விதியின் கோலமும்… ஒரு தாயின் கண்ணீரும்!
Member of All India Advance KP Stellar Astrology - Chennai
https://www.facebook.com/share/v/1CJBEsQdom/
ஜோதிடம் என்பது வெறும் கட்டங்களைப் பார்ப்பது மட்டுமல்ல, அது மனித மனங்களின் காயங்களுக்கு மருந்திடும் ஒரு கலை. பல ஆண்டுகள் பல ஜாதகங்களைப் பார்த்த எனக்கு, சில நிகழ்வுகள் மட்டும் நெஞ்சை விட்டு அகலாது. அப்படி ஒரு மதிய வேளையில் தான் ஒரு பெண்மணியிடம் இருந்து என் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.
ஐயா… என் பொண்ணு இப்ப எங்க கூடத்தான் இருக்கா. முதல் வாழ்க்கை அவளுக்குக் கசப்பா முடிஞ்சிருச்சு. இப்ப 'இனிமேல் கல்யாணமே வேண்டாம், நான் தனியாவே வாழ்ந்துக்கிறேன்'னு பிடிவாதம் பிடிக்கிறா. அவளுக்கு என்ன குறை? படிச்சிருக்கா, தைரியமான பொண்ணுதான்.
ஆனா… அவர் பேசும்போதே தொண்டை அடைத்தது.
தொண்டையை அடைக்கும் துயரத்துடன், தழுதழுத்த குரலில் அவர் பேசத் தொடங்கியபோதே, அந்தத் தாயின் உள்ளம் எவ்வளவு காயப்பட்டிருக்கிறது என்பது மறுமுனையில் என்னால் உணரமுடிந்தது.
ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு தொடர்ந்தார்:
"பெத்த மனம் பிதற்றுதுங்க ஐயா… நாளைக்கு நாங்க இல்லாதப்போ அவ கதி என்ன? சுத்தி இருக்குறவங்க காட்டுற அந்தப் போலியான பரிதாபம், வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சுற மாதிரி இருக்கு. அவ விருப்பம்னு விட்டுடலாம் தான்… ஆனா காலத்துக்கும் அவளைத் தனி மரமா விட்டுட்டு, பெத்தவங்களால நிம்மதியா உயிர் விட முடியுமா?"
அவளோட வாழ்க்கை இப்படி ஒரு தனிமரமாவே நின்னு போயிடுமா ஐயா? இல்ல… மறுபடியும் ஒரு கணவன், குழந்தைன்னு அவளுக்கொரு அழகான கூடு அமையுமா? அந்த சந்தோஷத்தை மறுபடியும் அவ கண்ணுல பார்க்குற பாக்கியம் இந்த பெத்தவங்களுக்குக் கிடைக்குமா? என் மகளோட ஜாதகத்தை பார்த்து நல்ல பதில் சொல்லுங்க ஐயா.
அந்தத் தாயின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு தவிப்பு இருந்தது. "தனியா இருந்துடுவேன்" என்று சொல்லும் மகளின் வைராக்கியம் ஒருபுறம், "காலம் முழுதும் அவளால் இதைச் சமாளிக்க முடியுமா?" என்ற தாயின் எதார்த்தமான பயம் மறுபுறம்.
அவர்களிடமிருந்து ஜாதகக் குறிப்புகளைப் பெற்று, உயர்கணித KP சார ஜோதிட முறையில் (Advanced KP Stellar Astrology) கிரகங்களின் நிலைகளை நுணுக்கமாகக் கணித்து, பலன்களை ஆராயத் தொடங்கினேன். ஜாதகத்தை ஆழமாகப் பார்த்தபோது, மூன்று முக்கியமான காரணங்கள் என் கண்ணில் பளிச்சென்று பட்டன:
செவ்வாயின் பலவீனம்: பெண்ணுக்குத் திருமண காரகனான செவ்வாய் பகவான், 2 மற்றும் 8 ஆகிய பாவங்களின் உப அதிபதிகளின் நட்சத்திரத்தில் அமர்ந்து, முதல் திருமண வாழ்வில் போராட்டங்களை ஏற்படுத்தியிருந்தார்.
தசாபுத்தியின் நெருக்கடி: திருமணம் நடைபெற்ற காலத்தில், சனி தசை 2, 5, 8, 11 ஆகிய பாவங்களைக் காட்டியது. அதோடு ராகு புத்தி 6 மற்றும் 12-ம் பாவங்களைத் தொடர்பு கொண்டு, புத்தியின் ஆரம்பத்திலேயே திருமணத்தை நடத்தி, பின் பிரிவையும் தந்துவிட்டது.
ஏழாம் பாவத் தொடர்பு: களத்திர ஸ்தானமான 7-ம் பாவம், பாக்கிய ஸ்தானமான 9-ம் பாவத்தோடு ஜனன ஜாதகத்திலேயே தொடர்பு பெற்றிருந்தது, இது ஒரு மாறுதலான வாழ்வையே (Different destiny) முன்கூட்டியே குறித்திருந்தது.
ஜனன ஜாதகம் எனும் 'விதி' (Promise of Chart) ஒருபுறம் இருக்க, தசாபுத்தி எனும் 'மதி' (Time Factor) சாதகமற்ற நேரத்தில் குறுக்கிட்டதால், காலம் இவர்கள் வாழ்க்கையில் விளையாடிவிட்டது என்பதை உணர்ந்தேன்.
அம்மா, உங்கள் மகளின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. முந்தைய திருமண நிகழ்ந்த காலகட்டம், கிரக நிலைகளின்படி முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு 'சோதனைக் காலம்'. அந்தத் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவின் விளைவைத்தான் உங்கள் மகள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இது அவர் ஜாதகத்தின் குறையல்ல, காலத்தின் கோலம் மட்டுமே.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. நடப்பு குரு புக்தி (Current Jupiter Period) அவருக்கு மிகவும் சாதகமாக உள்ளது. தாராளமாக நீங்கள் மறுமணத்திற்கான முயற்சிகளை இப்போதே தொடங்கலாம். விதியை மதியால் வெல்லும் காலம் இது!
உங்கள் பெண்ணின் ஜாதகப்படி, அவருக்கு இல்லற சுகம் மறுக்கப்படவில்லை. அன்பு காட்டும் கணவர், அள்ளிக் கொஞ்சும் குழந்தைகள் என ஒரு நிறைவான குடும்ப வாழ்வை வாழ அவருக்கு முழுமையான கொடுப்பினை இருக்கிறது. விதி எதையும் தட்டிப் பறிக்கவில்லை, காலம் சற்று தாமதப்படுத்தியிருக்கிறது அவ்வளவுதான். கவலைப்படாதீர்கள், நல்லதே நடக்கும்!
உங்கள் மகள் இப்போது ஒரு விதமான உளவியல் அழுத்தத்தில் இருப்பாங்க. முதல் திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், 'ஆண்கள் எல்லோருமே இப்படித்தான்' என்ற ஒரு பிம்பத்தை அவங்க மனதில் பதித்திருக்கலாம். ஆனால், உலகம் அவ்வளவு மோசமானது அல்ல.
இது வெறும் இரண்டாவது திருமணம் அல்ல… இது அவங்களது கசப்பான கடந்த காலத்திலிருந்து கிடைக்கும் ஒரு உன்னதமான 'மறுபிறவி'!
“விழுந்த இடத்திலேயே அமர்ந்து அழுதால், பட்ட காயம் ஆறாது அம்மா… அந்த இடத்தை விட்டு எழுந்து நடக்கத் தொடங்கினால் தான், வாழ்க்கை ஒரு புதிய நந்தவனத்தை நோக்கி நகரத் தொடங்கும். உங்கள் மகள் அந்த நந்தவனத்தில் மீண்டும் பூத்துக் குலுங்கப் போகிறாள், பாருங்கள்!”
முதல் கேள்வி: 'மகளே… தந்தை எனும் நிழல் எப்போதும் உனக்குக் குடையாக இருக்க முடியாது. காலம் ஒருநாள் எங்களைப் பிரிக்கும்போது, இந்த உலகில் நீ தனி மரமாக நிற்பதை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? உன் தாய் தந்தையின் காலத்திற்குப் பிறகு, உனக்கென ஒரு சொந்தமான 'கூடு' வேண்டாமா?'
இரண்டாவது கேள்வி: 'உன் தந்தை எவ்வளவு உன்னதமான மனிதர்? உன்னைத் தன் உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் ஒரு தந்தை உனக்கு இருக்கும்போது, அதே போன்ற ஒரு அன்பான துணை உனக்குக் கிடைக்காது என்று ஏன் முடிவெடுக்கிறாய்? '
எங்கள் நீண்ட உரையாடலுக்குப் பிறகு, அந்தத் தாயின் குரலில் ஒரு மெல்லிய நம்பிக்கை துளிர்விடுவதை என்னால் உணர முடிந்தது. கலக்கத்துடன் வந்தவர், இப்போது ஒரு தெளிவான உறுதியோடு விடைபெற்றுச் சென்றார்.
காலம் உருண்டோடியது… சரியாக ஆறு மாதங்கள் கழித்து, ஒரு நாள் காலை என் அலைபேசி ஒலித்தது. மறுமுனையில் அந்த அம்மா ! ஆனால், அன்று அவர் குரலில் நடுக்கமில்லை, மாறாக ஒரு பேரானந்தம் இருந்தது.
'ஐயா… நீங்க சொன்ன மாதிரியே என் பொண்ணு மனசு மாறிட்டா! அவளுக்குப் பிடிச்ச மாதிரியே, எங்க சொந்தத்திலேயே ஒரு நல்ல வரன் அமைஞ்சிருச்சுங்க. அடுத்த மாசம் கல்யாணம்… நீங்க கொடுத்த அந்த நம்பிக்கைதான் என் மகளோட வாழ்க்கையை மீட்டுத் தந்திருக்கு!' என்று சொல்லும்போதே அவர் குரல் தழுதழுத்தது.
ஜோதிடம் என்பது வெறும் கட்டங்களைப் பார்ப்பது மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல் வழிகாட்டி. பதிவில் குறிப்பிட்டுள்ள பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த வசந்தம், உங்கள் வீட்டிலும் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களின் வாழ்விலும் வீசக்கூடும்.
👉 உங்கள் கருத்து என்ன? இந்தச் சூழல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் பகிருங்கள்.
👉 பகிர்ந்து உதவுங்கள்: உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள் அல்லது உறவினர்களில் யாரேனும் இது போன்ற மனப்போராட்டத்தில் இருந்தால், அவர்களுக்கு இந்தக் கட்டுரையைப் பகிருங்கள். ஒரு சிறு பகிர்தல், ஒருவரின் இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றி, மீண்டும் ஒரு வசந்த காலத்தைத் தொடங்கி வைக்கக் கூடும்.
உங்கள் வாழ்வின் சிக்கல்களுக்கு முறையான ஜோதிட வழிகாட்டல் தேவையெனில், எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். விதியை மதியால் வெல்வோம்!
How astrology works as a healing art rather than just reading birth charts. It shares a real‑life Tamil story of a mother whose daughter, after a painful first marriage, refuses to remarry and wants to live alone. The mother feels helpless and scared for her daughter’s future. Using Advanced KP Stellar Astrology, the astrologer studies the girl’s chart and finds that her first marriage failed not because of bad destiny, but because of weak Mars, a difficult Saturn–Rahu period, and wrong timing in astrology marriage timing prediction.
The astrologer explains that the daughter’s destiny still includes a happy second marriage, loving husband, and children; only the timing was delayed. He advises the mother to gently guide her daughter emotionally instead of forcing advice, helping her see that one bad experience does not mean “all men are bad.” Simple remedies and right timing are suggested. Six months later, the girl’s mindset changes, a suitable match is found, and the second wedding is fixed—showing a powerful astrology life‑transformation success story.
For users, this script highlights how astrology counseling can reduce anxiety, heal emotional wounds, rebuild hope, and guide better decisions about relationships and timing instead of leaving them to pure luck.






