப்பட்டுள்ளது.
இதுபோன்றுதான் மூக்கின் அமைப்பும் சொல்லப்பட்டுள்ளது. மூக்கு கூர்மை யாக இருந்தால் எப்படி? தட்டையாக இருந்தால் எப்படி? என்று பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது.
மேற்கண்ட அமைப்புகள் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் இரண்டாம் பாவமும், காரக கிரகங்களும் மிக சிறப்பாக அமைய வேண்டும்.
நரம்பு மற்றும் வாக்குகாரகன் புதன், தனகாரகன் குரு, சுபிட்சகாரகன் சுக்கிரன், நேத்திரகாரகன் சூரியன் ஆகியோர்கள் லக்னத்திற்கு தீமையான பாவங்களான 8,12ம் பவ சமபந்தம் இன்றி இருப்பது மிகவும் சிறப்பு.
2ம் பாவமோ அல்லது காரக கிரகங்களோ கெட்டுவிட்டால் இந்த பலன்கள் கெட்டுவிடும்.
ஜாதக அலங்காரம் 487வது சுலோகத்தில்
நலம் சிறந்த ரெண்டாம் வீட்டதிபனும்
குலம் செறிந்த குருவும் பலமதாய்ப்
பலஞ் செறிந்த புகர் பார்க்க நின்றிடில்
பிலஞ் செறிந்த விலக்கணம் பேசுவான்
இரண்டாம் வீட்டோடு குலம் தழைக்க பெயர்பெற்ற குருவும், அனைவரும் புகழும் சுக்கிரனும் சமபந்தபட ஜாதகன் "யாவரையும் வெற்றி கொள்ளும் மேம்பாடான இலக்கணம் அறிந்து பேசுவான்" என இயம்புகின்றது.
பாரம்பரிய ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டு நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் மேம்பட்ட ஜோதிட விளக்கத்துடன் துல்லிய பலனை கூறும் உயர் கணித சார ஜோதிடத்தில் கீழ்கண்டவாறு விளக்கபடுகின்றது.
இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் ஆகியோர்கள் இரண்டாம் பாவத்திற்கு உபாதிபதியாக வந்து லக்னத்திற்கு துர்ஸ்தானங்களான 8,12ம் பாவ சம்பந்தம் இன்றி அமையும் ஜாதகர் மிகவும் அழகாகவும், இனிமையாக பேச கூடியவராகவும் லட்சணமாக இருப்பார்.
இரண்டாம் பாவத்திற்கு உபாதிபதியாக நின்ற கிரகங்களின் பலன்கள்:
- சூரியன் : லக்னத்திற்கு சுப பாவங்களை தொடரபுகொள்ளல் நன்று. இரட்டைபடை பாங்களை தொடர்பு கொண்டால் சூடான வார்த்தை பேசுவார். 8, 12 பாவதொடர்பு கண்நோய், முக ரோகம் ஏற்படும்.
- சந்திரன்: நல்ல முக வசியம் உண்டு. இனிமையாக பேச கூடியவர்.
- செவ்வாய்: பேச்சில் சூடு பறக்கும்.
- புதன்: நன்றாக பேச கூடியவர்.
- குரு: வசிகரமான முக பொலிவு, அன்பு கலந்த பேச்சு.
- சுக்கிரன்: அழகு தோற்றம், கலையான முகம்.
- சனி: பொய் சொல்ல கூடியவர். குளறி பேசுவார்.
- ராகு: விஷ வாக்கு உள்ளவர். பொய்யை மெய்போல் பேசுவார்.
மேற்கண்ட அமைப்பில் இரண்டாம் பாவ முனையும், கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரங்களின் பாவ தொடர்புகள் லக்னத்திற்கு 8,12 சம்பந்தம் இன்றி சுப வலிமையோடு இருந்தால் பலன்களும் நன்மை அளிக்கும் விதத்தில் சிறப்பாக இருக்கும்.
"சிற்றின்ப சிகரம்" சார ஜோதிட நூல் ஆசிரியர், ஜோதிட ஆச்சார்யா, முனைவர். அண்ணாமலை அவர்கள், நரம்புகள் மூலம் முகத்தின் தசைகள் எவ்வாறு கட்டமைக்கபடுகின்றன என்ற அறிவியல் பூர்வ விளக்கத்தின் மூலம், முக அழகிற்கான சார ஜோதிட விளக்கத்தை மிக அருமையாக, உயர் கணித சார ஜோதிட முகநூல் பக்கத்தில் நவம்பர் 20, 2018 அன்றைய பதிவில் மிக அருமையாக விளக்கியிருப்பார்.
- ஒருவருக்கு முகம் நல்லவிதத்தில் எவ்வித குறையும் இன்றி அமைவதற்கான மருத்துவ விளக்கத்தில், மூளையிலிருந்து வரும் ஏழாவது கபால நரம்பு தான் முகத்தசைகளை இயக்குகிறது.
- மூளையின் தண்டுப்பகுதியிலிருந்து புறப்படும் இந்த நரம்பு காதின் உட்புறம் இருக்கும் “முகக்குழாய்” எனும் மிகவும் குறுகிய பகுதியின் வழியாக கபாலத்தை விட்டு வெளியேறி, முகத்திலுள்ள தசைகளுக்கு வந்து சேருகிறது.
- முகத்திற்கு வந்ததும் ஐந்து கிளைகளாகப்பிரிந்து முகத்தசைகள், கண்ணீர் சுரப்பிகள், உமிழ் நீர் சுரப்பிகள், நாக்கு, உள்காது ஆகியவற்றில் உள்ள தசைகளை இயக்குகிறது.
- இந்த நரம்பு சிறப்பாக செயல்படும் போது முகதசைகளின் ரத்த நாளங்களின் இயக்கங்கள் அனைத்தும் நன்மை அடைகின்றது.
ஒருவருக்கு எவ்வித பாதிப்பும் இன்றி முகம் அமைய வேண்டும் என்றால்,
உயர் கணித சார தொழில் முறை ஜோதிடத்தின் விதிகள் கூறும் விளக்கத்தை அறிவோம்.
- மூளையில் இருந்து வரும் நரம்புகளை குறிக்கும் பாவம் 1ம் பாவம் வலுவடைய வேண்டும்.
- மூளையில் இருந்து வரும் நரம்புகள் காதின் பின் பக்க வழியாக சென்று முகத்தில் 5 நரம்புகளாக பிரிகிறது. அப்போது 2ம் பாவம் சுப பாவங்களுடன் உள்ள தொடர்பு முக தசைகளை பொலிவடைய வைக்கின்றது.
- பொதுவாக நரம்புகளை குறிக்கும் பாவம் 3ம் பாவம் வலிமையுடன் இருப்பதும் அவசியம்.
- நரம்புக்கு அதிபதி புதன் ஜாதகத்தில் சுப கோள்களின் சாரத்திலும், லக்னத்திற்கு 8,12ம் பாவ தொடர்பின்றி பாதிப்பு அடையமால் இருக்க வேண்டும்.
- மூளைக்கு அதிபதி சூரியன் பாதிப்பு அடையகூடாது.
- குரு இயற்கை சுபர். கூடவே கையில் வைத்திருக்கும் பாவங்கள் சுபத் தன்மை உடையதாக இருந்தால், ஜாதகர் இயற்கையிலேயே மென்மையான சுபாவம் கொண்டவராக இருப்பார்.
- ஒரு கிரகம் இயற்கை சுபராக இருந்து, தன்னுடைய கையில் சுப தன்மையுள்ள பாவங்களை வைத்திருந்து, அந்த கிரகம் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொண்ட பாவங்கள் லக்னத்திற்கு தீமையை செய்யும் 8,12ம் பாவங்களாக இருந்தாலும், சுப கிரகம் வலி வேதனைகளை தரும் ஆனால் அதில் கொடூரதன்மை இருக்காது. இது பொதுவாக அனைத்து பாவங்களுக்கும் பொருந்த கூடிய சார ஜோதிட விதி.
- 1ம் பாவ உப நட்சத்திரமாக உள்ள கிரகம் 8ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக வரக்கூடாது, வந்தால் பெரும் தீமை தரும் என்று எமது குருநாதர் "கொடுப்பினையும் தசாபுக்தியும்" நூலில் விளக்கியிருப்பார்.
- 1ம் பாவம் நோய் எதிர்ப்பு திறன்,செல்கள் உற்பத்தி,ஜாதகரின் தனி திறமை, முழுமை யான தோற்றம்,கௌரவம்,புகழ்,வெற்றிகளை குறிக்கும், இவற்றியெல்லாம் மறுக்கும் பாவம்12ம் பாவம்.
- 12 ம் பாவம் என்பது தோல்வி, ஏமாற்றம், செயல்திறன் இல்லாமை, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பது, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை குறிக்கும்.
- ஆக 8,12ம் பாவத்தை 2ம் பாவம் தொடர்பை பெற்று பாதிப்படையும் போதும், கிரக காரகங்களும் கெடும் போதும் ஒருவரது முக அமைப்பில் குறை ஏற்பட்டு முக வசிகரத்தை இழப்பார் என்பதை நாம் தெளிவாக அறியவேண்டும்.
மேற்கூறிய ஜோதிட விதிகள் அங்கங்கள் எவ்வித குறையும் இன்றி, நல்லவிதத்தில் இருக்கின்றதா என்பதை அறிய முடியுமே தவிர ஒருவரின் அழகை சான்று அளிக்கும் சாசனமாக கருத கூடாது.
அழகு என்பது அனைவராலும் ஒரே மாதிரி ஏற்றுகொள்ள கூடியது கிடையாது. ஒருவருக்கு அழகாக தெரியக்கூடியது மற்றொருவருக்கு வேறுவிதத்தில் தெரியும். சமிபத்தில் இணைய தளத்தில் படித்த "தாய்மை அழகு" கதையை
தங்களுக்கு பகிர்கின்றேன்.
ஒரு சிறுவன் தன் வீட்டில் தனியாக சாப்பிட்டு கொண்டுஇருந்தான். அப்போது அருகில் வசிக்கும் பெண் ஒருவர், 'கூனி இருக்காங்காளா?' என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.
அதற்கு அச்சிறுவன், 'அப்படி யாரும் எங்கள் வீட்டில் இல்லை' எனக் கூறி அப்பெண்மணியை வீட்டை விட்டு அனுப்பி விட்டான்.
சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த தாயிடம், ஒருவர் கூனி இருக்காங்களா? எனக் கேட்டார். இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அம்மா' என்றான்.
தாய் அந்த சிறுவனின் அருகே அமர்ந்து, 'ஏம்ப்பா அம்மாவின் கூனை இதுவரை நீ பார்த்தது இல்லையா?
இந்த ஊரில் பலர் என்னை கூனி என்று தானே கூப்பிடுவார்கள்' என்று கூறியவுடன், மகன் அம்மாவை இறுக அணைத்து முத்தமிட்டு 'அம்மா நான் உன்னை தாயாக தான் பார்த்தேன். இதுநாள் வரை எனக்கு உன்னுடைய 'கூனே' கண்ணுக்கு தெரியவில்லை' என்றானாம்.
ஒரு குழந்தைக்கு தாய்தான் அழகு. அந்த பெண்ணுக்கு தாய்மை தான் அழகு.
அழகு என்பது அவரவர் உள் என்னங்களை பொருத்தது. ஆண்டவனின் படைப்பில் அனைத்தும் அழகே. பார்ப்பவரின் கண்களில்தான் இதன் சிறப்பு அமைந்துள்ளது.
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
+91-9940137099, 8825518634.
Jbm2k07@gmail.com